நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீனாவின் அஸ்திவாரமே காலியாகும்.. இந்தியாவிற்காக "ஜோ பிடன்" இறக்கிய பிளான்.. டிரம்பிற்கும் சிக்கல்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க இந்தியர்களின் வாக்குகளை வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் கவரும் வகையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் மிக முக்கியமான திட்டம் ஒன்றில் இருக்கிறார். சீனா, மற்றும் அதிபர் டிரம்ப் இருவருக்கும் ஒரே நேரத்தில் செக் வைக்கும் வகையில் திட்டம் ஒன்றை ஜோ பிடன் களமிறக்கி உள்ளார்.

அமெரிக்கா தற்போது அதிபர் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகிக் கொண்டு இருக்கிறது. அங்கு குடியரசு கட்சி சார்பாக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் இன்னொரு பக்கம் முன்னாள் துணை அதிபர் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இதுவரை வெளியாகி இருக்கும் கருத்து கணிப்புகள் அனைத்திலும் ஜோ பிடன் வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள். நாளுக்கு நாள் இவருக்கான ஆதரவு பெரிதாக்கிக் கொண்டே செல்கிறது.

என்ன நிலைமை

என்ன நிலைமை

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகளை கவர்வது என்பது மிகவும் முக்கியம் ஆகும். டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் லட்சகணக்கான இந்தியர்களின் வாக்குகளை பெறுவது மிகவும் முக்கியமான விஷயம் ஆகும். இதனால்தான் டிரம்ப் பிரதமர் மோடி மீதும், இந்தியா மீது அதிக நட்புடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டிரம்பை மிஞ்சும் முடிவு ஒன்றை எதிர்க்கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் எடுத்து இருக்கிறார்.

பிடன் முடிவு

பிடன் முடிவு

அதன்படி இந்தியர்களின் வாக்குகளை கவரும் வகையில் இந்தியாவிற்கு மிகப்பெரிய உதவி ஒன்றை பிடன் செய்ய இருக்கிறார். இதற்கான ஆலோசனையில் அவர் ஈடுபட உள்ளார் என்கிறார்கள். அதன்படி ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடத்தை கொடுக்க பிடன் உதவி செய்ய போகிறார் என்று கூறுகிறார்கள். ஐநா பாதுகாப்பு கவுன்சலில் உறுப்பினர்களை தேர்வு செய்ய கடந்த மாதம் வாக்கெடுப்பு நடந்தது. இந்த தேர்தலில் இந்தியா வெற்றிபெற்று தற்காலிக உறுப்பினராக ஆகியுள்ளது. இந்தியா 8வது முறையாக இதில் உறுப்பினர் ஆகிறது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இது இந்தியாவிற்கு ராஜாங்க ரீதியான வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அடுத்த இரண்டு வருடங்கள் இந்தியா இதில் உறுப்பினராக இருக்கும். ஆனால் இந்தியா இதில் நிரந்தர உறுப்பினர் இல்லை. இந்தியா இதில் நிரந்தர உறுப்பினர் ஆவதை சீனா தடுத்து வருகிறது. தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்தியாவிற்கு எதிராக சீனா இந்த செயலை செய்து வருகிறது.

பிடன் உள்ளே வந்தார்

பிடன் உள்ளே வந்தார்

இந்த நிலையில் சீனாவிற்கு எதிராக செயல்பட்டு, இந்தியாவிற்கு இந்த குழுவில் பிடன் நிரந்தர உறுப்பினர் பொறுப்பை பெற்றுத்தருவார் என்று கூறுகிறார்கள். பிடன் அதிபர் ஆனால், கண்டிப்பாக இந்தியாவிற்காக அவர் காய்களை நகர்த்தி இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் பதவியை பெற்றுத்தருவார் என்று கூறுகிறார்கள். இந்தியர்களின் வாக்குகளை கவரும் வகையில் பிடன் இந்த திட்டத்தை கையில் எடுத்து இருப்பதாக கூறுகிறார்கள்.

என்ன பிரச்சாரம்

என்ன பிரச்சாரம்

ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் குழுவில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, யூகே , அமெரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளது. மற்ற 10 நாடுகள் தற்காலிக உறுப்பினராக 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படும். இந்த நிலையில் பிரான்ஸ், ரஷ்யா, யூகே ஆகிய நாடுகளின் ஆதரவை பெற்று இந்த குழுவில் இந்தியாவை தற்காலிக உறுப்பினராக சேர்க்க பிடன் நினைக்கிறார் என்று கூறுகிறார்கள்.

இன்னும் இல்லை

இன்னும் இல்லை

இது குறித்து இன்னும் பிடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. ஆனால் விரைவில் இது குறித்து அவர் பேசுவார் என்று கூறுகிறார்கள். டிரம்பிற்கு அமெரிக்க இந்தியர்கள் இடையே இருக்கும் ஆதரவை காலி செய்யும் வகையில் பிடன் இந்த முடிவை எடுத்துள்ளார். அமெரிக்க இந்தியர்கள் பலர் டிரம்பிற்கு ஆதரவு அளிக்கிறார்கள். அதேபோல் டிரம்பில் ஹவுடி மோடி நிகழ்ச்சி டெக்சாஸ் ஹவுஸ்டனில் பெரிய ஹிட் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

சீனாவிற்கும் செக்

சீனாவிற்கும் செக்

இன்னொரு பக்கம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலை சீனா மலைபோல நம்பி இருக்கிறது. இதில் இந்தியா வந்தால் அது சீனாவிற்கு சிக்கலாகும். இதனால் இந்தியாவை இதில் இணைக்க பிடன் திட்டமிடுகிறார். இதன் மூலம் ஆசியாவில் சீனாவின் ஆளுமையை காலி செய்யலாம், இன்னொரு பக்கம் டிரம்பிற்கும் செக் வைக்கலாம் என்று பிடன் முடிவு செய்துள்ளார். அதாவது இந்தியா என்ற ஒரே கல்லில் சீனா, டிரம்ப் இரண்டுக்கும் பிடன் செக் வைக்க போகிறார் என்கிறார்கள்.

English summary
Biden planning to help India to get permanent seat UNSC to lure Indian votes in the Presidential elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X