நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மொத்த திட்டமும் காலி.. பதற்றத்தில் உளறிய அதிபர்.. சென்னை பெண் மூலம் டிரம்பிற்கு பிடன் செக்-மேட்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தனது துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை தேர்வு செய்து இருப்பதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளது.

Recommended Video

    Kamala Harris-க்கு Trump பயப்பட காரணங்கள் | Oneindia Tamil

    அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளர் என்பவர் வெறும் சாதாரண வேட்பாளர் இல்லை. அதிபர் தேர்தலின் முடிவுகளை மொத்தமாக மாற்றும் திறமை கொண்டவர். ஒரு அதிபர் வேட்பாளர் தேர்வு செய்யும் துணை அதிபர் வேட்பாளரை வைத்தே அவரின் வெற்றியை கணித்து விடலாம்.

    இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தனது துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை தேர்வு செய்துள்ளார். அமெரிக்கா முழுக்க இது தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. தேர்தல் முடிவுகள் இதனால் மாறும் என்கிறார்கள். எல்லாம் போக அதிபர் டிரம்பும் இதனால் செம விரக்தியில் இருக்கிறார்.

    தமிழ் வம்சாவளி.. சென்னை பெண்.. அமெரிக்க துணைஅதிபர் போட்டிக்கு கமலாவை தேர்வு செய்த பிடன்.. யார் இவர்?தமிழ் வம்சாவளி.. சென்னை பெண்.. அமெரிக்க துணைஅதிபர் போட்டிக்கு கமலாவை தேர்வு செய்த பிடன்.. யார் இவர்?

    ஏன் விரக்தி

    ஏன் விரக்தி

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தனது துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை தேர்வு செய்து இருப்பதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளது. அதன்படி, முதலாவதாக கமலா ஹாரிஸ் மூலம் இந்தியர்களின் வாக்குகள் எளிதாக தனக்கு கிடைக்கும் என்று பிடன் நம்புகிறார். கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் சென்னையை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் இந்தியர்கள் ஆதரவு தனக்கு கிடைக்கும் என்று நினைக்கிறார் பிடன்.

    இந்தியா எப்படி

    இந்தியா எப்படி

    இதற்கு காரணம் இல்லாமல் இல்லை, அமெரிக்காவில் மிகப்பெரிய மாகாணம் டெக்சாஸ். இந்த மாகாணத்தில் வெற்றிபெறாமல் அதிபர் தேர்தலில் வெற்றிபெறுவது மிகவும் கடினம். இங்கு வெற்றியை தோல்வியை தீர்மானிப்பது அங்கு குடியேறிய இந்தியர்கள்தான். இங்கு வாக்கு உரிமையுடன் வசிக்கும் இந்தியர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை பொறுத்தே தேர்தல் முடிவுகள் மாறும்.

    பிரதமர் மோடி டிரம்ப்

    பிரதமர் மோடி டிரம்ப்

    இதனால்தான் இந்தியர்களை கவரும் வகையில் ஹவுஸ்டனில் பிரதமர் மோடியை வைத்து டிரம்ப் தனது அதிகாரபூர்வமற்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இந்த ஹவுடி மோடி நிகழ்ச்சி டிரம்பிற்கு பெரிய வரவேற்பை இந்தியர்கள் மத்தியில் பெற்று தந்தது. ஆனால் அங்குதான் டிரம்பிற்கு தற்போது ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் செக் வைத்துள்ளார். இந்தியர் ஒருவரை துணை அதிபர் வேட்பாளராக பிடன் அறிவித்து டிரம்பிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

    யார் வந்தார்

    யார் வந்தார்

    பெர்னி சான்டர்சை துணை அதிபர் வேட்பாளராக பிடன் அறிவிப்பார் என்று டிரம்ப் கனவு கண்டு கொண்டு இருந்தார். ஆனால் டிரம்பிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கமலா ஹாரிஸை பிடன் அறிவித்துள்ளார். இதனால் இந்தியர்கள் வாக்கு, டெக்ஸாஸில் இருக்கும் மக்களின் வாக்கு பிடன் பக்கம் திரும்ப வாய்ப்புள்ளது. அதேபோல் கமலா, கலிபோர்னியா செனட்டர் என்பதால், கலிபோர்னியா வாக்கும் பிடன் பக்கம் செல்லும் என்கிறார்கள்.

