நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியை திருடும் சீனா.. அமெரிக்கா வெளியிடும் ஆதாரம்.. தொடங்கியது சைபர் வார்?

கொரோனா தடுப்பூசி குறித்த ஆராய்ச்சிகளை சீனா திருடுவதாக அமெரிக்கா வெளிப்படையாக குற்றஞ்சாட்ட தொடங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா தடுப்பூசி குறித்த ஆராய்ச்சிகளை சீனா திருடுவதாக அமெரிக்கா வெளிப்படையாக குற்றஞ்சாட்ட தொடங்கி உள்ளது. விரைவில் இது தொடர்பான ஆதாரங்களை வெளியிடுவோம் என்று சீனா தெரிவித்துள்ளது.

Recommended Video

    கொரோனா தகவல்களை சீனா திருட முயற்சி... அமெரிக்கா குற்றச்சாட்டு

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான பிரச்சனை நிலவி வருகிறது. கொரோனா வைரஸ் உருவாக சீனாதான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை தீவிரமாக ஆராய்ச்சி நடத்தி வருகிறது.

    இன்னொரு பக்கம் வுஹன் வைராலஜி சோதனை மையத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்து இருக்கலாம். அங்கு செய்யப்பட்ட சோதனை தவறாக முடிந்து இருக்கலாம் என்றும் அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.

    கொரோனா இயற்கையான வைரஸ் அல்ல.. ஆய்வகத்திலிருந்து பரவியது.. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கொரோனா இயற்கையான வைரஸ் அல்ல.. ஆய்வகத்திலிருந்து பரவியது.. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

    புதிய குற்றச்சாட்டு

    புதிய குற்றச்சாட்டு

    இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்த ஆராய்ச்சிகளை சீன திருடுவதாக அமெரிக்கா வெளிப்படையாக குற்றஞ்சாட்ட தொடங்கி உள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளில் ஒன்றான எப்ஃபிஐ இந்த புகாரை வைத்துள்ளது. மற்ற நாடுகளின் தடுப்பூசி ஆராய்ச்சி தகவல்களை சீனாவின் ஹேக்கர்கள் குழு திருடுகிறது. இதற்காக சீனா பெரிய ஹேக்கிங் குழுவை களமிறக்கி உள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

    எப்படி ஹேக்கிங் செய்கிறது

    எப்படி ஹேக்கிங் செய்கிறது

    இதற்காக இளம் ஆராய்ச்சியாளர்கள் களமிறங்கி உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் தனியார் கொரோனா ஆராய்ச்சி மையங்களை குறி வைக்கிறார்கள். மருந்து நிறுவனங்களை குறி வைக்கிறார்கள். இங்குதான் பாதுகாப்பு குறைவாக இருக்கும். இங்குதான் எளிதாக கொரோனா தடுப்பூசி குறித்த தகவல்களை ஹேக்கிங் செய்ய முடியும். இதனால் இங்கிருந்து சீன ஹேக்கர்கள் தகவல்களை திருட முயற்சி செய்கிறார்கள்.

    ஏன் இப்படி செய்கிறது

    ஏன் இப்படி செய்கிறது

    இதற்கு அமெரிக்கா காரணம் என்ன என்றும் சொல்லியுள்ளது. உலகம் முழுக்க தடுப்பூசி ஆராய்ச்சிகளை சீனா திருடும். அதன்பின் அந்த ஆராய்ச்சி குறித்த தகவல்களை வைத்து சீனா தனது தடுப்பூசி ஆராய்ச்சியை வேகப்படுத்தும். இதன் மூலம் மற்ற நாடுகளுக்கு முன்பாக சீனா தனது தடுப்பூசியை வெளியே விடும். இதன் மூலம் எளிதாக உலக நாடுகளை சீனா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் என்று அமெரிக்கா கூறுகிறது.

    ஜாக்கிரதையாக இருங்கள்

    ஜாக்கிரதையாக இருங்கள்

    இதனால் எல்லா நாடுகளும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. முக்கியமாக கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியில் முன்னிலையில் இருக்கும் இஸ்ரேல், ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இதில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. கில்லட் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சி குறித்த தகவல்களை கணினிகளில் மிக கவனமாக வைத்திருக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

    ஆதாரம் வெளியிடுவோம்

    ஆதாரம் வெளியிடுவோம்

    இந்த நிலையில் இந்த ஹேக்கிங் தொடர்பாக அமெரிக்கா எந்த விதமான ஆதாரமும் வெளியிடவில்லை. ஆனால் எங்களிடம் நிறைய ஆதாரம் இருக்கிறது. அதிபர் டிரம்பின் அனுமதியை பெற்று இந்த ஆதாரத்தை வெளியிடுவோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. சீனா பல காலமாக செய்வதை இப்போதும் செய்கிறது. விரைவில் இதற்கு சரியான பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

    சீனா மறுப்பு

    சீனா மறுப்பு

    ஆனால் சீனா இதை கடுமையாக மறுத்தும், கண்டித்தும் உள்ளது. நாங்கள் கொரோனா மருந்து ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம். மற்ற நாடுகளை விட இதில் நாங்கள் முன்னிலையில் இருக்கிறோம். அதனால் நாங்கள் இதில் திருட வேண்டிய அவசியம் இல்லை. அமெரிக்காவிற்கு முன் நாங்கள் மருந்து கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது என்று சீனா கூறியுள்ளது. இதனால் இரண்டு நாட்டிற்கும் இடையில் சைபர் வார் தொடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    English summary
    Coronavirus: Aware of China's hackers those who come for vaccine research say FBI in the new warning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X