நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சரமாரி.. சுந்தர் பிச்சை, ஜுக்கர்பெர்கிடம் நீதிக்குழு மாறி மாறி கேள்வி.. பரபரத்த "பிக்-டெக்" விசாரணை!

Google Oneindia Tamil News

நியூயார்க்: பேஸ்புக், அமேசான், ஆப்பிள், கூகுள் நிறுவனங்களுக்கு எதிராக வைக்கப்பட்ட ஆண்டி டிரஸ்ட் புகார்கள் தொடர்பாக இன்று அமெரிக்காவின் காங்கிரஸ் கமிட்டி சரமாரி விசாரணை நடத்தியது.

டெக் உலகில் ஆதிக்கம் செலுத்துவதாகவும், monopoly எனப்படும் தனிப்பட்ட ராஜாங்கம் நடத்துவதாகவும், பிற சிறிய நிறுவனங்களை வளர விடமால்கட்டுப்படுத்துவதாகவும் எழுத்த புகார்கள் காரணமாக பேஸ்புக், அமேசான், ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் மீது ஆண்டி டிரஸ்ட் (anti trust) குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது போட்டி நிறுவனங்களை வளரவிடாமல் இந்த பெரிய நிறுவனங்கள் செயல்படுகிறது என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டி டிரஸ்ட் சட்டத்தின் கீழ் இந்த விசாரணை நடந்தது. இது தொடர்பாக அமெரிக்காவின் நீதித்துறையான காங்கிரஸ் கமிட்டி முன் இன்று விசாரணை நடத்தப்பட்டது.

மார்க், சுந்தர் பிச்சை, பெஸோஸ், டிம்.. கடும் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 4 சிஇஓக்கள்.. பின்னணி!மார்க், சுந்தர் பிச்சை, பெஸோஸ், டிம்.. கடும் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 4 சிஇஓக்கள்.. பின்னணி!

சரமாரி கேள்வி

சரமாரி கேள்வி

காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிசிலின் மூலம் இந்த விசாரணை நடத்தப்பட்டது. அதில், காங்கிரஸ் கமிட்டி சரமாரி கேள்விகளை வைத்தது. பின் வரும் கேள்விகளை சுந்தர் பிச்சை, மார்க் ஜுக்கர்பெர்க், டிக் கூக், ஜெப் பெஸோஸ் மீது கமிட்டி வைத்தது.

இணையம் முழுக்க தனக்குதான் சொந்தம் என்பது போல பேஸ்புக், அமேசான், ஆப்பிள், கூகுள் செயல்படுகிறது.

இப்போதே 90% இணையத்தை பேஸ்புக், அமேசான், ஆப்பிள், கூகுள் ஆகிய நிறுவனங்கள்தான் கட்டுப்படுத்துகிறது.

தங்களின் பெரிய சக்தியை பயன்படுத்தி பிற நிறுவனங்களை அவர்கள் முடக்கிறார்கள். தங்களின் வளர்ச்சிக்காகக் பிற நிறுவனங்களை அவர்கள் முடக்கிறார்கள்.

போட்டியாளர்ளை காலி செய்து மக்களின் தேர்வு செய்யும் உரிமையை இவர்கள் பறிக்கிறார்கள்.

நாம் இதை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இவர்களின் தனி ஆவர்தனத்தை தடுத்து சரியான போட்டியை உருவாக்க சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

என்ன குற்றச்சாட்டுகள்

என்ன குற்றச்சாட்டுகள்

கூகுள் நிறுவனம் தனது சர்ச்சிங் முறையில் நிறைய குறைகளை கொண்டுள்ளது. நிறைய தவறுகளை செய்கிறது . ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்படுகிறது. நடுநிலையுடன் இல்லை. தகவல்களை திருடுகிறது .

பேஸ்புக் நிறுவனம் பொய்யான செய்திகளை பரப்புகிறது. அவர்கள் தவறான செய்திகள் எதையும் தடுப்பது இல்லை. கொரோனா குறித்தும், அரசியல் குறித்தும் பரவும் வதந்திகளை இவர்கள் தடுப்பது இல்லை.இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்ற நிறுவனங்களை பேஸ்புக் வாங்கிவிட்டது .

