மார்க், சுந்தர் பிச்சை, பெஸோஸ், டிம்.. கடும் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 4 சிஇஓக்கள்.. பின்னணி!
நியூயார்க்: உலகை கட்டுப்படுத்தும் டெக் உலகின் ஜாம்பவான்களான மார்க் ஜுக்கர்பெர்க், ஜெப் பெஸோஸ், டிம் கூக், மார்க் ஜூக்கர் பெர்க் ஆகியோர் ஒன்றாக இன்று அமெரிக்காவின் காங்கிரஸ் கமிட்டி முன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
அமெரிக்காவில் பெரிய நிறுவனங்களை கட்டுப்படுத்த antitrust சட்டம் எனப்படும் சட்டங்கள் இருக்கிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மொத்தமாக ஒரு பொருளுக்கான சந்தையை ஆக்கிமிரத்து பிற நிறுவனத்தை வளர விடாமல் தடுக்கும் monopoly செயல்முறையை தடுக்கும் வகையில் ஆண்டிடிரஸ்ட் சட்டங்கள் அமலில் உள்ளது.
உதாரணமாக பால் விற்பனைத்துறையை ஒரே நிறுவனம் கட்டுப்படுத்தி, பிற நிறுவனங்களை வளர விடாமல் தடுத்தால் அந்த நிறுவனம் மீது அமெரிக்காவில் antitrust சட்டம் பாய வாய்ப்பு உள்ளது. ஆனால் டெக்னலாஜியை அடிப்படையாக கொண்டு இயங்கும் பேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்த antitrust சட்டத்தின் கீழ் இன்னும் வரவில்லை. அல்லது அந்த நிறுவனங்களுக்கு எதிராக antitrust விதிகள் பெரிதாக இல்லை.

விசாரணை செய்கிறது
இந்த நிலையில்தான் டெக் உலகில் இருக்கும் பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை அழிக்கிறதா, வளர விடாமல் தடுக்கிறதா என்று தற்போது அமெரிக்காவின் காங்கிரஸ் கமிட்டி எனப்படும் நிதித்துறை குழு விசாரணை செய்கிறது. அதாவது டெக் உலகில் இருக்கும் கூகுள், பேஸ்புக், ஆப்பிள், அமேசான் போன்ற நிறுவனங்கள் பிற நிறுவனங்கள் வளர விடாமல் தடுக்கிறதா என்று காங்கிரஸ் கமிட்டி விசாரணை செய்து வருகிறது.

காங்கிரஸ் கமிட்டி
இதற்காக கடந்த ஒரு வருடமாக காங்கிரஸ் கமிட்டி விசாரணை நடத்தியது. அதன்படி இந்த நான்கு நிறுவனங்கள் உட்பட அமெரிக்காவின் பெரிய நிறுவனங்கள், தங்களுக்கு எதிரான சின்ன நிறுவனங்களை எப்படி அழிக்கிறது என்று விசாரணை செய்யப்பட்டது.ஒரு வருடமாக நடந்த இந்த விசாரணையில் மொத்தம் 1.3 மில்லியன் ஆவணங்களை நீதி குழு பெற்றது. அதேபோல் மொத்தம் ஐந்து விசாரணைகளை நடத்தியது. 100க்கும் அதிகமான நிறுவனங்களை விசாரணை செய்தது .

நான்கு நிறுவனம்
இதெல்லாம் போக தற்போது ஒரு வருட விசாரணைக்கு பின் கூகுள், பேஸ்புக், ஆப்பிள், அமேசான் நிறுவனங்களை நேரடியாக காங்கிரஸ் கமிட்டி விசாரணை செய்துள்ளது. நான்கு நிறுவனங்களின் சிஇஓ மற்றும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, தற்போது அவர்கள் விசாரிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் ஒன்றாக விசாரணை செய்யப்படுவது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஒரே நேரம்
இதற்கு பின் இப்படி ஒரு விஷயம் நடக்காது என்பதால் இவர்களின் விசாரணை மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மார்க் ஜுக்கர்பெர்க், ஜெப் பெஸோஸ், டிம் கூக், மார்க் ஜூக்கர் பெர்க் ஆகியோர் ஒன்றாக வீடியோ கால் மூலம் விசாரணை செய்யப்பட்டனர். இதில் இந்த நான்கு நிறுவனங்கள் எப்படி தங்கள் சிறு சிறு போட்டி நிறுவனங்களை அணுகுகிறது என்று விசாரணை செய்யப்பட்டது.

சட்ட வரும்
சிறிய நிறுவனங்களை இந்த பெரிய நிறுவனங்கள் நசுக்குகிறதா என்று விசாரணை செய்யப்பட்டது. இதில் இவர்கள் நால்வர் மீதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வாய்ப்பு இல்லை. ஆனால் பெரும்பாலும் டெக் நிறுவனங்களுக்கு எதிராக antitrust சட்டங்கள் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது. இதில் புதிய சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.