    கறுப்பின பெண்

    கறுப்பின பெண்

    இதெல்லாம் போக மிக முக்கியமான விஷயம் கமலா ஹாரிஸ் ஒரு கறுப்பின பெண் என்றும் தன்னை அடையாள படுத்துகிறார். இவரின் தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். இதனால் தன்னை கருப்பின பெண்ணாகவும் இவர் அடையாளப்படுத்துகிறார். ஆகவே அமெரிக்காவில் கறுப்பின மக்களின் பிரச்சனை உச்சத்தில் இருக்கும் போது, கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பாக துணை வேட்பாளராக போட்டியிடுவது தேர்தல் முடிவுகளை மொத்தமாக மாற்றும்.

    செம

    செம

    இதெல்லாம் போக வெளிநாட்டு குடியேறிகள் மீது கமலா ஹாரிஸ் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார். ஹிஸ்பானிக் மக்கள் தொடங்கி மெக்சிகன் வரை எல்லோரின் மீதும் கமலா அக்கறையாக இருக்கிறார். ஆனால இவர்கள் டிரம்ப் நேரடியாக வெறுக்கிறார். இதனால் கமலா ஹாரிஸ் மூலம் பிடனுக்கு அங்கு குடியேறிகளின் வாக்கு அதிகம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

    செம கலவை

    செம கலவை

    கமலா ஹாரிஸ்தான் அங்கு துணை அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் முதல் ஆசிய -இந்திய - ஆப்ரிக்க - கருப்பின பெண் வேட்பாளர். இப்படி மொத்தமாக அமெரிக்க மைனாரிட்டி குழுக்களின் பிரநிதிதியாக கமலா ஹாரிஸ் வந்துள்ளார். டிரம்பின் குடியரசு கட்சி சல்லடை போட்டு தேடினாலும் இப்படி ஒரு வேட்பாளர் கிடைக்க மாட்டார். இதனால் இந்தியர்களின் வாக்கு, கறுப்பின மக்கள் வாக்கு, பெண்கள் வாக்கு , குடியேறிகளின் வாக்கு எல்லாம் கமலாவுக்கு கிடைக்கும் என்கிறார்கள்.

    வசமாக சிக்கினார்

    வசமாக சிக்கினார்

    இங்குதான் பிடனிடம் டிரம்ப் வசமாக சிக்கி இருக்கிறார். கமலா ஹாரிஸ் மூலம் பிடன் மிக எளிதாக வாக்குகளை அள்ள வாய்ப்புள்ளது. கமலா ஹாரிஸ் வருகை காரணமாக அதிபர் டிரம்பு செம விரக்தியில் இருக்கிறார். ஏனென்றால் கமலா - டிரம்ப் இருவருக்கும் எப்போதும் ஆகாது. ஜனநாயக கட்சியின் பிரைமரி தேர்தலில் கமலா போட்டியிட்ட போதே டிரம்ப் அவரை குறி வைத்து விமர்சனங்களை வைத்தார் .. இப்போது துணை அதிபர் வேட்பாளர் என்றால் கேட்கவா வேண்டும்?

    சென்னை பெண்

    சென்னை பெண்

    சென்னை பெண் ஒருவர் மூலம் டிரம்பிற்கு வசமாக பிடன் வலை விரித்துள்ளார். இதனால்தான் என்னவோ டிரம்பே இன்று செய்தியாளர் சந்திப்பில் தனது அதிர்ச்சி வெளிப்படையாக கட்டிக்கொண்டதோடு கொஞ்சமும் உளறியும் கொட்டினார். அவரா வேட்பாளர்.. ஆச்சர்யமாக இருக்கிறது.. அவர் மிகவும் மோசமானவர் .. அவரை ஏன் பிடன் தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. பிடனுக்குதான் இதனால் சிக்கல் என்று டிரம்ப் கூறினார். கடும் விரக்தியில் டிரம்ப் இப்படி பேசுகிறார் என்றும் கூறுகிறார்கள்.

    English summary
    Joe Biden's VP card: Kamala Harris may change the course of President Election in the US.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X