நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் 77 ஆயிரத்தை நெருங்குகிறது- ரஷ்யாவிலும் அதிக பாதிப்பு

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் எண்ணிக்கை 77 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 76,928 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் மொத்தம் 39,17,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,70,720 ஆகவும் அதிகரித்திருக்கிறது. இன்னொரு புறம் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 13,44,120 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா.. அதிகாலையில் அடுத்தடுத்த 4 மரணங்கள்.. கோயம்பேடு வியாபாரி திடீர் பலி.. சென்னையில் அதிர்ச்சி! கொரோனா.. அதிகாலையில் அடுத்தடுத்த 4 மரணங்கள்.. கோயம்பேடு வியாபாரி திடீர் பலி.. சென்னையில் அதிர்ச்சி!

அமெரிக்காவில் 76,928 பேர் மரணம்

அமெரிக்காவில் 76,928 பேர் மரணம்

கொரோனாவின் இந்த தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உலக நாடுகளில் அமெரிக்காவில்தான் மிக மோசமான கொரோனா தாக்கம் உள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,92,623. அமெரிக்காவில்தான் உலக நாடுகளிலேயே மிக மோசமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை 76,928 பேர் அமெரிக்காவில் மரணமடைந்துள்ளனர்.

இங்கிலாந்து, இத்தாலி

இங்கிலாந்து, இத்தாலி

அமெரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்தில் கொரோனா மரணங்கள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. இங்கிலாந்து நாட்டில் மொத்தம் 30,615 கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,06,715 ஆகும். இங்கிலாந்தைத் தொடர்ந்து இத்தாலியில் மொத்தம் 29,958 பேர் மரணமடைந்துள்ளனர். இத்தாலியில் மொத்தம் 2,15,858 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

Recommended Video

    World's First Coronavirus Vaccine Developed in Italy
    4-வது இடத்தில் ஸ்பெயின்

    4-வது இடத்தில் ஸ்பெயின்

    உலக நாடுகளவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ள நாடுகளில் 4-வது இடத்தில் உள்ளது ஸ்பெயின். இங்கு மொத்தம் 2,56,855 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றார். அதேநேரத்தில் கொரோனா மரணங்கள் என்பது 26,070 ஆக இருக்கிறது. 5-வது இடத்தில் இருப்பது பிரான்ஸ். இங்கு மொத்தம் 1,74,791 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பிரான்ஸில் மொத்த மரணமடைந்தோர் எண்ணிக்கை 25,987 ஆகும்.

    ரஷ்யாவில் கொரோனா தாக்கம் அதிகம்

    ரஷ்யாவில் கொரோனா தாக்கம் அதிகம்

    பிற நாடுகளின் உயிரிழப்பு விவரங்கள்: பிரேஸில் 9,190 ; பெல்ஜியம் 8,415; ஜெர்மனி 7,392 ; ஈரான் 6,486; நெதர்லாந்து 5,288 ; சீனா 4,633. ரஷ்யாவில் திடீரென கொரோனாவின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,77,160 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் கொரோனாவுக்கு இதுவரை 1,625 பேர் உயிரிழந்துள்ளனர்.

    English summary
    According to Johns Hopkins University reports t otal death toll in US rise to 76,928 due to the coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X