நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நாளில் முடிஞ்சு போச்சு.. அவள் உடலை எரித்தபோதும் யாருமே பக்கத்தில் இல்லை.. துடித்து இறந்த ஜெஸிகா!

அறிகுறி தெரிந்த அடுத்த நாளே உயிரிழந்துள்ளார் அமெரிக்க பெண்

Google Oneindia Tamil News

நியூயார்க்: "உடம்பெல்லாம் வலி.. நடுக்கமா இருக்கு.."என்று ஜெஸிகா சொல்லி கொண்டே இருந்தாள்.. எவ்வளவு துடித்திருப்பாள்.. அழுதிருப்பாள்.. அவள் உடம்பை எரிக்கும்போதுகூட குடும்பத்துல யாருமே பக்கத்தில் இருக்க முடியாம போச்சே" என்று வைரஸ் அறிகுறி தெரிந்த அடுத்தநாளே உயிரிழந்த பெண்ணின் சகோதரன் கண்ணீரில் கதறி அழுதார்!

Recommended Video

    எங்களுக்கு அந்த மருந்து தேவை.. ஹைட்ராக்சிகுளோரோகுய்னுக்கு குறி வைத்த டிரம்ப்.. மோடியிடம் கோரிக்கை

    கொரோனாவைரஸ் அசுரனுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர்.. அமெரிக்காவில் இதன் வீரியம் இன்னும் குறையவில்லை.

    50,000-க்கும் மேற்பட்டோர் பலியானவர்கள் என்றால், 2,45,000 பேர் தொற்றுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரேநாளில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பதில் வல்லரசு முன்னிலையிலேயே உள்ளது!

    அண்ணன்

    அண்ணன்

    இப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் ஜெஸிகா.. மத்திய அமெரிக்காவின் எல் சால்வடார் நாட்டை சேர்ந்தவர்.. 32 வயதாகிறது.. இவரும் இவரது அண்ணனும் 3 வருடங்களாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கி வேலை செய்து வந்திருக்கிறார்கள். கடந்த மார்ச் 23-ம் தேதி உடம்பு வலிக்கிறது என்று ஜெஸிகா தன் அண்ணன் சீசரிம் சொல்லி உள்ளார்.

     சளி, இருமல்

    சளி, இருமல்

    உடம்பு வலி, நடுக்கமும் இருந்து கொண்டே இருக்கவும் ஜெஸிகா பயந்துவிட்டார்.. இன்னொரு பக்கம் கொரோனாவின் அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல் இது எதுவுமே அவருக்கு காணப்படவில்லை. இருந்தாலும் ஆஸ்பத்திரிக்கு டெஸ்ட்-க்காக சென்றுள்ளார்.. ஆனால் அடுத்தநாளே ஜெஸிகா இறந்துவிட்டார்.. ஆஸ்பத்திரிக்கு செல்வதாக ஜெஸிகா சீசரிடம் சொன்னபோது, முதலில் போய் டெஸ்ட்-களை எடுக்க சொல்லி, மறுநாளே வந்து ஆஸ்பத்திரியில் பார்ப்பதாக சீசர் சொன்னார்.. ஆனால் பிணமாகத்தான் தங்கையை கண்டார்!! கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 4வது நபரானார் ஜெஸிகா!

     குளிர்ச்சி

    குளிர்ச்சி

    இதை பற்றி சீசர் சொல்லும்போது, "மார்ச் 23-ம் தேதி வரைக்கும் ஜெஸிகாவுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.. நல்ல ஆரோக்கியத்துடன்தான் இருந்தார்.. லேசா உடம்பு வலி, குளிர்ச்சி, நடுக்கம் இருப்பதாக சொன்னார்.. ஆனால் எங்களுக்கு ஒரு டவுட் இருந்தது.. உடம்பு வலிதானே, அதற்கும் வைரஸுக்கும் சம்பந்தமில்லை என்று நினைத்து முதலுதவி மருந்து தந்தேன்.. ஆனால் மறுநாளே உடல்நிலை மோசமாக இருப்பதாக போன் வந்தது.. ஆஸ்பத்திரிக்குள் நான் நுழைந்ததுமே ஏற்கெனவே ஜெஸிகா இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள்.

     அதிர்ச்சி

    அதிர்ச்சி

    ஒரேநாளில் உடல்நிலை மோசமாகி உள்ளது... இது எங்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.. எல்லாமே முடிஞ்சு போச்சு.. எவ்வளவு வலியில் அந்த ஒருநாள் என் தங்கை துடித்திருப்பாள்.. கதறி இருப்பாள்.. அந்த நேரத்தில் ஆறுதல் சொல்லக்கூட நான் அவள் பக்கத்தில் இல்லையே.. அவளுடைய உடம்பை எரித்தபோதுகூட குடும்பத்தினர் யாருமே வர முடியாத சூழல்.. இந்த மாதிரி நிலைமை யாருக்குமே வரக்கூடாது" என்றார்!

    எந்த சிகிச்சையும் எடுக்கும்முன்னரே... அறிகுறி தெரிந்த அடுத்தநாளே ஜெஸிகா உலகைவிட்டு போனதை நினைத்து குடும்பத்தினர் இன்னும் மீள முடியாத சோகத்தில் உள்ளனர்.

    English summary
    coronavirus: 32 year old woman dies day after coronavirus diagnosis in california
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X