நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க சீக்ரெட்.. முக்கிய புள்ளிகளுக்கு அடுத்தடுத்து கொரோனா.. வெள்ளை மாளிகையில் என்ன நடக்கிறது?

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அடுத்தடுத்த நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டதன் காரணத்தால் மொத்தமாக அங்கு அரசின் டாஸ்க் போர்ஸ் உறுப்பினர்கள் பலர் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அடுத்தடுத்த நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டதன் காரணத்தால் மொத்தமாக அங்கு அரசின் டாஸ்க் போர்ஸ் உறுப்பினர்கள் பலர் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.

Recommended Video

    கொரோனா பரிசோதனையை அதிகரித்த வெள்ளை மாளிகையில்

    உலகம் முழுக்க 180 நாடுகளை கொரோனா உலுக்கி வருகிறது. அதிலும் அமெரிக்காதான் இந்த கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது வரை கொரோனா காரணமாக 1,367,638 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    அங்கு மொத்தம் 80767 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். உலகிலேயே கொரோனா அதிக பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை கொண்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சிங்கப்பூரில் திடீர் திருப்பம்: ஒரே நாளில் கொரோனா பாதித்த 425 பேர் குணமடைந்தனர் சிங்கப்பூரில் திடீர் திருப்பம்: ஒரே நாளில் கொரோனா பாதித்த 425 பேர் குணமடைந்தனர்

    வெள்ளை மாளிகை கொரோனா

    வெள்ளை மாளிகை கொரோனா

    இந்த நிலையில் அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் வசிக்கும் வெள்ளை மாளிகையில் அடுத்தடுத்த நபர்களுக்கு கொரோனா வருவது அதிர்ச்சி அளிக்க தொடங்கி உள்ளது. இது அனைத்தும் அங்கிருக்கும் பாதுகாவலர் மூலம்தான் தொடங்கியது. அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்பின் பாதுகாப்பிற்கு ஸ்பெஷல் போர்ஸ் எனப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு படை இருக்கும். அதில்தான் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது.

    பாதுகாப்பு படை கொரோனா

    பாதுகாப்பு படை கொரோனா

    பாதுகாப்பு குழுவில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர், டிரம்பின் பர்சனல் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கடந்த வாரம் கொரோனா ஏற்பட்டது. ஆனால் இதில் சிக்கல் என்னெவென்றால் இவருக்கு எப்படி கொரோனா வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அல்லது இவருக்கு எப்படி கொரோனா வந்தது, யார் மூலம் கொரோனா வந்தது என்பதை சொல்லாமல் அமெரிக்கா அரசு மறைத்து வருகிறது.

    தீவிரமான சோதனை

    தீவிரமான சோதனை

    இதை தொடர்ந்து அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் தீவிரமாக கொரோனா சோதனை நடந்தது. அதில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. அதே போல் துணை அதிபர் மைக் பென்சுக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதனால் வெள்ளை மாளிகையில் கொஞ்சம் பதற்றம் தணிந்தது. ஆனால் அங்கு வார வாரம் எல்லோருக்கும் கொரோனா சோதனை செய்யப்படும் என்று கூறினார்கள்.

    அடுத்த நபருக்கு வந்தது

    அடுத்த நபருக்கு வந்தது

    இந்த நிலையில்தான் அங்கு அடுத்த நபருக்கு கொரோனா வந்தது. துணை அதிபர் மைக் பென்சுக்கு அங்கு இரண்டு செய்தி தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். அதில் பெண் செய்தி தொடர்பாளர் கெட்டி மில்லருக்கு தொடர்பாளருக்கு கொரோனா வந்தது. இவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி வெள்ளை மாளிகையில் இன்னொரு நபருக்கு கொரோனா வந்துள்ளது. முக்கிய அதிகாரி ஒருவருக்கு கொரோனா வந்துள்ளது என்கிறார்கள்.

    சீக்ரெட்

    சீக்ரெட்

    இவர்தான் அங்கு கொரோனா பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர். ஆனால் அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மையம் தொடங்கி யாரும் இந்த நபர் யார் என்ற உண்மையை வெளியிடவில்லை. இவரின் விவரங்களை அந்நாட்டு அரசு ஏனோ ரகசியமாக வைத்து இருக்கிறது. ஆனால் இவர் அந்நாட்டை சேர்ந்த கொரோனா டாஸ்க் போர்ஸ் அதிகாரிகள் உடன் தீவிரமாக பழகி இருக்கிறார். இதனால் அந்நாட்டு டாஸ்க் போர்ஸ் அதிகாரிகள் ஆண்டனி பவுச்சி, ராபர்ட் ரெட்பீல்ட் , ஸ்டிபன் ஹான் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    யாருக்கும் இல்லை

    யாருக்கும் இல்லை

    இவர்கள் மூவருக்கும் கொரோனா இல்லை. ஆனாலும் பாதுகாப்பு கருதி இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அதே சமயம் துணை அதிபர் மைக் பென்ஸ் தனிமைப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தனிமைப்படுத்தப்படவில்லை. இன்று அவர் வெள்ளை மாளிகை செல்கிறார். டாஸ்க் போர்ஸ் குழுவில் பல அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    English summary
    Coronavirus: So far Three persons got the infection the White House, CDC not revealing one person identity due to safety concerns.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X