நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீனாவின் கொடிய கோரோனா வைரஸ்.. அமெரிக்காவிற்கும் பரவியது.. நடுங்கும் வல்லரசு நாடு.. ஆட்கொள்ளி!

சீனா தாக்கி அங்கு மக்களை பலி வாங்கி வரும் கோரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவையும் தாக்கி உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    China Corona virus infection | உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்... நடுங்கும் நாடுகள்

    நியூயார்க்: சீனாவை தாக்கி அங்கு மக்களை பலி வாங்கி வரும் கோரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவையும் தாக்கி உள்ளது

    உலகம் முழுக்க தற்போது சீனாவின் கோரோனா வைரஸ் காரணமாக மாபெரும் அச்சம் நிலவி வருகிறது. ஆராய்ச்சியாளர்களுக்கு இதுவரை என்னவென்றே தெரியாத, புதிய வைரஸ் ஒன்று சீனாவில் மக்களை தாக்கி வருகிறது.

    இதற்கு கோரோனா வைரஸ் என்று பெயர் வைத்துள்ளனர். சீனாவின் வுஹன் பகுதியில்தான் இந்த கோரோனா வைரஸ் தோன்றியுள்ளது. தற்போது மத்திய சீனா, ஹாங்காங் பகுதியில் இந்த வைரஸ் பரவி வருகிறது.

    பாஜகவிடம் இருந்து பிரிவோம் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சுக்கு எஸ்.வி.சேகர் 'ஹலோ ராஜ்பவனா' என மிரட்டல்பாஜகவிடம் இருந்து பிரிவோம் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சுக்கு எஸ்.வி.சேகர் 'ஹலோ ராஜ்பவனா' என மிரட்டல்

    புதிய வைரஸ்

    புதிய வைரஸ்

    இந்த கோரோனா வைரஸ் புதிய வகை வைரஸ் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். கோரோனா வைரஸின் வேறு ஒரு வகை சார்ஸ் நோயை சீனாவில் உண்டாக்கியது. இதனால் 700க்கும் அதிகமான மக்கள் பலியானார்கள். அதேபோல்தான் தற்போது புதிய கோரோனா வைரஸ் தாக்க தொடங்கி உள்ளது.

    என்ன ஜலதோஷம்

    என்ன ஜலதோஷம்

    இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக லேசான ஜலதோஷம் ஏற்படும். அதன்பின் குளிர் நடுக்கம் ஏற்படும். பின் இது நெஞ்சு வலியை உருவாக்கும். கடைசியில் இது மொத்தமாக உயிரையே குடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 9 பேர் பலியாகி உள்ளனர். 450 பேர் கோரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அமெரிக்கா

    அமெரிக்கா

    இந்த நிலையில், சீனா தாக்கி அங்கு மக்களை பலி வாங்கி வரும் கோரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவையும் தாக்கி உள்ளது. ஆம் அமெரிக்காவில் இந்த கோரோனா வைரஸ் தாக்கப்பட்ட நபர் சிகிச்சைக்கு சேர்ந்து இருக்கிறார். இவர் கடந்த டிசம்பரில் சீனா சென்று வந்தார்.

    மிக மோசம்

    மிக மோசம்

    கடந்த ஜனவரி 15ம் தேதி அமெரிக்காவிற்கு வந்துள்ளார். அதன்பின் இவருக்கு ஜலதோஷம் ஏற்பட்டுள்ளது. இவரை சோதித்த மருத்துவர்கள், இவருக்கு கோரோனா வைரஸ் இருப்பதை கண்டறிந்தனர். சீனாவில் கோரோனா வைரஸ் பரவி வரும் வுஹன் பகுதியைதான் இவர் சுற்றிபார்த்துள்ளார்.

    பெரிய அச்சம்

    பெரிய அச்சம்

    இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு தொடுத்தல் மூலமும், காற்று மூலமும் பரவ கூடியது. இதனால் அமெரிக்காவிலும் இந்த நோய் வேகமாக பரவ வாய்ப்புள்ளது என்கிறார்கள். அமெரிக்காவில் கோரோனா வைரஸ் தாக்கியுள்ள அந்த இளைஞரை பாதுகாப்பான அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    China's news Coronavirus attacks the USA too: First-person admitted in hospital yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X