நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீட்டை பெருக்கச் சொன்ன பாட்டி.. துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 11 வயது சிறுவன்.. அவனும் தற்கொலை!

அமெரிக்காவில் 11 வயது சிறுவன் ஒருவன் தனது பாட்டியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் 11 வயது சிறுவன் ஒருவன் தனது பாட்டியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சம்பவம் அமெரிக்காவின் அரிசோனாவில் நடந்து இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த 11 வயது சிறுவன் தனது 65 வயது பாட்டியை நெற்றியில் சுட்டு கொலை செய்துள்ளான்.

வீட்டை சுத்தம் செய்யும்படி பாட்டி கூறியதால் இந்த கொலையை அந்த சிறுவன் செய்ததாக கூறப்படுகிறது. heading

சிறுவன் சுட்டான்

சிறுவன் சுட்டான்

அந்த சிறுவனின் பெயர் மற்றும் விவரங்கள் வெளியாகவில்லை. தனது பாட்டியை அந்த சிறுவன் சுடும் முன் திட்டியதாக கூறப்படுகிறது. வீட்டை சுத்தம் செய்ய பாட்டி கூறியதால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

உதவி செய்ய சென்றார்

உதவி செய்ய சென்றார்

துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் அந்த மூதாட்டியின் கணவர் வேகமாக வீட்டிற்குள் சென்று இருக்கிறார். அங்கு கிடந்த தனது மனைவியை பார்த்த உடன் அலறி அடித்துக் கொண்டு உதவ சென்றுள்ளார். தனது மனைவியை தூக்கிக்கொண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக முயன்றுள்ளார்.

தன்னையும் சுட்டுக் கொண்டான்

தன்னையும் சுட்டுக் கொண்டான்

ஆனால் அதற்குள் இன்னொரு துப்பாக்கி சத்தமும் கேட்டுள்ளது. உடனே தனது மனைவியை கீழே வைத்துவிட்டு அந்த முதியவர் தனது பேரனின் அறைக்கு சென்றுள்ளார். அங்கு அந்த சிறுவனும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு பலியாகி உள்ளான்.

நேரில் பார்த்தார்

நேரில் பார்த்தார்

அந்த சிறுவனுக்கு அடிக்கடி மனநிலையில் பிரச்சனை வரும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் இப்போதெல்லாம் துப்பாக்கி கலாச்சாரம் கட்டுப்படுத்த முடியாத நிலையை அடைந்துள்ளது. அந்த வகையில் இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
Asked to Clean Room, a 11-Year-Old Boy killed his Granny in USA and killed himself too.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X