நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனா அத்துமீறுகிறது.. அமெரிக்கா உடனே இந்தியாவிற்கு உதவ வேண்டும்.. அமெரிக்க சென்ட் சபையில் தீர்மானம்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்திய எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது, இந்தியாவிற்கு அமெரிக்கா எப்போதும் உதவி கரம் நீட்ட வேண்டும் என்று அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா - சீனா இடையிலான மோதல் தொடங்கிய சமயத்தில் இருந்தே இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா குரல் கொடுத்தது. இந்தியாவிற்கு எப்போதும் அமெரிக்கா உதவி செய்யும். இந்தியாவிற்கு ஆதரவாக படைகளை அனுப்பவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அமெரிக்கா தெரிவித்தது.

சீனாவுடன் இருக்கும் மோதல் காரணமாக அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்கியது. அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூட நேரடியாக இந்தியாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார்.

உடனே விசாரியுங்கள்.. நீங்கள்தான் முழு பொறுப்பு.. லடாக்கில் விடாமல் உரசும் சீனா.. புதிய குற்றச்சாட்டுஉடனே விசாரியுங்கள்.. நீங்கள்தான் முழு பொறுப்பு.. லடாக்கில் விடாமல் உரசும் சீனா.. புதிய குற்றச்சாட்டு

யார் கொண்டு வந்தது

யார் கொண்டு வந்தது

இந்த நிலையில் இந்திய எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது, இந்தியாவிற்கு அமெரிக்கா எப்போதும் உதவி கரம் நீட்ட வேண்டும் என்று அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஜனநாயக கட்சி செனட்டர் ஜான் காரனின் மற்றும் செனட்டர் மார்க் வார்னர் ஆகிய இருவரும் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். சீனா தேவையில்லாமல் எல்லையில் அத்துமீறுகிறது என்று இவர்கள் தீர்மானத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.

எல்லையில் அத்துமீறல்

எல்லையில் அத்துமீறல்

எல்லையில் சீனாவின் ஆதிக்கத்தை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவின் செயலை அமெரிக்கா பாராட்டுகிறது. சீனா இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். அமெரிக்கா இதில் தலையிட்டு முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்தியாவிற்கு முன்பை விட இப்போதுதான் அமெரிக்காவின் உதவி அதிகம் தேவை.

ஜூலை மாதம்

ஜூலை மாதம்

ஜூலை 15ம் தேதி இந்தியா சீனா இடையிலான மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அப்போதே சீன ராணுவம் குறித்தும், அரசு குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சீனா அண்டை நாடுகளில் அத்துமீற நினைக்கிறது. இதனால் தற்போது சீனாவிற்கு எதிராகவும், சீனாவின் அத்துமீறல்களுக்கு எதிராகவும் இப்போது தீர்மானம் கொண்டு வருகிறோம், என்று இரண்டு செனட்டர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள்தான் தொடங்கினார்கள்

இவர்கள்தான் தொடங்கினார்கள்

இவர்கள் இருவரும்தான் அமெரிக்காவில் செனட் சபையில் செனட் இந்தியா கேகஸ் (Senate India Caucus) அமைப்பை உருவாக்கியது. இந்தியா மற்றும் அமெரிக்காவின் உறவு குறித்து கருத்து கூறுவது, தீர்மானங்களை நிறைவேற்றுவது தொடர்பான அமைப்பு ஆகும் இது. இவர்கள் இருவரும்தான் தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வந்து உள்ளனர் .

English summary
China standoff with India: 2 US senators bring resolution against China aggression in Indian soil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X