நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவிற்கு ஆதரவாக படைகளை அனுப்புகிறோம்.. அமெரிக்கா பரபரப்பு முடிவு.. சீனாவிற்கு பெரும் அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்தியாவிற்கு ஆதரவாகவும், சீனாவிற்கு எதிராகவும் அமெரிக்கா தனது படைகளை அனுப்பும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. முதல் முறையாக அமெரிக்கா இப்படி அறிவித்துள்ளது.

Recommended Video

    India - க்கு ஆதரவாக களமிறங்கிய America... மிரண்டு போன China

    இந்தியா சீனா இடையில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் பேச்சுவார்த்தைகள் பெரிதாக பலன் அளிக்கவில்லை. இதனால் தொடர்ந்து எல்லையில் சீனா - இந்தியா படைகளை குவித்து வருகிறது.

    இந்த சண்டையில் ஏற்கனவே ரஷ்யா தலையை நீட்டிவிட்டது. தற்போது அமெரிக்காவும் இந்த சண்டை குறித்து முக்கியமான கருத்து ஒன்றை கூறியுள்ளது.

    தவறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. சீனாவை கடுமையாக எச்சரித்த இந்தியாதவறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. சீனாவை கடுமையாக எச்சரித்த இந்தியா

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    இந்த நிலையில் அமெரிக்காவின் Secretary of State Mike மைக் பாம்பியோ இது தொடர்பாக பதில் அளித்துள்ளார். அதில், அமெரிக்கா தனது படைகளை ஜெர்மனியில் இருந்து விலக்கிக் கொண்டு இருக்கிறது. எங்கே படைகள் தேவையோ அங்கே அமெரிக்கா இனி படைகளை அனுப்பும். முக்கியமாக சீனாவை பிஎல்ஏ ராணுவம் எங்கே இருக்கிறதோ அங்கே படைகளை அனுப்புவோம்.

    படைகள் எப்படி

    படைகள் எப்படி

    முக்கியமாக இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு எதிராக சீனாவின் பிஎல்ஏ ராணுவம் செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், சீனாவை எதிர்க்கும் வகையில் நாங்கள் படைகளை அனுப்ப போகிறோம். சீனாவின் ராணுவத்திற்கு சரியாக பதிலடி கொடுக்கும் வகையில்தான் நாங்கள் செயல்படுகிறோம்.

    பெரிய சவால்

    பெரிய சவால்

    இந்த காலத்தில் இதுதான் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்க போகிறது. இதை சரியாக எதிர்கொள்ள எங்களிடம் சக்தி இருக்க வேண்டும். அதனால்தான் நாங்கள படைகளை இடம்மாற்றி வருகிறோம். சூழ்நிலையை பொறுத்து படைகளை நாங்கள் மாற்றி வருகிறோம். சில இடங்களில் குறைவான அமெரிக்கா படையை வைத்துக்கொண்டு, சீனா தொல்லை செய்யும் இடங்களில் அதிக படைகளை களமிறக்க போகிறோம்.

    ஐரோப்பா எப்படி

    ஐரோப்பா எப்படி

    இதனால்தான் தற்போது ஐரோப்பாவில் இருந்து நேட்டோ படைகளை திரும்ப பெற்று வருகிறோம். அங்கே பெரிய ஆபத்து இல்லை. ஆபத்து இருக்கும் இடத்திற்குதான் படைகளை அனுப்ப வேண்டும். இதற்காக உலகம் முழுக்க இருக்கும் நாடுகளுடன், எங்கள் நட்பு நாடுகளுடன் ஆலோசனைகளை செய்து வருகிறோம். முக்கியமாக ஐரோப்பாவில் இருக்கும் நாடுகளின் அனுமதியுடன்தான் நாங்கள் படைகளை இடம்மாற்றி வருகிறோம்.

    சீனா மோசம்

    சீனா மோசம்

    சீனா தனது அண்டை நாடுகளுடன் மோசமான செயல்பட்டு வருகிறது. தைவானுடன் மோதுகிறது. தென் சீன கடல் எல்லையில் அத்துமீறுகிறது. இந்தியாவின் எல்லையில் வீரர்களை பலி வாங்கும் அளவிற்கு சண்டையை செய்கிறது.சீனாவின் ராணுவம் மிக மோசமாக செயல்படுகிறது. இதை அமெரிக்கா தடுக்க நினைக்கிறது என்று மைக் பாம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

    பெரும் கலக்கம்

    பெரும் கலக்கம்

    ஏற்கனவே இந்தியா சீனா விஷயத்தில் ரஷ்யா தலையிட போவதில்லை என்று கூறிவிட்டது. இந்தியாவிற்கு எதிராக ரஷ்யா களமிறங்கும் என்று சீனா நினைத்தது. தற்போது அமெரிக்கா வெளிப்படையாக தனது ஆதரவை இந்தியாவிற்கு வழங்கி உள்ளது. இதனால் சீனா பெரிய கலக்கத்தில் உள்ளது.

    English summary
    China standoff with India: US says that it will move troops against PLA aggression in Ladakh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X