பயங்கரம்.. சிகாகோவில் 8 பேரை கண்மூடித்தனமாக சுட்டு கொன்ற மர்மநபர்.. பலர் படுகாயம்.. என்ன நடந்தது?
நியூயார்க்: அமெரிக்காவின் சிகாகோவில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், 8 பேர் உயிரிழந்ததாகவும், 16 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
மிஸிஸிப்பி மாகாணத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவில் திடீரென துப்பாக்கி சூடு நடந்தது.. அந்த திருவிழாவில் ஒரு மர்ம நபர் உள்ளே புகுந்துவிட்டு, சுற்றியிருந்தவர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்.
இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. 5 பேர் காயமடைந்ததாக போலீசார் கூறுகிறார்கள்.. நகரில் மட்பக் என்ற பெயரில் இந்த உணவு திருவிழா வருடந்தோறும் நடப்பது வழக்கம்..
நன்னிலம் கோவில் பூக்குழி திருவிழா... கரகத்தோடு தீயில் விழுந்த பக்தர் - 2 பேர் படுகாயம்

திருவிழா
இந்த திருவிழாவில் வருடா வருடம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சமையல் போட்டிகள், கேளிக்கை நிகழ்ச்சிகள் என வெகு சிறப்பாக நடக்கும்.. அப்படித்தான் இந்த வருடமும் கோலாகலமாக திருவிழா நடந்தபோது, ஒரு மர்மநபர் துப்பாக்கியால் அங்கிருந்தோரை சுட்டு விட்டு தப்பிட்டார். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்..

துப்பாக்கி சூடு
இதனிடையே, பல்வேறு இடங்களிலும் துப்பாக்கி சூடு நடந்துள்ளது அதிர்ச்சியை கூட்டி வருகிறது. சிகாகோ நகரின் தெற்கு கில்பாட்ரிக் பகுதியில் வீடு ஒன்றில் 69 வயது முதியவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோல் பிரைட்டன் பார்க், சவுத் இந்தியானா, நார்த் கெட்ஸி அவென்யூ, ஹம்போல்ட் பார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்பு
இத்தகைய துப்பாக்கி சூட்டினால், மொத்தம் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.. 16 பேர் காயமடைந்தனர்.. அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி 2022ம் ஆண்டில் இதுவரை 140க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த வகையில், தற்போது நடக்கும் துப்பாக்கிசூடு வன்முறை பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அதிலும், வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் நடக்கும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

என்ன காரணம்
அமெரிக்காவில் ஆயுதங்களை வைத்திருப்பது சாமானியர்களின் அரசியலமைப்பு உரிமைகளில் ஒன்றாகும்... இதனாலேயே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன... இப்படித்தான், கடந்த 2021ம் ஆண்டும் இதேபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் ஏராளமாக அமெரிக்காவில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது... இதுகுறித்த விசாரணையிலும் அந்த நாடு இறங்கி உள்ளது.