நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வைரஸ் தாக்குதல்.. அமெரிக்கா மீது சீனா தொடுத்த போரா?.. டிரம்ப் சொன்ன பரபரப்பு பதில்!

கொரோனா வைரஸ் தாக்குதல் அமெரிக்கா மீது சீனா தொடுத்த போரா என்று கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா வைரஸ் தாக்குதல் அமெரிக்கா மீது சீனா தொடுத்த போரா என்று கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில் அளித்துள்ளார்.

Recommended Video

    அமெரிக்கா மீது சீனா தொடுத்த போரா? டிரம்ப் சொன்ன பதில்

    கொரோனா வைரஸ் காரணமாக உலகில் அமெரிக்காதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தம் 1,263,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 74799 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

    கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் கடுமையான சண்டை வந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவ சீனாதான் காரணம் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது குற்றச்சாட்டில் மிகவும் உறுதியாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    வெறும் 10 நாளில் இரட்டிப்பு ஆனது.. 50 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு.. இந்தியாவில் கொரோனா தாண்டவம்! வெறும் 10 நாளில் இரட்டிப்பு ஆனது.. 50 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு.. இந்தியாவில் கொரோனா தாண்டவம்!

    பேட்டி அளித்தார்

    பேட்டி அளித்தார்

    இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி அளித்துள்ளார். அதில், கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் கொஞ்சம் குறைய தொடங்கி உள்ளது. நாம் தொழில்களை வேகமாக தொடங்கியாக வேண்டும். கொரோனாவிற்கு எதிராக நான் அமைத்த டாஸ்க் போர்ஸ் எப்போதும் போல பணிகளை செய்யும். மருந்து கண்டுபிடிப்பதில் இவர்கள் தீவிரம் காட்டுவார்கள்.

    வைரஸ் எப்படி வந்தது

    வைரஸ் எப்படி வந்தது

    மக்களை குணப்படுத்தி எப்படி மீண்டும் பணிகளை தொடங்குவது என்பதில் இவர்கள் கவனம் செலுத்துவார்கள். இன்னொரு பக்கம் இந்த வைரஸ் குறித்தும் இவர்கள் ஆராய்ச்சி செய்வார்கள். இந்த வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது குறித்தும் இவர்கள் ஆராய்ச்சி செய்வார்கள். விரைவில் இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படையாக அறிவிப்போம்.

    மிக மோசமான தாக்குதல்

    மிக மோசமான தாக்குதல்

    அமெரிக்காவில் நடந்த இந்த கொரோனா தாக்குதலை இரண்டாம் உலகப்போரின் போதும் ஜப்பான் அமெரிக்கா மீது நடத்திய பேர்ல் ஹார்பர் தாக்குதலை விட மோசமானது. அதில் பலர் பலியானார்கள். அதேபோல் 2011ல் நடந்த 911 தாக்குதலை விட இது மோசமானது. ஈராக் - அமெரிக்கா போரைவிட இது கடினமானது. அமெரிக்கா வரலாற்றில் இது மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும்.

    இது ஒரு போர்

    இது ஒரு போர்

    நாம் சீனா அமெரிக்கா மீது தொடுத்த போர் என்று இதை பார்க்க வேண்டும். சீனாவை விட அமெரிக்காவிற்கு முதல் எதிரி இந்த வைரஸ்தான். இது இந்த வைரசுக்கு எதிரான போராட்டம். சீனா நினைத்து இருந்தால் இந்த பிரச்சனையை தடுத்து இருக்கலாம். ஆனால் சீனா வேண்டும் என்றே பிரச்சனை வளரட்டும் என்று விட்டுள்ளது. இதற்கு சீனா மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்று டிரம்ப் கூறியுள்ளார்.

    English summary
    Coronavirus: It is not a war with China but a war with the virus says US Donald President Trump.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X