ஆப்பிள் நிறுவனம், ஆப் உலகில் பெரிய ஆள் போல செயல்படுகிறது. எந்த செயலிகளை மக்கள் பயன்படுத்த வேண்டும், மக்கள் பயன்படுத்த கூடாது என்று ஆப்பிள்தான் தீர்மானிக்கிறது. இது முழுக்க முழுக்க தவறான விஷயம்.

அமேசான் நிறுவனம் தங்கள் போட்டியாளர்களை வளர விடவில்லை . தனியாக ஆன்லைனில் பொருட்களை விற்கும் எல்லோரையும் தங்களின் இலவசம் மூலம் அழிகிறது . டயப்பர்ஸ் நிறுவனத்தை அமேசான் அழித்தது போல நிறுவனங்கள் காணாமல் போய் உள்ளது என்று வரிசையாக சரமாரியாக காங்கிரஸ் கமிட்டி கேள்விகளை அடுக்கியது.

ஜெப் பெஸோஸ் விளக்கம்

ஜெப் பெஸோஸ் விளக்கம்

இதற்கு பதில் அளித்த அமேசான் சிஇஓ ஜெப் பெஸோஸ், அமேசான் நிறுவனம் அப்படி சிறிய நிறுவனங்களை அழிப்பது கிடையாது. மக்களுக்கு தேவையான விஷயங்களை மட்டுமே வழங்குகிறோம். நானே சிறிய நிறுவனமாக இருந்ததுதான் அமேசான் நிறுவனத்தை வளர்த்திக் கொண்டு வந்தேன். மக்களுக்கு தேவையானதை கொடுப்பதால் போட்டி நிறுவனங்களை விட எங்களுக்கு அதிக ஆதரவை மக்கள் தருகிறார்கள், என்று கூறினார்.

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

இன்னொரு பக்கம் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இதற்கு பதில் அளிக்கவில்லை, கூகுள் சர்ச் எஞ்சின் யாருக்கும் எதிராக செயல்படவில்லை. இது ஏஐ மூலம் ஆட்டோமெட்டிக்காக செயல்படுகிறது. எல்லோரும் சமமான வாய்ப்பை நாங்கள் வழங்குகிறோம். போட்டியை நாங்கள் எதிர்ப்பது இல்லை. போட்டி இருப்பது சரியானதே. நாங்கள் எங்கள் போட்டியாளர்களை நசுக்கியதே இல்லை, என்று சுந்தர் பிச்சை கூறினார்.

டிம் கூக் எப்படி

டிம் கூக் எப்படி

இதற்கு பதில் அளித்த ஆப்பிள் சிஇஓ டிம் கூக், நாங்கள் எங்கள் செயலிகள் எதையும் கட்டுப்படுத்தவில்லை. அதோடு ஆப்பிள் மார்க்கெட்டில் ஆப்பிள் செயலிகள் குறைவாகவே இருக்கிறது. எங்கள் செயலிகள் மொத்தம் 60தான் உலகில் உள்ளது . ஆப்பிள் ஸ்டோரில் 1.7 மில்லியன் செயலிகள் உள்ளது. எங்களுக்கு நிறைய போட்டிகள் உள்ளது . எங்கள் போட்டியாளர்களை நாங்கள் சூழ்ச்சி செய்து வீழ்த்தியது எல்லாம் இல்லை, என்று டிம் கூக் கூறியுள்ளார்.

பேஸ்புக் எப்படி

பேஸ்புக் எப்படி

அதேபோல் இதற்கு பதில் அளித்த மார்க் ஜுக்கர்பெர்க், பேஸ்புக் தகவல் ஈடுபடவில்லை. அதேபோல் நாங்கள் அமெரிக்காவில் பெரிய நிறுவனமும் இல்லை. அமெரிக்காவில் தற்போது வேகமாக வளரும் நிறுவனம் டிக்டாக்தான். நாங்கள் இல்லை. நாங்கள் உலகின் பல சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்து அவர்களை வளர வைக்கிறோம். இன்ஸ்டாகிராமை நாங்கள் வாங்கியதன் மூலமே வளர வைத்தோம், என்று மார்க் கூறியுள்ளார். இந்த விசாரணை 4 மணி நேரத்திற்கும் மேல் நடந்தது.

English summary
Big Tech Testimony: Sundar Pichai, Tim Cook, Mark Zuckerberg, and Jeff grilled by congressman today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X