ஓவர் ஸ்பீடு எடுத்த ஒமிக்ரான்.. ஒரே மாதத்தில் 1 கோடி பேருக்கு தொற்று.. கதிகலங்கி நிற்கும் அமெரிக்கா
நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனாவைரஸ் தொற்றின் ஒட்டுமொத்த பாதிப்பு 6 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது.. 8 லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்துள்ளதாக ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் தொற்று இன்னும் நீங்காமல் உள்ளது.. இதில் தொற்று பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது...
முழு ஊரடங்கு: அப்படியே சைக்கிளை எடுத்து.. 5 கி.மீ ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்.. வியந்து போன மக்கள்!
கடந்த வாரம் மட்டும் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.. இது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது..

வைரஸ்
ஒமிக்ரான் வைரஸ் ஒரு பக்கம் பரவி வந்தாலும், அதற்கு முன்பாகவே அமெரிக்காவில் கொரோனா கேஸ்கள் பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கிவிட்டது... இதில் படுமோசமாக பாதிப்புக்கு ஆளாகி உள்ளது நியூயார்க்தான்.. காரணம், டெல்டா வைரஸ் அமெரிக்காவை கதிகலங்க வைத்துவிட்டது.. இப்போது ஒமிக்ரானும் சேர்ந்து கொண்டுள்ளதால், தொற்று பாதிப்பு தினமும் 4 லட்சத்தை தாண்டி செல்ல ஆரம்பித்துள்ளது.

மொத்த எண்ணிக்கை
இப்போது அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6 கோடியே 62 ஆயிரத்து 77ஆக அதிகரித்துள்ளது என்றும், மொத்த உயிரிழப்பானது 8 லட்சத்து 37ஆயிரத்து 504ஆக உயர்ந்துள்ளது என்றும் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது. இதுவே கடந்தாண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்றின் மொத்த எண்ணிக்கை 2 கோடியை எட்டிய நிலையில், மார்ச் மாதம் 3 கோடியை நெருங்கிவிட்டது..

அதிகரிப்பு
அப்போதுதான் ஏராளமான கட்டுப்பாடுகள் அமெரிக்காவில் போடப்பட்டன.. எனவே ஓரளவு தொற்று பாதிப்பும் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது.. எனினும், செப்டம்பர் மாதம் மறுபடியும் அதிகரிக்க துவங்கியது.. அந்த மாதமே பாதிப்பு எண்ணிக்கையானது 4 கோடியை எட்டியது.. டிசம்பர் 13ம் தேதி 5 கோடியை எட்டியிருந்த நிலையில், நேற்றைய தினம் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் 6 கோடியை தொட்டிருக்கிறது.

பகீர் ஆய்வு
அதாவது ஒரே மாதத்தில் 1 கோடி பேர் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்... இதற்கெல்லாம் காரணம் ஒமிக்ரான்தான் என்கிறார்கள்.. அதாவது உலகளவில் கொரோனாவைரஸ் பாதிப்பில் 20 சதவீதம் பேர் அமெரிக்காவில்தான் இருக்கிறார்களாம்.. அதேபோல உயிரிழப்பில் 15 சதவீதம் அமெரிக்காவில்தான் நடந்தது என்கிறது அந்த பகீர் ஆய்வு.. ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், முக்கிய தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட துவங்கி உள்ளது.