நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நியூயார்க்கில் அருண் ஜேட்லிக்கு அறுவை சிகிச்சை.. 2 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை

Google Oneindia Tamil News

நியூயார்க்: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளதால் அவர் இரு வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மத்திய அமைச்சராக உள்ளவர் அருண் ஜேட்லி. இவருக்கு உடலில் கட்டி போல் ஒரு திசு வீக்கமாக இருந்தது. இதையடுத்து அவர் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Arun Jaitley undergoes surgery in NewYork, to take two-week rest

அந்த வீக்கத்திலிருந்து திசுக்கள் எடுக்கப்பட்டு புற்றுநோய் கட்டியா என கண்டறியும் சோதனை கடந்த 13-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து அந்த கட்டி அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்டது.

66 வயதான அருண் ஜேட்லி அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் அவர் இரு வாரங்களுக்கு ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பிப்ரவரி 1ம் தேதி மோடி அரசு இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளது. அருண் ஜேட்லி ஓய்வில் இருப்பதால் நிதித்துறை பொறுப்பு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் வழங்கப்பட்டுள்ளது. அவரே பட்ஜெட்டையும் தாக்கல் செய்யவுள்ளார்.

English summary
Union Finance Minister Arun Jaitley has undergone soft tissue cancer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X