• search
நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

உறுதியளிக்க முடியாது.. அப்போதே எச்சரித்த ராஜ்நாத் சிங்.. லடாக்கில் வேலையை காட்டும் சீனா.. பின்னணி!

|

லடாக்: கடந்த சில நாட்களுக்கு முன் சீனா குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்தது போலவே லடாக் எல்லையில் சீனா படைகளை குவித்து வருகிறது.

தைவானுக்கு ஆதரவு.. பீஜிங்குக்கு இந்தியா நெத்தியடி.. சிங்கிளாக வந்து சிக்கிக் கொண்ட சீனா...!!

  China-வை எரிச்சலடைய செய்யும் India-வின் உள்நாட்டு அடி | Oneindia Tamil

  இந்தியா சீனா இடையிலான லடாக் மோதல் இப்போது முடியும் என்று தெரியவில்லை. பனிக்காலத்தை கணக்கில் கொண்டு சீனா எல்லையில் திட்டங்களை தீட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளது. கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் எல்லையில் இருந்து படைகளை திரும்ப பெறுவதாக சீனா கூறியது.

  ஆனால் சீனா தனது வாக்கை மீறி எல்லையில் முழுமையாக படைகளை வாபஸ் வாங்காமல் சில இடங்களில் புதிய படைகளை குவிக்க தொடங்கி உள்ளது.

  அம்பலமான தந்திரம்.. பாங்காங் திசோவில் படகுகளை இறக்கிய சீனா.. புதிய டென்ட்கள்.. படைகள் குவிப்பு!

  மோடி சென்ற லடாக்கின் நிமு.. சிந்து, ஜான்ஸ்கர் நதிகளின் சங்கமம்..நீர் சறுக்கு சாகசகாரர்களின் சரணாலயம்

  என்ன சொன்னார்

  என்ன சொன்னார்

  மூன்று வாரம் முன் லடாக் எல்லைக்கு சென்று இருந்த பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவின் அத்துமீறல் குறித்து பேசி இருந்தார். லடாக் சென்ற அவர் அளித்த பேட்டியில், இந்த சண்டையை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும். எல்லையில் முன்னேற்றம் ஏற்பட்டது வருகிறது.ஆனால் மொத்தமாக நிலைமை அப்படியே மாறிவிடும் என்று என்னால் உறுதி அளிக்க முடியாது.

  சரியாக உள்ளது

  சரியாக உள்ளது

  தற்போது நிலைமை கொஞ்சம் சரியாகி வருகிறது. ஆனால் மந்திரம் போல எல்லாம் மாறும் என்று சொல்ல முடியாது. எல்லையில் மொத்தமாக அமைதி திரும்பும் என்று உறுதியாக கூறுவது கடினம். வரும் நாட்களில் என்ன மாதிரியான மாற்றம் வரும் என்று இனிமேல்தான் தெரியும். எல்லையில் தொடர்ந்த இந்திய ராணுவம் கண்காணிப்பு பணிகளை செய்யும், தொடர்ந்து கவனமாக ரோந்து பணிகளை செய்யும் என்று குறிப்பிட்டார்.

  மேலும் எச்சரிக்கை

  மேலும் எச்சரிக்கை

  ராஜ்நாத் சிங் மட்டுமின்றி இன்னும் சில ராணுவ அதிகாரிகளும் இதே விஷயத்தை குறிப்பிட்டு இருந்தனர். சீனாவை நம்ப முடியாது. கல்வான் மோதலுக்கு பின் சீனா மீது இருக்கும் நம்பிக்கை போய் விட்டது . எப்போது வேண்டுமானாலும் சீனா எல்லையில் அத்துமீறலாம். பாதுகாப்பான் ரோந்து பணிகளை செய்வதை விட வேறு வழியே இல்லை. தொடர்ந்து நாங்கள் கவனமாக இருப்போம். படைகள் தயாராக எப்போதும் இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

  அதேபோல் நடந்தது

  அதேபோல் நடந்தது

  தற்போது பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தது போலவே எல்லையில் சீனா மீண்டும் வேலையை காட்ட தொடங்கி உள்ளது. எல்லையில் மீண்டும் சீனா படைகளை குவிக்க தொடங்கி வருகிறது. முக்கியமாக பாங்காங் திசோ பகுதியில் சீனா படைகளை குவித்து வருகிறது. அங்கு இருக்கும் கட்டுப்பாட்டு பகுதிகள் 5 மற்றும் 6ல் சீனா தற்போது தனது படை வீரர்களை குவிக்க தொடங்கி உள்ளது.

  முகாம்கள் அமைகிறது

  முகாம்கள் அமைகிறது

  அதேபோல் இங்கு சீனா தற்போது முகாம்களையும் அமைக்க தொடங்கி உள்ளது. ஆனால் இந்த முறை சீனாவை நம்பி இந்தியா ஏமாற்றவில்லை. சீனா இப்படி செய்யும் என்று இந்தியா ஏற்கனவே கணித்து இருந்தது. அதற்கு ஏற்றபடி இந்தியா தற்போது அங்கு படைகளை குவித்து உள்ளது. லடாக்கில் இன்னும் இந்தியாவின் வீரர்கள் 50 ஆயிரம் பேர் வரை இருக்கிறார்கள். போர் கருவிகளும் தயார் நிலையில் இருக்கிறது.

  விரைவில் தெரியும்

  விரைவில் தெரியும்

  இப்போது வரை எல்லையில் பெரிய அளவில் பிரச்சனை இல்லை. லேசான பதற்றம் மட்டுமே நிலவி வருகிறது. ஆனால் வரும் நாட்களில் இந்த பதற்றம் பெரிதாக வாய்ப்புள்ளது. சீனாவின் செயலை பொறுத்து நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் இந்தியா எல்லை பிரச்சனையில் இருந்து தனது கவனத்தை திசை திருப்பாமல் தீவிரமாக பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறது.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  China standoff with India: As Rajnath Singh warned before, PLA still shows movement in the border.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X