நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவர்களை சுட்டு வீழ்த்துங்கள்.. கோபமாக உத்தரவிட்ட டிரம்ப்.. கொரோனாவிற்கு இடையே உருவான புது பதற்றம்!

கொரோனாவிற்கு இடையே அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் கடுமையான சண்டை ஏற்பட தொடங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனாவிற்கு இடையே அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் கடுமையான சண்டை ஏற்பட தொடங்கி உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இது மிகப்பெரிய பிரச்சனையாக வெடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Recommended Video

    கொரோனாவுக்கு டிரம்ப் சொன்ன பகீர் தீர்வு... கொந்தளித்த மருத்துவர்கள்

    உலகமே கொரோனாவிற்கு எதிராக கடுமையாக போராடிக்கொண்டு இருக்கிறது. அமெரிக்கா கொரோனாவிடம் மொத்தமாக அடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அங்கு கொரோனா கேஸ்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. அங்கு கொரோனா காரணமாக 886,709 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுவரை அமெரிக்காவில் 50 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இன்னொரு பக்கம் ஈரானில் 87,026 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5500 பேர் பலியாகி உள்ளனர். உண்மையான பலி எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.

    என்ன சண்டை

    என்ன சண்டை

    இப்படி இருக்கும் நிலையில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் டிரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி அந்நாட்டை மொத்தமாக கட்டுப்படுத்தி வந்தவர்.

    கொலை செய்யப்பட்டார்

    கொலை செய்யப்பட்டார்

    அந்நாட்டிலேயே அதிக சக்தி வாய்ந்த நபர் இவர்தான். ஈரானில் முக்கிய முடிவுகளை எடுக்க கூடிய ராணுவ தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்கா மீது அப்போதில் இருந்தே ஈரான் கடும் கோபத்தில் இருந்தது. தற்போது அமெரிக்கா கொரோனா காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகள் மீது கவனம் செலுத்தும் நிலையில் அமெரிக்கா இல்லை. இதை பயன்படுத்திக் கொண்டு அமெரிக்காவை ஈரான் சீண்ட தொடங்கி உள்ளது.

    சீண்ட முடிவு

    சீண்ட முடிவு

    ஒரு பக்கம் தென் சீன கடல் எல்லையில் சீனா எல்லை மீறி வருகிறது. இது அமெரிக்காவை எரிச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் தற்போது பெர்ஷியன் கடலில் ஈரான் அத்துமீறி வருகிறது. அமெரிக்கா ரோந்து செல்லும் பகுதிகளில் ஈரானின் சிறு சிறு ஆயுதம் தாங்கிய கப்பல்கள் அத்துமீற தொடங்கி உள்ளது. துப்பாக்கி மூலம் தாக்கும் கப்பல்கள் மூலம் கடல் எல்லையில் அத்துமீற தொடங்கி உள்ளது.

    வேகமாக சென்றது

    வேகமாக சென்றது

    இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் இந்த கடல் பகுதியில் அமெரிக்காவின் இரண்டு கடற்படை கப்பல்கள் சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக ஈரான் ராணுவ படையின் இந்த கப்பல்கள் வந்துள்ளது. அமெரிக்க ராணுவ கப்பல்களை தாக்குவது போல மிக அருகில் இந்த கப்பல் வந்துள்ளது. 9 மீ தூரம் வரை இந்த கப்பல் அருகே வந்து இருக்கிறது. ஆனால் அமெரிக்க கப்பல் அருகே வந்த இந்த ஈரான் கப்பல்கள் அமெரிக்க கப்பல்களை தாக்கவில்லை.

    அமெரிக்கா கோபம்

    அமெரிக்கா கோபம்

    இப்படி ஒரு நாட்டு கடற்படையின் அருகே இன்னொரு நாட்டின் கடற்படை கப்பல் வருவது போருக்கு அழைப்பு விடுப்பது போன்றது. இதுதான் அமெரிக்கா ஈரான் இடையிலான புதிய மோதலுக்கு காரணம் ஆகும். இதை அறிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், பெர்ஷியன் கடல் எல்லையில் ஈரான் அத்து மீறினால் உடனே அவர்களை சுட்டு தள்ளுங்கள் என்று உத்தரவிட்டு உள்ளார். யாராக இருந்தாலும் சுட்டுத்தள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

    ஈரானும் பதிலடி

    ஈரானும் பதிலடி

    இன்னொரு பக்கம் ஈரானும், அமெரிக்க நமது எல்லையில் அத்துமீறினால் உடனே அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்துங்கள் என்று அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் அமெரிக்கா பெரிய அளவில் ராணுவ நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தாது என்பதால் ஈரான் இப்படி அத்துமீற தொடங்கி உள்ளது. முக்கியமான பெர்ஷியன் கடலில் ஆதிக்கம் செலுத்த ஈரான் திட்டமிட்டு வருகிறது.

    ஒரே திட்டம்

    ஒரே திட்டம்

    எப்படியாவது பெர்ஷியன் கடலில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை போக்கிவிட்டு அங்கு இடம் பிடிக்கலாம் என்று ஈரான் நினைக்கிறது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இப்போதும் கூட ஈரான் படைகள் மீது தாக்குதல் நடத்தும்படி கூறியுள்ளார். இதனால் கொரோனாவிற்கு இடையே வேறு விதமான பதற்றம் ஒன்று உலக நாடுகளுக்கு இடையே தோன்றி உள்ளது. இது எங்கே போய் முடியும் என்று கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Coronavirus: Shoot them says UN President Trump against Iran amid pandemic issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X