நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொண்டையில் சிக்கிய உணவு.. உலுக்கியெடுத்து வாந்தி.. போலீஸ் அதிகாரிக்கு பாராட்டு!

தொண்டையில் உணவு சிக்கி அவஸ்த்தைப்பட்டவருக்கு உதவிய அமெரிக்க போலீஸ் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Google Oneindia Tamil News

.நியூயார்க்: தொண்டையில் உணவு சிக்கி அவஸ்த்தைப்பட்டவருக்கு உதவிய அமெரிக்க போலீஸ் அதிகாரியை நெட்டிசன்கள் ஹீரோவாக கொண்டாடி வருகிறார்கள்.

அமெரிக்காவின் மேற்கு மத்திய பகுதியில் புளோரிடா மாநிலத்தில் அமைந்திருக்கும் பெரிய நகரம் ஹில்ஸ்பெர்க் கவுன்டி. இந்த ஊரில் நடந்த சம்பவம் ஒன்று உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது.

Cop hailed as hero after he springed into action to help a man choking on food

ஹில்ஸ்பெர்க் கவுன்டி போலீசார் தங்களுடைய சமூகவலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். உடலில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில் இரவு நேரத்தில் ரோந்து போலீசாரின் கார்கள் சுழல் விளக்குகளை எரியவிட்டபடி நிற்கின்றன.

ஒரு காரில் இருந்து போலீஸ் அதிகாரி ஒருவர் மிகுந்த பரபரப்புடன் இறங்கி ஓடுகிறார். அவர் ஒரு காரின் அருகே சென்று பார்க்கிறார். அங்கு ஒருவர் ஏதோ சொல்லமுடியாத அவஸ்தையில் தவித்துக்கொண்டிருக்கிறார்.அவரது பிரச்சினையை உடனடியாக புரிந்து கொண்ட அந்த போலீஸ் அதிகாரி, சற்றும் தாமதிக்காமல் உதவிசெய்கிறார்.

நேபாளத்தில் பிரளயத்தை கிளப்பும் பிரதமர் ஒலி- இந்திய ரா தலைவர் சமந்த் குமார் கோயல் சந்திப்பு! நேபாளத்தில் பிரளயத்தை கிளப்பும் பிரதமர் ஒலி- இந்திய ரா தலைவர் சமந்த் குமார் கோயல் சந்திப்பு!

அதாவது அந்த நபருக்கு தொண்டையில் உணவு சிக்கிக்கொண்டது. இதனால் மூச்சுவிட முடியாமல் அவர் திணறிக்கொண்டிருந்தார். அதை உணர்ந்த அந்த போலீஸ் அதிகாரி, அவருக்கு பின்னால் இருந்து இருகைகளையும் கொண்டு இடுப்பில் கட்டிப்பிடித்து, அந்த நபரை உலுக்குகிறார். இதையடுத்து அவர் வாந்தி எடுக்கிறார். இதன் மூலம் அவரது தொண்டயில் சிக்கிய உணவு உடனடியாக வெளியே வந்து, மூச்சுத்திணறல் சரியாகிவிடுகிறது.

இந்த செயலை செய்த போலீஸ் அதிகாரியின் பெயர் க்ளேடன் ரைடவுட். ஹில்ஸ்பெர்க் கவுன்டி போலீசார் வெளியிட்ட வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ரைடவுட்டை ஹீரோவாக கொண்டாடி வருகிறார்கள். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

English summary
A police officer has been hailed as a hero after a video shows him springing into action to save a man. The officer noticed the man was choking and helped dislodge the obstruction clearing his airway.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X