நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புரிகிறது.. மதிக்கிறேன்.. சீன அதிபருக்கு போன் செய்த டிரம்ப்.. திடீர் மன மாற்றம்.. என்ன பேசினார்கள்?

கொரோனா வைரஸ் குறித்து சர்ச்சையாக கருத்து தெரிவித்து வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா வைரஸ் குறித்து சர்ச்சையாக கருத்து தெரிவித்து வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்.

Recommended Video

    சீனா உலகை எச்சரிக்காதது ஏன்? என்ன நடந்தது

    சீனா கொரோனா குறித்து எச்சரிக்கவில்லை, அவர்கள் இதை பற்றி எச்சரித்து இருந்தால் நாங்கள் தப்பித்து இருப்போம். உலகமே கொரோனா என்ற பேரிடரில் இருந்து தப்பித்து இருக்கும். ஆனால் சீனா மக்களை எச்சரிக்கவில்லை.

    சீன வைரஸ் காரணமாக உலகமே தற்போது நிலைகுலைந்து போய் உள்ளது. சீன அரசின் அலட்சியம்தான் இந்த சீன வைரஸ் உலகம் முழுக்க பரவ காரணம். அவர்கள்தான் இதற்கு முழு பொறுப்பு.

    நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் 2 வயது குழந்தை உள்பட 3 பேர் மரணம் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் 2 வயது குழந்தை உள்பட 3 பேர் மரணம்

    டிரம்ப் பேச்சு

    டிரம்ப் பேச்சு

    ஆம், உலகமே கொரோனா வைரஸை கொரோனா என்று அழைத்த போது அதை சீன வைரஸ் என்று அழைத்தார் டிரம்ப். தன்னுடைய பேச்சுக்களில் எல்லாம் டிரம்ப் சீனாவை மிக கடுமையாக விமர்சனம் செய்தார். சீனாதான் இதற்கு காரணம் என்பதை தனது பேச்சுக்களில் எல்லாம் மீண்டும் மீண்டும் அழுத்தமாக பதிய வைத்துக் கொண்டே இருந்தார். அமெரிக்கர்களும் டிரம்ப் போலவே சீனாவை மிக கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    அமெரிக்கா நிலை

    அமெரிக்கா நிலை

    ஆனால் போக போக சீனா தனது நாட்டில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியது. மாறாக அமெரிக்கா கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மோசமாக திணறியது. அமெரிக்காவில் மொத்தம் 104,256 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 1,704 பேர் பலியாகி உள்ளனர். ஆனால சீனாவில் 81,394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 4000 பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 74,971 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர்.

    மிக மோசமாக திணறல்

    மிக மோசமாக திணறல்

    சீனா இதில் இருந்து மீண்டும் வரும் நிலையில் சீனாவை கிண்டல் செய்து கொண்டு இருந்த அமெரிக்கா மிக மோசமாக கொரோனாவிற்கு எதிராக திணறி வருகிறது. வருகிற நாட்களில் அமெரிக்காவில் கொரோனா காரணமாக பலி எண்ணிக்கை அதிகம் ஆகலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில்தான் கொரோனா குறித்த தீவிரத்தை அமெரிக்கா உணர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இப்போதுதான் இது சைனீஸ் வைரஸ் கிடையாது, இது உலக அச்சுறுத்தல் என்பதை உணர்ந்துள்ளார்.

    சீன அதிபரிடம் பேசினார்

    சீன அதிபரிடம் பேசினார்

    கொரோனா வைரஸ் குறித்து சர்ச்சையாக கருத்து தெரிவித்து வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார். நேற்று மதியம் இரண்டு நாட்டு தலைவர்களும் கொரோனா குறித்து விவாதம் செய்தனர். சீனாவிடம் நேரடியாக டிரம்ப் உதவி கேட்டு இருக்கிறார். கொரோனா குறித்து உங்களுக்குத்தான் அதிகம் தெரியும், அதனால் எங்களுக்கு உதவ வேண்டும் என்று, டிரம்ப் கேட்டு இருக்கிறார்.

    டிவிட் செய்தார்

    இந்த நிலையில் இந்த ஆலோசனைக்கு பின் டிரம்ப் அதுகுறித்து டிவிட் செய்தார், அதில், சீனாவின் அதிபர் உடன் கொரோனா குறித்து பேசினேன். சீனா பல விஷயங்களை கடந்து வந்து இருக்கிறது. கொரோனா குறித்து அவர்களுக்கு நிறைய தெரியும். நாம் இதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். அவர்களை மதிக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார். சைனீஸ் வைரஸ் என்று குறிப்பிட்டு கிண்டல் செய்த டிரம்ப், தற்போது மனம் மாறி கொரோனா வைரஸ் என்று முதல் முறையாக குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    Coronavirus: Much respect, What changed President Trump mind after a phone call with Chinese counterpart.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X