நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏப்ரல் 29ம் தேதி அதிகாலை 4.56மணி.. பயப்படத் தேவையில்லை... மக்கள் வயிற்றில் பாலை வார்த்த நாசா!

ஏப்ரல் மாதத்தில் பூமிக்கு அருகில் வரும் சிறுகோளால் ஆபத்தில்லை என நாசா தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: வரும் ஏப்ரல் மாதம் பூமிக்கு அருகில் வரும் ராட்சத சிறுகோளால் ஆபத்து ஏதும் இல்லை என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

Recommended Video

    ஏப்ரல் 29ம் தேதி சிறுகோள்பூமியை தாக்குமா ?

    விண்கற்கள் முதல் சிறு கோள்கள் வரை பல பூமியின் பாதையில் வந்துகொண்டும், போய்க் கொண்டும் தான் இருக்கின்றன. பெரும்பாலானவை அளவில் சிறியது என்பதால் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தவுடன் கருகி விடுகிறது அல்லது சிதறி சிறுதுகள்களாக காணாமல் போய் விடுகிறது.

    ஒருவேளை அவை சுமார் 1 கி.மீ. அல்லது அதற்கும் அதிகமான விட்டம் கொண்டிருப்பின் அதனால் பூமியில் சில விளைவுகள் ஏற்படலாம்.

    ஆராய்ச்சி மையங்கள்

    ஆராய்ச்சி மையங்கள்

    எனவே தான் விண்வெளியில் மிதந்துகொண்டிருக்கும் விண்கற்கள் மற்றும் சிறுகோள்களை, விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் மிக கூர்மையாக கண்காணித்து அது பற்றிய தகவல்களை சேகரித்து வெளியிட்டு வருகின்றன.

    ராட்சத சிறுகோள்

    ராட்சத சிறுகோள்

    அந்தவகையில், அடுத்த மாதம் ராட்சத சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வருவதாக கடந்த ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்திருந்தது. 13,500 அடி சுற்றளவு கொண்ட அந்த சிறுகோளிற்கு 52768 (1998 OR2) என விஞ்ஞானிகள் பெயரிட்டனர்.

    பழைய சிறுகோள்தான்

    பழைய சிறுகோள்தான்

    இந்த சிறுகோள் பூமிக்கு ஒன்றும் புதிதல்ல. இது கடந்த 1998ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் தான் அந்த சிறுகோள் (1998 OR2) என அழைக்கப்படுகிறது. 1.1 முதல் 2.5 மைல் அகலம் வரை இருக்கும் அது, பூமியில் இருந்து 3,908,791 மைல் தூரத்தில், மணிக்கு 19,461 மைல் வேகத்தில் நகரும் தன்மை கொண்டது.

    சந்தேகம்

    சந்தேகம்

    அடுத்த மாதம், அதாவது வரும் ஏப்ரல் மாதம் 29ம் தேதி 4.56 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த சிறுகோளானது பூமியை கடந்து செல்ல இருக்கிறது. அப்போது அது பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் இருப்பதாக முன்னர் சந்தேகிக்கப்பட்டது. ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால், நிச்சயம் அது உலகளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அபாயம் இருந்தது.

    ஆபத்தில்லை

    ஆபத்தில்லை

    ஆனால் தற்போது அதற்கான வாய்ப்புகள் இல்லை என நாசா விஞ்ஞானிகள் தெளிவு படுத்தியுள்ளனர். 1998 OR2 சிறுகோளால் பூமிக்கு ஆபத்து எதுவும் இல்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த 1998 ஓஆர்2 சிறுகோளானது அளவில் மிகப் பெரியதாகக் கருதப்பட்டாலும், இதுவரை பூமிக்கு அருகில் வந்த சிறுகோள்களில் இதுவே பெரியது எனக் கூற முடியாது.

    3122 புளோரன்ஸ்

    3122 புளோரன்ஸ்

    ஏனென்றால் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி அன்று 3122 புளோரன்ஸ் (1981 ஈடி3) என்ற சிறுகோளிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக பூமி தப்பியது என்றே சொல்ல வேண்டும். இந்த சிறுகோளானது மீண்டும் வரும் 2057ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி பூமியைக் கடந்து செல்ல இருக்கிறது. இது 2.5 முதல் 5.5 மைல் வரை அகலம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    On April 29, an asteroid estimated to be between 1.1 and 2.5 miles wide will fly by Earth. But it's not expected to collide with our planet, clarifies NASA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X