நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ் வம்சாவளி.. சென்னை பெண்.. அமெரிக்க துணைஅதிபர் போட்டிக்கு கமலாவை தேர்வு செய்த பிடன்.. யார் இவர்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தனது துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை தேர்வு செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தனது துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை தேர்வு செய்துள்ளார்.

Recommended Video

    Kamala Harris-க்கு Trump பயப்பட காரணங்கள் | Oneindia Tamil

    அமெரிக்கா தற்போது அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறது. வரும் நவம்பர் முதல் வாரத்தில் அங்கு அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.குடியரசு கட்சி காரணமாக அங்கு அதிபர் டிரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.

    ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இதனால் அதிபர் தேர்தல் மிக அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நான் அமெரிக்க அதிபரானால் இந்திய தமிழ் வம்சாவளி கமலா ஹாரீஸ் துணை அதிபர் வேட்பாளர்: ஜோ பிடன் அதிரடிநான் அமெரிக்க அதிபரானால் இந்திய தமிழ் வம்சாவளி கமலா ஹாரீஸ் துணை அதிபர் வேட்பாளர்: ஜோ பிடன் அதிரடி

    தேர்வு செய்தார்

    தேர்வு செய்தார்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தனது துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை தேர்வு செய்துள்ளார். பெரும் எதிரிபார்ப்பிற்கு இடையே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பெர்னி சான்டர்ஸ், துளசி காப்பார்ட் ஆகியோர் விபி ரேஸில் இருந்த நிலையில் கமலா தேர்வாகி உள்ளார்.

    ஏன் இல்லை

    ஏன் இல்லை

    பிடன் தனது துணை அதிபர் வேட்பாளராக ஜனநாயக கட்சி வேட்பாளர் பெர்னி சான்டர்சை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் ஜனநாயக கட்சிக்குள் அதிபர் தேர்தல் வேட்பாளர் தேர்வு போட்டிக்காக நடந்த பிரைமரி தேர்தலில் பிடனுக்கு பெர்னி சான்டர்ஸ்தான் தீவிரமான போட்டியாளராக இருந்தார். இதனால் பெர்னி துணை அதிபர் வேட்பாளராக வந்தால், அது பிடனின் வெற்றியை எளிதாக்கும் என்று கூறப்பட்டது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் அதிரடி திருப்பமாக ஜோ பிடன் தனது துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை தேர்வு செய்துள்ளார். சில மணி நேரங்களுக்கு முன் இந்த அறிவிப்பை பிடன் வெளியிட்டார். தற்போது கமலா ஹாரிஸ் கலிபோர்னியாவின் செனட்டராக இருக்கிறார். இவர் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட முயன்று தோல்வி அடைந்தார். இந்த நிலையில் தற்போது துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    என்ன பணிகள்

    என்ன பணிகள்

    கமலா தேவி ஹாரிஸ், அமெரிக்காவில் துணை அட்டர்னி ஜென்ரல், அட்டர்னி ஜென்ரல் பதவிகளில் வகித்து இருக்கிறார். ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் 1990ல் இருந்தே தீவிர அரசியலில் இருக்கிறார். கடந்த 2016 செனட்டர் தேர்தலில் வெற்றிபெற்றார். கலிபோர்னியாவின் செனட்டராக தற்போது இவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் அதிபராக எதிர்காலத்தில் இவர் வர அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    யார் இவர்

    யார் இவர்

    கமலா தேவி ஹாரிஸ் சென்னையை சேர்ந்தவர். சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் தனது பால்ய நாட்களை கழித்து இருக்கிறார். இவர் தாய் தமிழ் பெண். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். இவர்கள் தற்போது கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்கள். அடிக்கடி இவர் தமிழகம் வரும் வழக்கத்தை கொண்டுள்ளார். கருப்பின பெண், இந்திய வம்சம், குடியேறிகளின் பிரச்சனை தெரிந்தவர் என்று இவருக்கு நிறைய ப்ளஸ் பாய்ண்ட் இருக்கிறது. இவர்தான் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் முதல் இந்தியர், முதல் கறுப்பின பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

    விலகினார்

    விலகினார்

    முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜோ பிடன், கமலா ஹாரிஸ், இந்திய - அமெரிக்க வம்சாவளி பெண் துளசி கப்பார்ட், பெர்னி சான்டர்ஸ் ஆகியோர் டெமாக்ரடிக் கட்சி சார்பாக போட்டியிட்டனர் . கட்சியின் சார்பாக அதிபர் வேட்பாளராக யார் போட்டியிட போவது என்று கடந்த வருடம் இவர்களுக்கு இடையே பிரைமரி தேர்தல் நடந்தது. இதில் கமலா ஹாரிஸ் தொடக்கத்தில் நம்பிக்கை அளித்தார்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் திடீரென ஜனநாயக கட்சியின் பிரைமரி போட்டியிலிருந்து கமலா ஹாரிஸ் விலகினார். பிரச்சாரம் செய்ய போதிய பணம் இல்லை என்று கூறி அவர் பதவி விலகி உள்ளார். எனக்கு தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லை. போதுமான பணம் இல்லாமல் நிறைய பிரச்சனை வந்தது. நான் கோடீஸ்வரி கிடையாது, என்று கூறி கமலா ஹாரிஸ் விலகி இருந்தார் . தற்போது அவரை தேடி துணை அதிபர் பதவிக்கான வாய்ப்பு பிடன் மூலம் வந்துள்ளது.

    English summary
    Biden's VP card: The black women from Tamilnadu, Who is Kamala Harris? What is her backgroud?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X