நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதைவிட்டால் வேறு வாய்ப்பில்லை.. இந்தியா மூலம் அமெரிக்காவிற்கு சீனா அனுப்பும் செய்தி.. என்ன வியூகம்?

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்தியா உட்பட தனது எல்லையில் இருக்கும் நாடுகளை எல்லாம் சீனா தொடர்ந்து அச்சுறுத்தி வருவதற்கு பின் வேறு சில காரணங்கள் உள்ளது என்று கூறுகிறார்கள். அமெரிக்கா - சீனா இடையிலான அதிகார மோதலில் யார் வெற்றிபெறுவார் என்பதுதான் இந்த மோதலுக்கு முக்கிய காரணம் என்றும் கூறுகிறார்கள்.

உலகின் பிக்பாஸ் யார் என்பதுதான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது. இத்தனை நாட்கள் உலகில் இருக்கும் அனைத்து நாடுகளையும் அமெரிக்காதான் கட்டுப்படுத்தி வந்தது. தனது அசாத்திய ராணுவ வலிமை மற்றும் பொருளாதார வலிமையை பயன்படுத்தி அமெரிக்கா உலக நாடுகளை கட்டுப்படுத்தி வந்தது.

தொடக்கத்தில் அமெரிக்காவை எதிர்த்த ரஷ்யா, வடகொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளை கூட அமெரிக்கா தன் வசம் கொண்டு வந்தது. ஆனால் தற்போது சீனாவிடம் அமெரிக்க தனது பலத்தை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளது.

யாரும் கூட்டு சேர கூடாது.. ஓநாய் வீரர்கள் மூலம் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் சீனா.. புதிய பிக்பாஸ்! யாரும் கூட்டு சேர கூடாது.. ஓநாய் வீரர்கள் மூலம் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் சீனா.. புதிய பிக்பாஸ்!

சீனாவின் திட்டம் என்ன?

சீனாவின் திட்டம் என்ன?

அமெரிக்காவிடம் இருந்து பிக்பாஸ் என்ற ஸ்தானத்தை பறிக்கவே சீனா தீவிரமான திட்டங்களை வகுத்து வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்கா பொருளாதார ரீதியாகவும் முடங்கி இருக்கிறது. அங்கு ஆட்சியிலும் ஸ்திரமற்ற தன்மை நிலவி வருகிறது. அமெரிக்காவின் பிக்பாஸ் ஸ்தானத்தை பறிக்க சீனாவிற்கு இதை விட பெரிய வாய்ப்பு இல்லை. இதற்கு தேவையான விஷயங்களை எல்லாம் சீனா செய்து வருகிறது.

செலவு அதிகம்

செலவு அதிகம்

எல்லோருக்கும் சீனாவை பொருளாதார ரீதியாக வலுவான நாடாக தெரியும். ஆனால் சீனா ராணுவ ரீதியாகவும் மிகவும் வலுவான நாடாகும். வருடா வருடம் சீனா ராணுவ ரீதியாக பட்ஜெட்டை உயர்த்திக் கொண்டே செல்கிறது. இந்த வருடம் மட்டுமே சீனாவின் ராணுவ பட்ஜெட் 8% உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 180 பில்லியன் டாலர் செலவு செய்ய போவதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் மொத்த ஜிடிபியை விட சீனா மிக அதிகமாக ராணுவத்திற்கு செலவு செய்கிறது.

செலவு அதிகம்

செலவு அதிகம்

எல்லோருக்கும் சீனாவை பொருளாதார ரீதியாக வலுவான நாடாக தெரியும். ஆனால் சீனா ராணுவ ரீதியாகவும் மிகவும் வலுவான நாடாகும். வருடா வருடம் சீனா ராணுவ ரீதியாக பட்ஜெட்டை உயர்த்திக் கொண்டே செல்கிறது. இந்த வருடம் மட்டுமே சீனாவின் ராணுவ பட்ஜெட் 8% உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 180 பில்லியன் டாலர் செலவு செய்ய போவதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் மொத்த ஜிடிபியை விட சீனா மிக அதிகமாக ராணுவத்திற்கு செலவு செய்கிறது.

 கடற்படையில் முந்தியது

கடற்படையில் முந்தியது

கொரோனா காரணமாக ராணுவத்திற்கு செலவிடம் தொகையை அமெரிக்கா குறைத்து வரும் நிலையில், சீனாவோ தனது ராணுவ செலவீனங்களை அதிகரித்துள்ளது. அதிலும் பல சீனாவின் உள்நாட்டு உற்பத்தி ஆகும். அதிலும் கடற்படையில் சீனா ஏற்கனவே அமெரிக்காவை முந்திவிட்டது. சீனாவிடம் 335 போர் கப்பல்கள் உள்ளது. அமெரிக்காவிடம் வெறும் 285 போர் கப்பல்கள்தான் உள்ளது. மற்ற படைகளிலும் சீனா அடுத்த வருட இறுதியில் அமெரிக்காவை முந்திவிடும் என்று கூறுகிறார்கள்.

