நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகிலேயே முதல்முறை.. நியூயார்க்கில் பெண் புலிக்கு கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி.. எப்படி பரவியது?

அமெரிக்காவில் நியூயார்க்கில் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க்கில் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    பெண் புலிக்கு கொரோனா வைரஸ்.. அமெரிக்காவில் நடந்த அதிச்சி சம்பவம் - வீடியோ

    கொரோனா காரணமாக அமெரிக்காவில் 336,550 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் 9610 பேர் பலியாகி உள்ளனர். நேற்று அமெரிக்காவில் புதிதாக 25000 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது.

    1200 பேர் நேற்று பலியானார்கள். அமெரிக்க வரலாற்றில் நேற்றைய நாள் மிக மோசமானதாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் நியூயார்க்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. நியூயார்க்கில் 123,018 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 4159 பேர் பலியாகி உள்ளனர்

    அந்த 62 மாவட்டங்கள்.. 80% கொரோனா நோயாளிகள்.. இதுதான் 'பரவும் பேட்டர்ன்'.. மத்திய அரசு அதிரடி திட்டம்அந்த 62 மாவட்டங்கள்.. 80% கொரோனா நோயாளிகள்.. இதுதான் 'பரவும் பேட்டர்ன்'.. மத்திய அரசு அதிரடி திட்டம்

    பெண் புலி கொரோனா

    பெண் புலி கொரோனா

    அமெரிக்காவில் நியூயார்க்கில் கொரோனா வைரஸ் இப்படி வேகமாக பரவி வரும் நிலையில் அங்கு பெண் புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரான்க்ஸ் விலங்குகள் சரணாலயத்தில் உள்ள நாடியா என்ற புலிக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. இன்று நடத்தப்பட்ட சோதனையில் அந்த புலிக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதான் முதல் முறை

    இதுதான் முதல் முறை

    உலகிலேயே புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் இருப்பது இதுதான் முதல் முறையாகும். இந்த புலிக்கு 4 வயது ஆகிறது. மலையான் வகை புலி ஆகும் இது. கடந்த சில நாட்களாக கடுமையாக இருமி வந்த இந்த புலிக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அந்த புலிக்கு மோசமான சுவாச பிரச்சனையும் இருந்தது. இந்த பரிசோதனையின் முடிவில் அதற்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இன்னும் 5 புலிகளுக்கு கொரோனா அறிகுறி

    இன்னும் 5 புலிகளுக்கு கொரோனா அறிகுறி

    தற்போது அதே சரணாலயத்தில் இன்னும் 5 புலிகளுக்கு கொரோனா அறிகுறி உள்ளது. இந்த புலிகளுக்கு விரைவில் சோதனை செய்யப்படும். ஆனால் சரணாலயத்தில் இருக்கும் வேறு விலங்குகளுக்கு கொரோனா அறிகுறி இல்லை. தற்போது விலங்குகளுக்கான மருத்துவமனையில் வைத்து இந்த புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    எப்படி கொரோனா வந்தது?

    எப்படி கொரோனா வந்தது?

    எப்படி புலிக்கு கொரோனா வைரஸ் தாக்கியது, அதற்கு எப்படி சிகிச்சை அளிப்பது, இதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று கேள்விகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. அந்த சரணாலயத்தில் பணியாற்றிய நபர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி இல்லாமலே அவருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது .

    English summary
    Coronavirus: A Woman big cat called Nadia gets COVID-19 in New York, First Tiger case in the world.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X