நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எங்கே பரவ கூடாது என்று நினைத்தார்களோ.. அங்கேயே வந்துவிட்டது.. 'ஹு'விற்கு கொரோனா கொடுத்த ஷாக்!

நைஜீரியா உள்ளிட்ட ஏழ்மையான நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: நைஜீரியா உள்ளிட்ட ஏழ்மையான நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. உலக சுகாதார மையத்தை இந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் யாரும் எதிர்பார்க்காத வேகத்தை எடுத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் கொரோனா வைரஸ் காரணமாக 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆம், இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் காரணமாக 73824 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர்.

தற்போது இதன் மொத்த எண்ணிக்கை 78824 ஐ தொட்டு இருக்கிறது. அவ்வளவு வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதேபோல் கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 2778 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா.. மளமளவென சரிந்த கச்சா எண்ணெய் விலை.. பின்னணி! மத்திய கிழக்கு நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா.. மளமளவென சரிந்த கச்சா எண்ணெய் விலை.. பின்னணி!

எப்படி முடங்கியது

எப்படி முடங்கியது

முதலில் 22 நாடாவுகளில் மட்டுமே பரவியதாக கருதப்பட்ட இந்த வைரஸ் தற்போது 30 நாடுகளில் பரவி உள்ளது. பாகிஸ்தானில் 3 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது. ஜப்பானில் இந்த வைரஸ் 10 பேருக்கும் அதிகமாக தாக்கி இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் மொத்தம் 7 நாடுகள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஈரான் மொத்தமாக முடங்கி இருக்கிறது.

தென் கொரியா

தென் கொரியா

அதேபோல் தென் கொரியாவில் இந்த வைரஸ் சீனாவை விட வேகமாக பரவி வருகிறது. தென் கொரியாவில் மொத்தம் 2500 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது. 44 ராணுவ வீரர்களுக்கும் இந்த வைரஸ் தாக்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் கொரோனா வைரஸ் நைஜீரியாவிற்கும் பரவி உள்ளது. ஹு என்று அழைக்கப்படும் உலக சுகாதார மையம் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஏன் அதிர்ச்சி

ஏன் அதிர்ச்சி

ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் மட்டும்தான் கொரோனா பரவி வருகிறது என்று உலக சுகாதார மையம் நம்பியது. ஆனால் தற்போது தொடர்பே இல்லாமல் துணை சஹாரன் நாடுகளிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. அதன் ஒரு கட்டமாக நைஜீரியாவில் தற்போது வைரஸ் பரவி உள்ளது. நைஜீரியாவில் வசிக்கும் இத்தாலி இளைஞர் ஒருவருக்கு வைரஸ் ஏற்பட்டுள்ளது.

ஏழ்மையான நைஜிரியா

ஏழ்மையான நைஜிரியா

உலகில் இருக்கும் நாடுகளில் நைஜீரியா மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். இப்படிபட்ட நைஜிரியாவில் பெரிய அளவில் மருத்துவ வசதிகள் இல்லை. இந்த நிலையில் அங்கு கொரோனா பிறவி இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்ரிக்க நாடுகள், நைஜீரியா போன்ற நாடுகளில் இந்த வைரஸை கட்டுப்படுத்துவது கடினம். அதனால் இங்கு வைரஸ் பரவாமல் இருக்க வேண்டும் என்று ஹு முயற்சி செய்து வந்தது.

நடந்துவிட்டது

நடந்துவிட்டது

ஆனால் ஹு பயந்தது போலவே தற்போது நைஜீரியாவிற்கும் வைரஸ் பரவி உள்ளது. மேலும் மங்கோலியாவிற்கும் இந்த வைரஸ் பரவி உள்ளது. அங்கு மங்கோலியன் அதிபர் கால்ட்மாகின் பட்டுல்கா தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார். ஏழை நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவுவது பெரிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால்தான் சர்வதேச மார்க்கெட் சரிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Coronavirus: COVID -19 spreads to Nigeria too, WHO losts hope finally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X