நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா.. இது கடைசி பெருந்தொற்று அல்ல.. அடுத்த தொற்றுக்கு தயார் ஆகுங்கள்.. எச்சரிக்கை விடுக்கும் ஹு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா வைரஸ் கடைசி பெருந்தொற்று அல்ல இன்னொரு பெருந்தொற்று ஏற்படும், அதற்கு உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா நோய் தொற்று கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கியது. இன்னும் இதன் தோற்றம் குறித்து சந்தேகங்கள் நிலவி வருகிறது. கொரோனா நோய் தொற்றை pandemic என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

அதாவது பெருந்தொற்று என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. உலகம் முழுக்க பல நாடுகளில் பரவும் தொற்று நோய்களை பெருந்தொற்று என்று அழைப்பார்கள். பிளேக், இன்புளுயன்சா ஆகிய நோய்கள் பெருந்தொற்று என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் மரபணு மாற்றம்...தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு தடையாக...இருக்கிறதா? கொரோனா வைரஸ் மரபணு மாற்றம்...தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு தடையாக...இருக்கிறதா?

பெருந்தொற்று எப்படி

பெருந்தொற்று எப்படி

இந்த நிலையில்தான் அடுத்த பெருந்தொற்று ஒன்றுக்கு தயாராகும்படி உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்த கொரோனா பெருந்தொற்றே முடியாத நிலையில் அடுத்த பெருந்தொற்று ஏற்படும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார மையம் தலைவர் டெட்ராஸ் ஆதனாம் கவலை எழுப்பி உள்ளார். அதன்படி இந்த கொரோனா பெருந்தொற்று என்பது கடைசியானது இல்லை.

அடுத்து வரும்

அடுத்து வரும்

அடுத்த பெருந்தொற்று எப்போது வேண்டுமானாலும் வரலாம். நாம் அடுத்த பெருந்தொற்று வரும் முன்பே அதற்கு தயாராக வேண்டும். பெருந்தொற்றை நாம் இதை விட சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும். இப்போதே சுகாதாரத்துறை மீது நாம் அதிக முதலீடு செய்ய வேண்டும். உலகம் முழுக்க மருத்துவ துறை மீது அனைத்து நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும்.

மிக முக்கியம்

மிக முக்கியம்

நமக்கு வரலாறு நிறைய பாடம் எடுத்து உள்ளது. கொரோனா வைரஸ் போன்ற மீண்டும் ஒரு வைரஸ் தாக்குதல் வரலாம். மீண்டும் மீண்டும் பெருந்தொற்று ஏற்படும் என்பதே உண்மை . இது மனித வாழ்க்கையில் ஒரு அங்கம்.ஆனால் அடுத்த பெருந்தொற்று வரும் போது, நாம் அதற்கு தயாராக வேண்டும். உலகம் முழுக்க பொது சுகாதாரம் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

கொரோனா எப்படி

கொரோனா எப்படி

கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நம்மை விட்டு செல்லவில்லை. இப்போது தளர்வுகளை சில நாடுகள் அறிவித்துள்ளது. ஆனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து மக்கள் முழுமையாக இன்னும் விடப்படவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். பொது பாதுகாப்பு விதிகள் மக்களை பின்பற்ற வேண்டும் என்று டெட்ராஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.

English summary
Coronavirus is not the end, the World will another pandemic soon says WHO chief in the press briefings .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X