நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அங்கே செல்ல வேண்டாம்.. அமெரிக்கா விமானங்கள் பறக்க பல்வேறு நாடுகளில் தடை.. அதிகரிக்கும் பதற்றம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்க விமான படை தளம் மீது ஈரான் ராக்கெட் தாக்குதல்

    நியூயார்க்: ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் காரணமாக தற்போது அமெரிக்காவின் விமான போக்குவரத்து பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

    ஈரான் அமெரிக்கா இடையே கடுமையான சண்டை நிகழ்ந்து வருகிறது. ஈறாக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் கடந்த வாரம் டிரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.

    Civil flights of US banned over Gulf, Iraq, Iran after Iran attack

    இதனால் தற்போது அமெரிக்காவின் விமான போக்குவரத்து பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஈராக், ஈரான், கல்ஃப் எனப்படும் மத்திய கிழக்கு நாடுகளின் கடல் பகுதி ஆகிய பகுதிகளில் அமெரிக்க விமானங்கள் பறக்க கூடாது என்று அந்நாட்டு விமான துறை அறிவித்துள்ளது.

    ஈரானுக்கு நட்பு நாடாக இருக்கும் நாடுகளுக்கு மேல் அமெரிக்கா விமானங்கள் பறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த செயலை தொடர்ந்து ஈரான், ஈராக், மத்திய கிழக்கு நாடுகளும் இதேபோல் விமானங்கள் பறப்பதை தடை செய்யலாம்.

    தயார் நிலையில் இருங்கள்.. முப்படைகளுக்கு அறிவித்த பென்டகன்.. தீவிர ஆலோசனையில் டிரம்ப்.. போரா?தயார் நிலையில் இருங்கள்.. முப்படைகளுக்கு அறிவித்த பென்டகன்.. தீவிர ஆலோசனையில் டிரம்ப்.. போரா?

    இதனால் உலகம் முழுக்க விமான போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மற்ற உலக நாடுகள் இதற்கு எப்படி பதில் அளிக்கும். என்ன மாதிரியான பாதிப்புகள் இதனால் ஏற்படும் என்று இன்று மாலைக்குள் தெரியும்.

    English summary
    Civil flights of US banned over Gulf, Iraq, Iran after Iran attack today morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X