நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

600 இடங்களில் தீ.. பற்றி எரியும் மாகாணங்கள்.. அமெரிக்காவை நிலைகுலைய வைத்த பேரிடர்.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் மேற்கு பகுதியில் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

பொதுவாக அமெரிக்காவில் ஜூலை மாதத்திற்கு பின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஏற்படும் காட்டுத் தீ குறைந்தது ஒரு மாதமாவது காட்டு பகுதிகளில் பரவும். சமயத்தில் மக்கள் வசிக்கும் இடத்திற்கு மிக அருகில் இந்த காட்டுத் தீ ஏற்படுவதும் வழக்கம்.

ஆனால் இந்த முறை, இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேற்கு பகுதி முழுக்க மிக மோசமாக காட்டுத் தீ காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா.. இது கடைசி பெருந்தொற்று அல்ல.. அடுத்த தொற்றுக்கு தயார் ஆகுங்கள்.. எச்சரிக்கை விடுக்கும் ஹு!கொரோனா.. இது கடைசி பெருந்தொற்று அல்ல.. அடுத்த தொற்றுக்கு தயார் ஆகுங்கள்.. எச்சரிக்கை விடுக்கும் ஹு!

எங்கு ஏற்பட்டுள்ளது

எங்கு ஏற்பட்டுள்ளது

அமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியா, ஒரிகான் மற்றும் வாஷிங்டன் ஆகிய மாகாணங்களில் இந்த காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு முன் லேசாக சில இடங்களில், காட்டுப்பகுதியில் கலிபோனியாவில் தீ ஏற்பட்டது. ஒரு வாரத்திற்கு முன் வேகம் எடுத்த எடுத்த தீ தற்போது மூன்று மாகாணங்களில் பரவி வருகிறது. முக்கியமாக கலிபோனியாவில் 75% காடுகளிலும், 40% மக்கள் வசிக்கும் இடங்களிலும் காட்டுத் தீ பரவி உள்ளது.

எத்தனை ஏற்பட்டுள்ளது

எத்தனை ஏற்பட்டுள்ளது

தற்போது நேற்றைய கணக்குப்படி 95 இடங்களில் ஆக்டிவ் தீ உள்ளது. அதாவது அங்கு 90க்கும் அதிகமான இடங்களில் தனி தனியாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தினமும் 90+ இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்தமாக 600 இடங்களில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. காட்டு பகுதிகள் மட்டுமின்றி மக்கள் வசிக்கும் இடங்களிலும் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சேதம் எவ்வளவு

சேதம் எவ்வளவு

இதன் காரணமாக 20 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நாசம் அடைந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். கலிபோர்னியாவில் மட்டும் இவ்வளவு ஏக்கர் நிலம் தீ பிடித்து அழிந்து உள்ளது. அங்கு 600 கட்டிடங்கள், 120 வீடுகள் இருந்துள்ளது . அதேபோல் ஒரீகான் பகுதியில் 2 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்துள்ளது. வாஷிங்டனில் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பல்லாயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர் .

பெரிய போராட்டம்

பெரிய போராட்டம்

கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் வரை இதுவரை இடம்பெயர்ந்து உள்ளனர். அங்கு இன்னும் மக்கள் இடம்பெயர்ந்து வருகிறார்கள். அங்கு தீயை அணைக்க 25000 வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அருகாமையில் இருக்கும் மாகாணங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரமாக தீயை அணைக்கும் போராட்டம் நடந்து வருகிறது. இருந்தும் தீயணைப்பு வீரர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்த தீ ஏற்பட காரணம் என்ன என்று கேட்டால் அதிர்ந்து போவீர்கள்.. உலகத்தில் பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொன்ன அதே காலநிலை மாறுபாடுதான் இந்த தீ ஏற்பட காரணம். கடந்த மாதம் முழுக்க இந்த மூன்று மாகாணங்களில் வெப்பநிலை அதிகம் இருந்தது. கடும் வெயில் நிலவியது. 100 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை அங்கு நிலவியது. கடும் வறட்சி மற்றும் வெப்பநிலைதான் காட்டு தீயை உருவாக்கி உள்ளது.

மோசமடையும்

மோசமடையும்

காலநிலை மாற்றம் காரணமாகவே காட்டுத் தீ உருவாகி உள்ளது.ஆனால் இது இப்போது முடியாது. இதுவரை கடந்த 13 ஆண்டுகளில் ஏற்பட்ட காட்டுத் தீ சீசனை விட இது மோசமாக உள்ளது. அதனால் இந்த காட்டுத் தீ மிக வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது. அருகில் இருக்கும் மாகாணங்களுக்கு இந்த தீ பரவ வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

புகைப்படம் உதாரணம்

புகைப்படம் உதாரணம்

இந்த காட்டுத் தீ குறித்த புகைப்படங்கள் நிறைய வெளியாகி உள்ளது. மேற்கு அமெரிக்காவில் எங்கெல்லாம் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது என்று இந்த புகைப்படத்தில் விளக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பெரும்பாலான இடங்களில் தீ ஏற்பட்டுள்ளது இந்த மேப் புகைப்படம் மூலம் புலனாகிறது.

English summary
California, Oregon, and Washington struggle with forest fire
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X