நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிதைந்த நிலையில் லாரிகளில் 100 உடல்கள்.. அமெரிக்காவில் இறுதி சடங்கு நிறுவனத்தில் அவலம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா வைரஸ் கேஸ்கள் அதிகரித்துள்ளதால், வாடகை லாரிகளுக்குள் டஜன் கணக்கான உடல்களை சேமித்து வைத்த ப்ரூக்ளின் இறுதி சடங்கு நிறுவனத்தின் செயல்களை கண்டு அதிர்ச்சி அடைந்த நியூயார்க் மாகாண சுகாதார அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் இறுதி சடங்கு உரிமத்தை வெள்ளிக்கிழமை பறித்தனர்.

Recommended Video

    Brooklyn Funeral Home's License Suspends

    அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் 11,79,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரு நாளில் மட்டும் 18680 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் 68179 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 735 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவிலேயே நியூயார்க் மாகாணம் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ப்ரூக்ளின் மாநிலத்திலேயே அதிக பாதிப்பு மற்றும் அதிக மரணத்தை சந்தித்துள்ள இரண்டாவது நகரம் ஆகும். ப்ரூக்ளின் மாவட்டத்தில் இதுவரை 42,996 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3678 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அடக்கம் செய்ய முடியவில்லை

    அடக்கம் செய்ய முடியவில்லை

    இதனால் அங்கு பிணங்களை கூட அடக்கம் செய்ய முடியாமல் அங்குள்ள கல்லறை தோட்டங்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் இறுதி சடங்கை செய்வதற்கு என்று உள்ள நிறுவனங்கள் உடல்களை மொத்தமொத்தமாக குவித்து வைத்து இடம் கிடைக்கும் வரை காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    போலீசார் கண்டுபிடிப்பு

    போலீசார் கண்டுபிடிப்பு

    இந்நிலையில் ப்ரூக்ளின் நகரில் உள்ள ஆண்ட்ரூ டி. கிளெக்லி இறுதி சடங்கு இல்லத்தில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு புதன்கிழமை அன்று தகவல் அளித்தனர். அங்கு வந்து தெருவை பூட்டிய போலீசார் நடத்திய சோதனையில். குளிரூட்டப்படாத இரண்டு லாரிகள் மற்றும் வேன்கள் ஆகியவற்றில் புதன்கிழமை அன்று சுமார் 100 சிதைந்த உடல்களை போலீசார் கண்டுபிடித்தனர். அதை சரியான முறையில் அங்கிருந்து அகற்றினர்.

    இறந்தவருக்கு அவமரியாதை

    இறந்தவருக்கு அவமரியாதை

    இந்த சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோசமான சம்பவம் தொடர்பாக இறுதி சடங்கு நிறுவனத்தில் ம் விசாரணை நடத்தி வருவதாக நியூயார்க் மாகாண மாநில சுகாதார ஆணையர் ஹோவர்ட் ஜுக்கர் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளை "திகிலூட்டும் செயல் , இறந்தவரின் குடும்பங்களுக்கு அவமரியாதை" என்று கண்டித்தார் . அத்துடுன் இறுதி சடங்கு செய்யும் நிறுவனத்தின் உரிமத்தையும் நிறுத்தி வைத்தார்.

    சவால்கள் உள்ளது

    சவால்கள் உள்ளது

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில். இறுதி சடங்கு செய்யும் நிறுவனங்களுக்கு, உடல்களை சரியான முறையில் நிர்வகிக்கவும், மரியாதைக்குரிய மற்றும் திறமையான முறையில் சேவைகளை வழங்க வேண்டிய பொறுப்பு உள்ளது" என்று கண்டித்தார். கொரோனா தொற்றுநோய்களால் சடலங்களை புதைப்பதில் இறுதி சடங்கு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை ஜுக்கர் ஒப்புக் கொண்டார், ஆனால் இந்த விஷயத்தில் அரசு உதவும் என்றும் தெரிவித்தார். இறுதி சடங்கு செய்யும் நிறுவனத்தில் 100 உடல்களை சிதைந்த நிலையில் இருப்பதை அமெரிக்காவின் பல நகரத் தலைவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உரிய விசாரணை நடத்துமாறு அழைப்பு விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

    English summary
    Covid-19 US: Brooklyn funeral home's license suspends after it stored dozens of bodies in rental trucks
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X