நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவை அதிர வைக்கும் சென்னைக்காரர்.. யுஎன்எஸ்சியில் இந்தியாவிற்கு இடம்.. களமிறங்கிய இந்திய பிரதிநிதி

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு இந்த முறை கண்டிப்பாக தற்காலிக இடம் கிடைக்கும் என்று ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டிஎஸ் திருமூர்த்தி தெரிவித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு இந்த முறை கண்டிப்பாக தற்காலிக இடம் கிடைக்கும் என்று ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டிஎஸ் திருமூர்த்தி தெரிவித்து இருக்கிறார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் என்பது உலகின் சக்தி வாய்ந்த பாதுகாப்பு கவுன்சில் ஆகும். இந்த குழுவில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, யூகே , அமெரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளது. மற்ற 10 நாடுகள் தற்காலிக உறுப்பினராக 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படும்.

இதில் இந்தியா தற்போது நிரந்தர உறுப்பினராகவும் இல்லை. தற்காலிகமாக உறுப்பினராகவும் இந்தியா இதில் தற்போது இடம்பெறவில்லை.

சீனா எதிர்ப்பு

சீனா எதிர்ப்பு

இதில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதை சீனா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும் இந்தியாவை சீனா எதிர்த்து வருகிறது. பாகிஸ்தானும் இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவதை எதிர்த்து வருகிறது. இந்தியா தற்காலிக உறுப்பினர் கூட ஆக கூடாது என்று இரண்டு நாடுகளும் கடுமையாக எதிர்த்து வருகிறது.

என்ன பேட்டி

என்ன பேட்டி

இந்த நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு இந்த முறை கண்டிப்பாக தற்காலிக இடம் கிடைக்கும் என்று ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டிஎஸ் திருமூர்த்தி தெரிவித்து இருக்கிறார். ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்ட பின் முதல்முறையாக திருமூர்த்தி பேட்டி அளித்துள்ளார். அதில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்த முறை நாம் கண்டிப்பாக இடம் பெறுவோம்.

வாக்கு கிடைக்கும்

வாக்கு கிடைக்கும்

10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நாம் இதில் உறுப்பினராக போகிறோம். 15 நாடுகளில் 75% நாடுகள் நமக்கு ஆதரவாக வாக்கு அளிக்க உள்ளது. இதற்கான பேச்சுக்கள் நடந்து வருகிறது. நம்முடைய குரலை உலகம் கேட்க வேண்டும். அதற்கான பணிகளை கண்டிப்பாக செய்வேன். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சேருவதை இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனையின் தீர்வாக நான் பார்க்க மாட்டேன். இந்தியாவிற்கு இதன் மூலம் அதை விட பெரிய பலன்கள் கிடைக்கும்.

குறுகிய பலன்

குறுகிய பலன்

இந்தியாவிற்கு குறுகிய பலன்களை விட பெரிய பலன்கள் இதனால் கிடைக்க போகிறது. இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தானின் பொய்யான பிரச்சாரத்தை யாரும் கருத்தில் கொள்ளவில்லை. இதனால் இந்தியா கண்டிப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சேரும். பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம், வேறு சில நாடுகளின் பொருளாதார ரீதியான தீவிரவாதத்தை நாங்கள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எதிரொலிப்போம்.

என்ன நோக்கம்

என்ன நோக்கம்

எங்களின் அவசர நோக்கம் என்பது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு தற்காலிக இடம் ஒன்றை பெறுவதுதான். வரும் 17ம் தேதி இதற்கான தேர்தல் நடக்கிறது. இதற்காக உறுப்பு நாடுகள் உடன் பேசி வருகிறேன் என்று திருமூர்த்தி கூறியுள்ளார். இந்தியா இதில் வெல்ல கூடாது என்று சீனா தீவிரமாக முயன்று வருகிறது. இதனால் உறுப்பு நாடுகளிடம் சீனா தீவிரமாக இந்தியாவிற்கு பிரச்சாரம் செய்து வருகிறது.

திருமூர்த்தி

திருமூர்த்தி

ஆனால் திருமூர்த்தி அதிரடியாக களமிறங்கி பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் இந்தியாவின் நட்பு நாடுகள் உடன் பேசி பிரச்சாரம் செய்து வருகிறது. சீனாவை இப்படி மெர்சலாக்கி வரும் திருமூர்த்தி தமிழகத்தை சேர்ந்தவர். ஆம் இவர் சென்னையை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில்தான் இவர் காமர்ஸ் பிரிவில் இளங்கலை பட்டம் படித்தார். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய இவர் 1985ல் ஐஎப்எஸ் அதிகாரியாக தேர்வானார்.

Recommended Video

    India - China பேச்சுவார்த்தை குறித்து சீனா சொன்ன கருத்து
    சென்னை நபர்

    சென்னை நபர்

    இவர் பல நாடுகளின் இந்தியாவின் வெளியுறவுத்துறையில் பல பொறுப்புகளை வகித்து இருக்கிறார். கைரோ, ஜெனிவா, காசா, வாஷிங்க்டன், ஜகர்தா ஆகிய இடங்களில் இவர் வெளியுறவுத்துறை அதிகாரியாக பொறுப்பு வகித்து உள்ளார். அதேபோல் வங்கதேசம், இலங்கை, மியான்மர், பூடான், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளராகவும், துணை செயலாளராகவும் இவர் இருந்துள்ளார்.

    English summary
    Chennai man Tirumurti, Who is UN Permanent Representative of India speaks on UNSC seat .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X