நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹேக் செய்து திருடுகிறார்கள்.. கொரோனா ஆராய்ச்சியில் சீனா "சைபர் வார்".. அமெரிக்கா ஷாக்கிங் புகார்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா தொடர்பான அமெரிக்காவின் ஆராய்ச்சிகளை சீனாவின் ஹேக்கர்கள் இணையம் மூலம் திருடுவதாக அமெரிக்காவின் எஃப்பிஐ மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறை (Department of Homeland Security) தெரிவித்துள்ளது.

Recommended Video

    China pressured WHO to delay global coronavirus warning ?

    உலகம் முழுக்க கொரோனா தொடர்பான பிரச்சனை நடந்து வரும் அதே நேரத்தில், இணைய உலகத்திலும் இன்னொரு பிரச்சனை நிகழ்ந்து வருகிறது. உலக நாடுகள் கொரோனா குறித்து என்ன விதமான ஆராய்ச்சிகளை செய்கிறது என்று மற்ற நாடுகள் ஹேக்கர்கள் மூலம் டெக்கிகள் மூலம் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

    வியட்நாம், தென்கொரியா ஆகிய நாடுகள் கூட தங்கள் நாட்டு ஹேக்கர்கள் மூலம் அண்டை நாடுகள் என்ன விதமான கொரோனா ஆராய்ச்சிகளை செய்கிறது என்று ஆராய்ந்து வருகிறது. சீனாவும், ரஷ்யாவும் இதில் ஹேக்கர்களை களமிறக்கி தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறது.

    அந்த 2 நாள் தவறு.. தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைய அந்த 2 நாள் தவறு.. தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைய

    சீனா திருடுகிறது

    சீனா திருடுகிறது

    இந்த நிலையில் கொரோனா தொடர்பான அமெரிக்காவின் ஆராய்ச்சிகளை சீனாவின் ஹேக்கர்கள் இணையம் மூலம் திருடுவதாக அமெரிக்காவின் எப்ஃபிஐ மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறை (Department of Homeland Security) தெரிவித்துள்ளது. கொரோனா உருவாக சீனாதான் காரணம் என்று அமெரிக்கா சொல்லி வந்தது. தற்போது புதிதாக ஹேக்கிங் புகாரை சீனா மீது அமெரிக்கா வைத்துள்ளது. கொரோனா தொடர்பான எங்களின் செயலை சீனா கண்காணிக்கிறது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

    எதை எல்லாம் எடுக்கிறது

    எதை எல்லாம் எடுக்கிறது

    அதன்படி ஹேக்கர்கள் உதவியுடன் சீனா, அமெரிக்காவின் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி குறித்த விவரங்களை திருடுகிறது. மேலும் எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது எப்படி டெஸ்டிங் செய்யப்படுகிறது என்பது குறித்து தகவலையும் சீனா திருடுகிறது. இதற்காக பெரிய ஹேக்கர்கள் குழுவை சீனா களமிறக்கி உள்ளது. இணைய ரீதியாக சைபர் வார் போல இதை சீனா செய்கிறது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

    எப்படி வேடம் போடுகிறது

    எப்படி வேடம் போடுகிறது

    இதற்காக அந்நாட்டு ஹேக்கர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் போல வேடம் இடுகிறார்கள். தங்கள் ஆராய்ச்சிக்கு தகவல் கேட்பது போல வரும் இவர்கள், பின் ஹேக்கிங் மூலம் முக்கிய தகவல்களை திருடுகிறார்கள். இவர்கள் அதிகமாக ஆராய்ச்சி மருத்துவமனைகள், தனியார் கொரோனா சோதனை மையங்கள் ஆகியவற்றை குறி வைக்கிறார்கள். இங்குதான் எளிதாக ஹேக்கிங் செய்ய முடியும். அதனால் அவர்கள் அதை குறி வைக்கிறார்கள் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

    பதிலடி கொடுத்துள்ளது

    பதிலடி கொடுத்துள்ளது

    இதற்கு தக்க பதிலடி கொடுத்து இருக்கிறோம் என்று அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை (Department of Homeland Security) தெரிவித்துள்ளது. இதற்காக நாங்கள் பல வருடங்களாக பயிற்சி எடுத்தோம். சீனாவின் ஹேக்கிங் முயற்சியை முறியடித்து இருக்கிறோம். அதேபோல் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த அனுமதியின் பெயரில் சீனாவிற்கு இணையம் மூலம் திருப்பி கொடுத்து இருக்கிறோம். நாங்கள் எங்கள் பணியை தொடர்ந்து செய்வோம் என்று உள்நாட்டு பாதுகாப்பு துறை (Department of Homeland Security) தெரிவித்துள்ளது.

    என்ன புகார் வைக்கிறது

    என்ன புகார் வைக்கிறது

    சீனா இப்படி இணையம் மூலம் குற்றங்களை செய்வது வழக்கம்தான். எல்லோரும் இது தெரிந்தது. கொரோனா சமயத்திலும் அந்த நாடு இப்படி செய்வது அதிர்ச்சி தருகிறது என்று உள்நாட்டு பாதுகாப்பு துறை (Department of Homeland Security) தெரிவித்துள்ளது. ஏற்கனவே தென் சீன கடல் எல்லையில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கு இடையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வர்த்தக போர் நடக்க உள்ளது. தற்போது அதில் சைபர் யுத்தமும் சேர்ந்து கொண்டது.

    English summary
    Coronavirus: China is hacking the research on COVID 19 vaccines says US.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X