நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவின் கோரிக்கை ஏற்பு.. முதல்முறையாக காஷ்மீர் குறித்து பூட்டிய அறையில் ஐநா கவுன்சில் விசாரணை

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஜம்மு-காஷ்மீரின் நிலைமை குறித்து விவாதிக்க வேண்டும் என்ற சீனாவின் வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இன்று (செவ்வாய்க்கிழமை)விவாதிக்கும் என்று ஐநா தூதர்கள் தெரிவித்தனர்.

370 வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட பழமை வாய்ந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இது தொடர்பாக ஆகஸ்ட் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Chinas request accept: The UNSC will meet behind closed doors for the first time over JK issue

அதன்பிறகு தற்போது பாகிஸ்தான் மற்றும் அதன் நட்பு நாடான சீனாவின் கோரிக்கையை ஏற்று முதல் தடவையாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.

டிசம்பர் 12 ம் தேதி ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு எழுதிய கடிதத்தில், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி. ஜம்மு காஷ்மீரில் மேலும் பதற்றம் அதிகரிப்பதாக கூறி கவலை தெரிவித்தார்.

பாகிஸ்தான் இந்துவுக்கு ஒரு நியாயம்? இலங்கை இந்துவுக்கு ஒரு நியாயமா ? - கமல்ஹாசன் கேள்வி பாகிஸ்தான் இந்துவுக்கு ஒரு நியாயம்? இலங்கை இந்துவுக்கு ஒரு நியாயமா ? - கமல்ஹாசன் கேள்வி

இதேபோல் நிலைமையின் தீவிரத்தன்மை மற்றும் அதிகரிக்கும் அபாயம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாகிஸ்தானின் கோரிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக சீனாவும் தெரிவித்தது. மேலும் ஜம்மு காஷ்மீரின்நிலைமை குறித்து ஐநா சபைக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

சீனாவின் கோரிக்கையை ஏற்று முதல்முறையாக மூடப்பட்ட அறைக்குள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த தகவலை ஐநா சபை தூதர்கள் உறுதிப்படுத்தினர். இந்திய நேரப்படி இன்று இரவுக்கு மேல் இந்த கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
China's request accept: UN security Council will meet closed doors for the first time over to discuss the situation in Jammu and Kashmir
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X