நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவை விட இதுதான் நமக்கு டேஞ்சர்.. முட்டாள்தனமாக இருக்காதீர்கள்.. எலோன் மஸ்க் அதிர்ச்சி!

கொரோனா வைரஸை பார்த்து பயப்படுவது முட்டாள்தனமான விஷயம் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா வைரஸை பார்த்து பயப்படுவது முட்டாள்தனமான விஷயம் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    'கொரோனா... இன்று!' 'ஒன் இந்தியா' டெய்லி ஸ்பெஷல் அப்டேட்!

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் அடிக்கடி எதையாவது வித்தியாசமாக செய்து மக்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்குவார். செவ்வாய் கிரகத்திற்கு காரை அனுப்புவது, தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்க சிறிய நீர்மூழ்கி கப்பலை உருவாக்குவது என்று வித்தியாச வித்தியாசமாக எதாவது செய்வார்.

    தற்போது இவர் அமெரிக்காவை கொடுமையாக தாக்கியுள்ள கொரோனா வைரஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக 3,782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 69 பேர் பலியாகி உள்ளனர்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    இந்த நிலையில் கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலோன் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கொரோனா வைரஸ் அச்சம் என்பது முட்டாள்தனமானது. நீங்கள் இந்த வைரஸை பார்த்து பயப்பட கூடாது. நீங்கள் கார் விபத்தில் பலியாகவே வாய்ப்புகள் அதிகம். அமெரிக்காவில் விபத்து காரணமாக ஒருவர் பலியாகவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    கொரோனா மூலம் ஒருவர் பலியாவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். அதேபோல் அமெரிக்கர்களுக்கு வேறு சில நோய்கள்தான் பிரச்சனை. கொரோனா அவர்களின் முக்கிய பிரச்சனை கிடையாது. அதனால் இதன் மீது அதிகம் கவனம் செலுத்த கூடாது என்று எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து இணையம் முழுக்க பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    பலர் எதிர்ப்பு

    பலர் எதிர்ப்பு

    எலோனுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளனர். நெட்டிசன்கள் பலர் அவரை முட்டாள் என்று கிண்டல் செய்து வருகிறார்கள். அதே சமயம் இன்னொரு பக்கம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும், டெஸ்லா நிறுவனமும் தங்கள் நிறுவனத்தில் எந்த விதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. அதாவது மாஸ்க் அணிவது, கைகளை கழுவுவது, அலுவலகத்தில் பூச்சு மருந்து அடிப்பது என்று எந்த விதமான கட்டுப்பாடுகளையும் அந்த நிறுவனம் மேற்கொள்ளவில்லை.

    மிக மோசம் எப்படி

    மிக மோசம் எப்படி

    கொரோனா வைரஸை எலோன் மிக மோசமாக மதிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இன்னொரு பக்கம் இந்த வைரஸ் காரணமாக அவர் முக்கிய வழக்கு ஒன்றில் இருந்தே தப்பித்து உள்ளார். ஆம், அவருக்கு எதிராக நிதி முறைகேடு வழக்கு அமெரிக்காவில் நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக, இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்று அவரை நீதிபதிகள் விசாரிக்க வேண்டிய சூழ்நிலை நிலவியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Coronavirus panic is a dumb says Elon Musk, Founder of Space X.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X