நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. 15 லட்சம் பேர் பாதிப்பு.. 88 ஆயிரத்தை தொட்ட பலி எண்ணிக்கை.. உலகம் முழுக்க மோசமாகும் நிலை

உலகம் முழுக்க 15,13,230 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகம் முழுக்க 15,13,230 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகம் முழுக்க 88,403 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

Recommended Video

    ஒரே மருந்து தான்... இந்தியாவிடம் கோரிக்கை வைக்கும் உலக நாடுகள்

    கொரோனா வைரஸ் உருவாகி நான்கு மாதங்களில் தற்போது 2 மில்லியன் மக்களை தாக்கும் அளவிற்கு வேகமாக பரவி உள்ளத. நேற்று ஒரே நாளில் உலகம் முழுக்க கொரோனா படுவேகமாக பரவி தீவிரம் அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 82500 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மொத்தம் 3,29,731 பேர் இதுவரை உலகம் முழுக்க குணப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக அமெரிக்காவில் 430,210 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் 14736 பேர் பலியாகி உள்ளனர்.

    அமெரிக்காவில் நிலை என்ன

    அமெரிக்காவில் நிலை என்ன

    நேற்று அமெரிக்காவில் புதிதாக 29875 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 1895 பேர் பலியாகி உள்ளனர். உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா காரணமாக பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    ஸ்பெயினில் நிலை

    ஸ்பெயினில் நிலை

    ஸ்பெயினில் 148,220 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்பெயினில் 14792 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயின் நாளுக்கு நாள் புதிய கேஸ்களை சந்தித்து வருகிறது. ஸ்பெயினில் கொரோனா அமெரிக்காவை விட குறைவான வேகத்திலேயே பரவி வருகிறது. அங்கு ஒரு நாளுக்கு சராசரியாக 6278 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். விரைவில் ஸ்பெயின் அமெரிக்காவை முந்த வாய்ப்புள்ளது.

    இத்தாலி எப்படி உள்ளது?

    இத்தாலி எப்படி உள்ளது?

    இத்தாலியில் 139,422 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 17669 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் நேற்று மட்டும் 3039 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. நேற்று மட்டும் இத்தாலியில் 542 பேர் பலியானார்கள், ஸ்பெயினில் 747 பேர் பலியானார். உலகிலேயே இத்தாலியில்தான் அதிகமான நபர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர். ஸ்பெயின் இன்னும் சில நாட்களில் பலி எண்ணிக்கையில் இத்தாலியை முந்தும்.

    ஜெர்மனி நிலை இதுதான்

    ஜெர்மனி நிலை இதுதான்

    ஜெர்மனியில் 113,296 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2349 பேர் பலியாகி உள்ளனர். ஜெர்மனி குறைவான பலி எண்ணிக்கையை கொண்டுள்ளது. பிரான்சில் 112,950 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 10869 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் 64,586 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3993 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் 81,802 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3333 பேர் பலியாகி உள்ளனர்.

    சீனா எப்படி

    சீனா எப்படி

    சீனாவில் இன்றும் கொரோனா காரணமாக யாரும் பலியாகவில்லை. சீனாவில் வேகமாக இயல்பு நிலை திரும்பி உள்ளது. சீனாவில் 77,279 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அங்கு 1190 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். யுனைட்டட் கிங்டமில் 60,733 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 7094 பேர் பலியாகி உள்ளனர்.துருக்கியில் 38,226 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 812 பேர் பலியாகி உள்ளனர்.சுவிசில் 23,280 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 895 பேர் பலியாகி உள்ளனர் .

    English summary
    Coronavirus: 15 lakh people affected and 88 thousand people died in the world so far due to pandemic.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X