நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் தவறு செய்யவில்லை... கொரோனா பரவ ஒபாமாதான் காரணம்.. பழியை தூக்கி போட்ட டிரம்ப்.. பகீர்!

அமெரிக்காவில் கொரோனா தீவிரமாக பரவ காரணமே முன்னாள் அதிபர் ஒபாமாதான், அவர் செய்த தவறான முடிவுகள்தான் இதற்கு காரணம் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா தீவிரமாக பரவ காரணமே முன்னாள் அதிபர் ஒபாமாதான், அவர் செய்த தவறான முடிவுகள்தான் இதற்கு காரணம் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Recommended Video

    ஒபாமாவின் தவறு தான் கொரோனா வைரஸ் பரவ காரணம் - டிரம்ப் குற்றச்சாட்டு

    கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா தோல்வியை சந்திக்க தொடங்கி உள்ளது. அமெரிக்காதான் கொரோனா காரணமாக உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு அமெரிக்காவில் கொரோனா காரணமாக 587,173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மொத்தம் 20644 பேர் அமெரிக்காவில் பலியாகி உள்ளனர். நியூயார்க்கில் மட்டும் 10056 பேர் பலியாகி உள்ளனர். அங்கு 195,655 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்கா கொரோனாவிடம் பெரிய அளவில் தோல்வி அடைந்துள்ளது.

    டிரம்ப் பழி போடுகிறார்

    டிரம்ப் பழி போடுகிறார்

    கொரோனாவிற்கு எதிரான தோல்வி காரணமாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் யார் மீதெல்லாம் பழி போட முடியும் என்று பார்த்து வருகிறார். முதலில் சீனா மீது அமெரிக்கா அதிபர் டிரம்ப் பழியை போட்டார். ஆனால் சீனாவின் உதவி தேவை என்பதால் சீனாவை விமர்சனம் செய்வதை நிறுத்தினார். அதன்பின் உலக சுகாதார மையத்தை விமர்சனம் செய்தார். இது உலக நாடுகளுக்கு கோபத்தை உண்டாக்கியது. இந்த நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னாள் அதிபர் ஒபாமா மீது பழி போட தொடங்கி உள்ளார்.

     ஒபாமா செய்த தவறு

    ஒபாமா செய்த தவறு

    டிரம்ப் தனது பேச்சில், கொரோனாவிற்கு எதிராக நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம். அமெரிக்காவின் இந்த பின்னடைவுக்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. எங்களுக்கு இருக்கும் சூழ்நிலை இதுதான். எங்களுக்கு இருக்கும் சூழ்நிலைக்குள் நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம். என்னால் இந்த தவறுகளுக்கு பொறுப்பேற்க முடியாது. எங்களுக்கு முன்னாள் இருந்தவர்கள் செய்த தவறு இது.

    தவறான விதிகள்

    தவறான விதிகள்

    எங்களுக்கு முன்பு இருந்தவர்கள் தவறான விதிகள், திட்டங்களை வகுத்து இருக்கிறார்கள். அந்த விதிகளை வைத்துக் கொண்டு கொரோனா போன்ற பெரிய பேரிடரை சமாளிக்க முடியாது. இப்படி ஒரு பெரிய பேரிடரை கருத்தில் கொண்டு அந்த விதிகளை முன்னாள் அதிபர் ஒபாமா உருவாக்கவில்லை. அமெரிக்காவில் இதற்கு முன் பன்றிக்காய்ச்சல், எச்1என்1 ஆகிய வைரஸ்களை இப்படித்தான் எதிர்கொண்டது. அப்போதும் அமெரிக்கா பெரிய அளவில் டெஸ்ட் செய்யவில்லை.

    அமெரிக்கா டெஸ்ட் செய்யவில்லை

    அமெரிக்கா டெஸ்ட் செய்யவில்லை

    எச்1என்1 வைரஸ் வந்த போது அமெரிக்கா இப்படி பெரிய டெஸ்ட்களை செய்யவில்லை. இதனால் ஒபாமா இருந்த போது 14 ஆயிரம் பேர் பலியானார்கள். அவர்கள் கொண்டு வந்த சில சட்டம் காரணமாக மக்களை டெஸ்ட் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது ஒபாமா கொண்டு வந்த இந்த சட்டம்தான் இன்று எங்களுக்கும் தடையாக இருக்கிறது. இந்த வைரஸ் தீவிரம் எடுக்க அவர்தான் காரணம். கொரோனா டெஸ்ட் செய்ய இதுதான் தடையாக இருக்கிறது. அதை நாங்கள் மாற்றி இருக்கிறோம்.

    ஒபாமா கொண்டு வந்த சட்டத்தை மாற்றினோம்

    ஒபாமா கொண்டு வந்த சட்டத்தை மாற்றினோம்

    நாங்கள் இறுதியாக ஒபாமா கொண்டு வந்த சட்டத்தை மாற்றினோம். இனிமேல் கொரோனா சோதனைகளை விரைவாக மேற்கொள்வோம். இனிமேல் வேகமாக சோதனைகளை செய்வோம். உடனே முடிவுகளை அறிவிப்போம். இதனால் விரைவில் அமெரிக்கா கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வரும் என்று நம்புகிறோம், என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Coronavirus: Obama and his rules are the reason for the COVID-19 attack says, USA president Trump.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X