நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வந்துவிட்டது சின்னூக் ஹெலிகாப்டர்.. எல்லையில் களமிறக்கிய இந்திய ராணுவம்.. சீனாவிற்கு அதிரடி கேட்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்தியா சீனா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், சீனா அருகே இருக்கும் இந்திய மாநிலங்களில் நவீன ரக சின்னூக் ஹெலிகாப்டர்களை (Chinook heavy-lift helicopters) களமிறக்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.

Recommended Video

    எல்லையில் அதிநவீன ஹெலிகாப்டரை களமிறக்கிய இந்திய ராணுவம்

    இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து பிரச்சனை நிலவி வருகிறது. மே 5ம் தேதி லடாக் எல்லையில் சீனாவின் போர் படைகள் அத்துமீறி உள்ளே நுழைந்தது. அதன் பின் சிக்கிம் எல்லையில் சீனாவின் படைகள் அத்து மீறி வந்தது.

    இதனால் இரண்டு எல்லையிலும் சீனா - இந்திய படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக தற்போது இரண்டு நாடுகளும் எல்லையில் தங்கள் படைகளை குவித்து வருகிறது.

    இந்தியா, சீனா கோஷ்டியிலேயே இல்லை- அணிசேரா கொள்கையே எங்களது பாதை... 'அடேங்கப்பா' மகிந்த ராஜபக்சேஇந்தியா, சீனா கோஷ்டியிலேயே இல்லை- அணிசேரா கொள்கையே எங்களது பாதை... 'அடேங்கப்பா' மகிந்த ராஜபக்சே

    சீனா படை

    சீனா படை

    இந்த நிலையில் இந்தியா சீனா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், சீனா அருகே இருக்கும் இந்திய மாநிலங்களில் நவீன ரக சின்னூக் ஹெலிகாப்டர்களை (Chinook heavy-lift helicopters) களமிறக்க இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக அசாமில் தற்போது சின்னூக் ஹெலிகாப்டர்களை ராணுவம் களமிறக்கி உள்ளது .

    அசாம் நிலை

    அசாம் நிலை

    அசாமில் உள்ள மோஹன்பாரி பகுதியில் இந்த சின்னூக் ஹெலிகாப்டர் களமிறக்கப்பட்டுள்ளது. அதேபோல் நேற்று அருணாசலப்பிரதேசத்தில் சின்னூக் ஹெலிகாப்டர் களமிறக்கப்பட்டது. இந்த சின்னூக் ஹெலிகாப்டர்கள் மிகவும் நவீன ரக ஹெலிகாப்டர்கள் ஆகும். இதன் மூலம் அதிக எடையை எடுத்து செல்ல முடியும். மலை இருக்கும் பகுதிகள், மேடான பகுதிகளில் அதிக எடை உள்ள பொருட்களை இதன் மூலம் கொண்டு செல்ல முடியும்.

    ஹெலிகாப்டர்

    ஹெலிகாப்டர்

    இதன் மூலம் இந்திய - சீன எல்லையில் அதிக அளவில் வீரர்களை இந்தியா குவிக்க முடியும். ஒரே சின்னூக் ஹெலிகாப்டர் மூலம் பல வீரர்களை எல்லையில் குவிக்க முடியும். அதேபோல் அதிகமாக வெடிபொருட்கள், ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு இதன் மூலம் எல்லைக்கு செல்ல முடியும். அதிக எடைகளை சுமந்து செல்வதில் இதுதான் பெஸ்ட் என்று கூறுகிறார்கள். தற்போது இதைத்தான் இந்திய ராணுவம் சீன எல்லையில் களமிறக்க உள்ளது.

    அதிக சக்தி கொண்ட ஹெலிகாப்டர்

    அதிக சக்தி கொண்ட ஹெலிகாப்டர்

    வரும் நாட்களில் சிக்கிம் மற்றும் லடாக் பகுதியில் இந்த சின்னூக் ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட உள்ளது. 20 ஆயிரம் அடி உயரம் வரை அதிக எடையை சுமந்து கொண்டு இது பறக்கும் திறன் கொண்டது . அதேபோல் பெரிய பெரிய வெடிகுண்டுகளை இதில் சுமந்து செல்ல முடியும். இதுவரை பல்வேறு மீட்பு பணிகளில் இந்த சின்னூக் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்தியா வீரர்களை களமிறக்க இதை பயன்படுத்துகிறது.

    English summary
    Chinook heavy-lift helicopters deployed in Assam - China border by India today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X