நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழர் தந்த க்ளூ.. மீண்டும் தேடிய நாசா.. கண்டுபிடிக்கப்பட்டது விக்ரம் லேண்டர்.. என்ன நடந்தது?

நிலவின் தென் துருவ பகுதியில் விழுந்து நொறுங்கிய சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டரை நாசா கண்டுபிடித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    How did Shanmuka Subaramanyam help NASA

    நியூயார்க்: நிலவின் தென் துருவ பகுதியில் விழுந்து நொறுங்கிய சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டரை நாசா கண்டுபிடித்துள்ளது. சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர்தான் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்த காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பின் செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் நிலவின் தென் பகுதியில் இறங்கி இருக்க வேண்டும்.

    ஆனால் நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கவில்லை. சரியாக 2 கிமீ தூரம் வரை சென்ற விக்ரம் லேண்டர் அதன்பின் தொடர்பை இழந்தது. அதற்கு அடுத்து மூன்று நாட்கள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள தீவிரமாக முயன்றும் கூட அதை தொடர்பு கொள்ள முடியவில்லை.

    எப்படி இறங்க வேண்டும்

    எப்படி இறங்க வேண்டும்

    விக்ரம் லேண்டர் நிலவில் சாப்ட் லேண்டிங் முறையில் இறங்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. சாப்ட் லேண்டிங் என்பது, விக்ரம் லேண்டரில் இருக்கும் எஞ்சின்களை எதிர் திசையில் இயக்கி மிகவும் மெதுவாக நிலவில் இறங்குவார்கள். ஆனால் அப்படி நடக்காமல் நிலவில் விக்ரம் லேண்டர் வேகமாக மோதியுள்ளது.

    என்ன சந்தேகம்

    என்ன சந்தேகம்

    இதனால் விக்ரம் லேண்டர் உடைந்து நொறுங்கி இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இது தொடர்பாக அப்போது எந்த விதமான உறுதியான தகவலும் வெளியாகவில்லை. இந்த விக்ரம் லேண்டரை தொடர்ந்து சந்திரயான் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் சாட்டிலைட் தேடி வந்தது.

    நாசா

    நாசா

    அதேபோல் அமெரிக்காவின் நாசாவின் LRO (Lunar Reconnaissance Orbiter) விண்கலம் விக்ரம் லேண்டரை தீவிரமாக தேடி வந்தது. இந்த தேடுதல் பணியில் சீனா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தொழில்நுட்ப விஞ்ஞானிகளும் ஈடுப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பின் தற்போது விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    கண்டுபிடிக்கப்பட்டது

    கண்டுபிடிக்கப்பட்டது

    ஆம் 3 மாதங்களுக்கு பிறகு விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து இருக்கிறார். நாசா இதற்கான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது. நாசாவின் LRO (Lunar Reconnaissance Orbiter) விண்கலம் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளது. விக்ரம் லேண்டர் நிலவில் எங்கு விழுந்தது, எப்படி விழுந்தது, அதன் பாகங்கள் எப்படி எங்கே கிடக்கிறது என்று இந்த புகைப்படத்தில் விளக்கப்பட்டுள்ளது.

    என்ன புள்ளிகள்

    என்ன புள்ளிகள்

    இதை மஞ்சள் மற்றும் சிவப்பு புள்ளிகள் மூலம் நாசா விளக்கி உள்ளது. இதில் இருக்கும் பச்சை நிறப் புள்ளிகள் விண்கல குப்பைகள் ஆகும். மற்ற புள்ளிகள் விக்ரமின் பாகங்கள், மற்றும் விக்ரம் மோதிய இடங்கள் ஆகும் என்று நாசா கூறியுள்ளது. இதனால் விக்ரம் லேண்டர் நிலவில் மோதி சிதறியது உறுதியாகி உள்ளது.

    என்ன புகைப்படம்

    என்ன புகைப்படம்

    இந்த புகைப்படங்கள் கடந்த நவம்பர் 11ம் தேதி எடுக்கப்பட்டது. இதில் செய்யப்பட்ட ஆராய்ச்சி மூலம் தற்போது விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவியதே ஒரு தமிழர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    எப்படி கண்டுபிடித்தது

    எப்படி கண்டுபிடித்தது

    ஆம், சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர்தான் விக்ரம் லேண்டர் எங்கு இருக்கலாம் என்ற க்ளூவை நாசாவிற்கு அனுப்பி இருக்கிறார். இதற்காக நாசா அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் பயணித்த பாதை மற்றும் அது மோதுவதற்கு முன் சென்ற இடம் ஆகியவற்றை வைத்து இவர் இந்த இடத்தை கண்டுபிடித்துள்ளார்.

    டிவிட் செய்தார்

    நிலவில் சில பகுதிகளை குறிப்பிட்டு, இங்கு ஒருவேளை விக்ரம் லேண்டர் விழுந்து இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டு நாசா அதே இடத்தில் மீண்டும் சோதனை செய்தது. கடைசியில் அங்கு விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    காரணம்

    கீழ் கண்ட டிவிட்டில் அவர் கடந்த அக்டோபர் 3ம் தேதியின் விக்ரம் லேண்டர் விழுந்த பகுதியை கணித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

    நாசா நன்றி

    நாசா இது தொடர்பாக செய்துள்ள டிவிட்டில், நீங்கள் குறிப்பிட்டது போல விக்ரம் லேண்டர் விழுந்ததாக கருதப்பட்ட பகுதியில் மீண்டும் ஆய்வு செய்தோம். அங்கு விக்ரம் லேண்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. நாசாவின் LROC மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டது. உங்களின் ஐடியாவிற்கு நன்றி, வாழ்த்துக்கள் என்று நாசா கூறியுள்ளது.

    மீண்டும் டிவிட்

    இது தொடர்பாக சண்முக சுப்ரமணியன் டிவிட் செய்துள்ளார். அதில் அக்டோபர் மாதம் நாசாவிற்கு நான் இது தொடர்பாக மெயில் செய்து இருந்தேன். இரண்டு புகைப்படங்களை அனுப்பி இருந்தேன். இங்கு ஒருவேளை விக்ரம் லேண்டர் விழுந்து இருக்கலாம் என்று கூறினேன். அதை தற்போது நாசா கண்டுபிடித்துள்ளது என்று சந்தோசமாக குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Chandrayaan 2: Finally Nasa finds the Vikram Lander, A Tamailan helped to find it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X