நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அப்படியே இதயம்தான்.. மூக்கில் இருந்து கொட்டிய ரத்தம்.. வடிவத்தை பார்த்த ஆச்சர்யப்பட்ட டாக்டர்கள்!

அமெரிக்காவில் நோயாளி ஒருவரின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டிய சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் நோயாளி ஒருவரின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டிய சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கலிபோர்னியாவை சேர்ந்த 36 வயது நிரம்பிய அந்த நபரின் பெயர் விவரங்கள் வெளியாகவில்லை.

இவருக்கு கடந்த வாரம் திடீர் என்று நெஞ்சு வலி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவசர அவசரமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூச்சு குழலில் அடைப்பு

மூச்சு குழலில் அடைப்பு

இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு மூச்சு குழலில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் அடைப்பை கரைக்கும் வகையில் சில மருந்துகளை கொடுத்து இருக்கிறார்கள். இவர் கடந்த ஒருவாரமாக இந்த மருந்துகளை பயன்படுத்தி வந்துள்ளார்.

அனுமதிக்கப்பட்டார்

அனுமதிக்கப்பட்டார்

இந்த நிலையில் நேற்று முதல்நாள் அவருக்கு மீண்டும் பெரிய அளவில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது, அவரின் மூக்கின் வழியே வேகமாக இருமி ரத்தத்தை வெளியே எடுத்துள்ளார்.

அப்படியே இருந்தது

அப்படியே இருந்தது

இதில்தான் ஆச்சர்யம் நிறைந்து இருந்தது. அந்த ரத்தம் பார்க்க அப்படியே இதயத்தின் வடிவத்தில் இருந்தது. உறைந்து போய் இருந்த அந்த ரத்தம், மூச்சு குழலில் ஓடி, எப்படி அடைப்பட்டு இருந்ததோ அதே வடிவத்தில் இருந்துள்ளது. இது அவரின் சட்டையில் ஒட்டியபடி காய்ந்து இருந்தது.

மரணம் அடைந்தார்

மரணம் அடைந்தார்

அன்று மாலையே அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். தற்போது அந்த ரத்த மாதிரிகளை வைத்து மருத்துவர்கள் சோதனை செய்து வருகிறார்கள். எப்படி இந்த சம்பவம் நடந்தது என்று திகைத்து போய் இருக்கிறார்கள். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது.

English summary
Blood Clot of a patient looks exactly like the shape of a Lung Passage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X