நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதே "பேட்டர்ன்".. சீனாவிடம் ஏதோ திட்டம் உள்ளது.. லடாக் மோதலில் எச்சரிக்கும் வெள்ளை மாளிகை.. பின்னணி!

Google Oneindia Tamil News

நியூயார்க்: சீனா உலகம் முழுக்க பல நாடுகளிடம் ராணுவ ரீதியாக அத்துமீறுவது போலவே இந்தியாவுடனும் அத்துமீறி வருகிறது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.

இந்தியா சீனா இடையிலான லடாக் மோதலை உலக நாடுகள் எல்லாம் கவனிக்க தொடங்கி உள்ளது. லடாக்கில் சீனா செய்யும் அத்துமீறலை அமெரிக்கா கவனித்து வருகிறது.

இதில் இந்தியாவிற்கு ஆதரவாக இருப்போம் என்று அமெரிக்கா ஏற்கனவே கூறிவிட்டது. அதேபோல் இந்தியாவிற்கு ஆதரவாக படைகளை அனுப்புவோம் என்றும் அமெரிக்கா வெளிப்படையாக கூறியுள்ளது.

உள்நாட்டு தீவிரவாதிகளுக்கு ஆயுத சப்ளை செய்கிறது சீனா.. மியான்மர் ராணுவ தளபதி பரபரப்பு பேட்டி உள்நாட்டு தீவிரவாதிகளுக்கு ஆயுத சப்ளை செய்கிறது சீனா.. மியான்மர் ராணுவ தளபதி பரபரப்பு பேட்டி

இந்தியா எப்படி

இந்தியா எப்படி

இந்த நிலையில் இந்தியா சீனா சண்டை தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில், இந்தியா - சீனா இடையே எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோதலை நாங்கள் தீவிரமாக கவனித்து வருகிறோம். இரண்டு நாடுகளின் நிலைப்பாட்டை விசாரித்து வருகிறது. அவர்களின் பேச்சுவார்த்தைகளை பின் தொடர்ந்து வருகிறோம்.

கவனம்

கவனம்

இரண்டு நாடுகளும் பிரச்சனையை தீர்க்க முயன்று வருவது தெரியும். எல்லை பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பிரச்சனை மேலும் மோசமாக கூடாது என்று இந்தியாவும் - சீனாவும் விரும்புகிறது. இதனால் லடாக் எல்லையில் விரைவில் பிரச்சனை தீரும் என்று எதிர்பார்க்கிறோம். எல்லையில் பழைய நிலைமை திரும்ப வேண்டும் என்பது தான் அமெரிக்காவின் விருப்பம்.

டிரம்ப் கருத்து

டிரம்ப் கருத்து

அமெரிக்க அதிபர் டிரம்ப் இதில் சீனாவின் செயல்களை கண்காணித்து வருகிறார். சீனா உலகம் முழுக்க அத்துமீறி வருகிறது. உலகின் பிற நாடுகளில் சீனா எப்படி அத்துமீறுகிறதோ அதே போல இந்தியாவிலும் அத்துமீறுகிறது என்று டிரம்ப் நம்புகிறார். இதனால் இந்தியாவிலும் சீனா அதே பேட்டர்ன் மூலம் அத்துமீறலை நிகழ்த்தி வருகிறது. இதைத்தான் நாங்கள் கவனிக்கிறோம்.

சீனா அத்துமீறல்கள்

சீனா அத்துமீறல்கள்

உலகம் முழுக்க சீனா இப்படி அத்துமீறுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவிடம் வேறு திட்டம் ஏதாவது இருக்கலாம் என்று அதிபர் டிரம்ப் நம்புகிறார். சீனாவின் செயலிகளை இந்தியா தடை செய்துள்ளது. சீனாவிற்கு எதிராக இந்தியாவின் இந்த அதிரடியை வரவேற்கிறோம்.இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் இது வழி வகுக்கும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

English summary
China standoff with India: Bejing following the same pattern in Ladakh says White House press release.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X