உலகம் முழுக்க கடற்படைத்தளம்

உலகம் முழுக்க கடற்படைத்தளம்

அதிலும் உலகம் முழுக்க சீனா மிக தீவிரமாக கடற்படை கட்டுமான தளங்களை அமைத்து வருகிறது.2015ல் இருந்தே சீனா தனது கடற்படை தளங்களை விரிவாக்கி வருகிறது. பால்டிக் கடல், கொரிய தீபகற்பம், மத்திய தரைக் கடல், பாரசீக வளைகுடா, மேற்கு பசிபிக் என்று பல கடல் பகுதிகளில் சீனா கடற்படை தளங்களை அமைத்து வருகிறது. ஏன் ஆப்ரிக்க நாடுகளில் இருக்கும் கடல் பகுதியை கூட சீன விட்டுவைக்கவில்லை.

அண்டை நாடுகள் அச்சுறுத்தல்

அண்டை நாடுகள் அச்சுறுத்தல்

இந்த நிலையில்தான் தற்போது அமெரிக்கா வரிசையாக எல்லையில் அச்சுறுத்தலை நிகழ்த்தி வருகிறது. முதலாவதாக தென் சீன கடல் எல்லையில் சீனா அத்துமீறி வருகிறது. அங்கு இருக்கும் எண்ணெய் வளங்களை அபகரிக்கும் பொருட்டு மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளை சீனா அச்சுறுத்துகிறது. அதோடு தென் சீன கடல் எல்லையில் இருக்கும் அமெரிக்கா ராணுவத்தை அகற்றும் வகையில் சீனா தொடர்ந்து படைகளை குவிக்கிறது.

இந்தியா எப்படி

இந்தியா எப்படி

இன்னொரு பக்கம் இந்தியா மீது லடாக் எல்லையில் தொடர்ந்து சீனா அத்துமீறுகிறது. இந்தியாவில் எப்போது லடாக்கை ஆக்கிரமிக்கலாம் என்று சீனா திட்டம் போட்டு வருகிறது. இதற்காக சீனா அங்கு படைகளையும் குவித்து உள்ளது. இந்த சண்டை இப்போது முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியாவுடனும் சீனா ராணுவ ரீதியான மோதலில் இருக்கிறது.

ஜப்பான் உடன் மோதல்

ஜப்பான் உடன் மோதல்

இதெல்லாம் போக 2018க்கு பிறகு முதல் முறையாக வடசீன கடல் எல்லையில் சீனா போர் கப்பல்களை நிறுத்தி உள்ளது. அங்கு ஜப்பானை அச்சுறுத்தும் வகையில் சீனா போர் கப்பலை இறக்கி உள்ளது. இதன் மூலம் சீனாவின் வியூகம் ஒன்று அம்பலம் ஆகி உள்ளது. எல்லையில் இருக்கும் நாடுகளை மட்டும் சீனா தாக்கவில்லை. அமெரிக்காவிற்கு நட்பாக இருக்கும் அனைத்து நாடுகளையும் சீனா தாக்க தொடங்கி உள்ளது.

சீனாவின் வியூகம்

சீனாவின் வியூகம்

அமெரிக்காவிற்கு நட்பாக இருக்கும் நாடுகளை எல்லாம் தாக்கி அவர்களை அச்சுறுத்துவது. அமெரிக்காவிற்கும் அவர்களுக்கு இருக்கும் உறவை மொத்தமாக முறிப்பதுதான் சீனாவின் திட்டம் என்கிறார்கள். இந்தியா மீதான சீனாவின் தாக்குதலுக்கு இதுதான் காரணம் என்கிறார்கள். வியட்நாம், ஆஸ்திரேலியா, ஜப்பான், மலேசியா என்று அமெரிக்காவின் நட்பு நாடுகள் எதையும் சீனா விட்டுவைக்கவில்லை.

என்ன மெசேஜ்

என்ன மெசேஜ்

இப்படி இந்தியா உள்ளிட்ட எல்லை நாடுகளை தக்குவதன் மூலம் சீனா அமெரிக்காவிற்கு ஒரு மெசேஜ் அனுப்புகிறது. நாங்கள்தான் இனி எல்லாம் என்ற ரீதியில் சீனா அமெரிக்காவிற்கு மெசேஜ் அனுப்புகிறது. இதுதான் அமெரிக்காவின் நட்பு நாடுகள் குறி வைக்கப்பட காரணம். இரண்டு நாடுகளுக்கு இடையிலான அதிகார போட்டி உலக அளவில் எதிரொலித்துள்ளது. இதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது.

English summary
China standoff with India: Beijing sends a message to US by attacking neibour countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X