அமெரிக்கா, யு.கேவில் சரிவு.. சர்வதேச அளவில் குறையும் கொரோனா கேஸ்கள்.. முடிவிற்கு வரும் அலை?
நியூயார்க்: உலகம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 1,987,696 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். 354,714,665 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 5,828 பேர் கொரோனாவால் பலயாகி உள்ளனர். 5,621,905 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பாவில் ஓமிக்ரான் பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது.
67,463,461 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். உலகம் முழுக்க 281,629,299 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் சற்றே குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு! முடிவுக்கு வருகிறதா 3ஆம் அலை? முழு தகவல்

இந்தியா
இந்தியாவில் தொடர்ந்து தினசரி கேஸ்கள் 3 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இதுவரை 39,543,328 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 306063 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 489,896 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 474 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 36,804,145 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 2,249,287 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இத்தாலி
இத்தாலியில் 10,001,344பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 77,263 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 143,875 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 352 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் இதுவரை 7,147,612 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அங்கு 2,709,857 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரான்ஸ்
பிரான்சில் தினசரி கேஸ்கள் 1 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. 16,800,913 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 108,481 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் அங்கு 3 லட்சம் கேஸ்கள் பதிவான நிலையில் கேஸ்கள் குறைந்துள்ளது. அங்கு இதுவரை 129,022 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 393 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 10,460,876 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 6,211,015 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்
பிரிட்டனில் தினசரி கேஸ்கள் கடந்த இரண்டு நாட்களாக 1 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. பிரிட்டனில் 15,953,685 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 88,808 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 153,916 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 56 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 12,404,968 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 3,394,801 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

அமெரிக்கா
அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் வேகமாக குறைந்து வருகிறது. அங்கு புதிதாக 425,665 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 72,859,674 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 891,475 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1122 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 44,729,383 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 27,238,816 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.