நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலக அளவில் 7வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா.. 2 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் தற்போது இந்தியா உலகளவில் 9வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சென்றுள்ளது.

இந்தியாவில் நான்கு முறை ஊரடங்கு போடப்பட்ட தற்போது அதிக தளர்வுகளுடன் ஐந்தாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் ஊரடங்கு, கட்டுப்பாடுகள் இருந்தாலும் இன்னொரு பக்கம் இந்தியாவில் வேகமாக கொரோனா கேஸ்கள் பரவி வருகிறது.

Coronavirus: Total cases in India reaches 190536 , the country reaches 7th place

ஊரடங்கு இருந்தும் கூட இப்போதுதான் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. வரும் நாட்களில் கேஸ்கள் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் தற்போது இந்தியா உலகளவில் 9வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சென்றுள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பு 61 லட்சத்தை தாண்டியது.. பலி எண்ணிக்கை 3.70 லட்சமாகும்உலகளவில் கொரோனா பாதிப்பு 61 லட்சத்தை தாண்டியது.. பலி எண்ணிக்கை 3.70 லட்சமாகும்

பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளை இந்தியா முந்தி உள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின், யுகே, இத்தாலிக்கு அடுத்து இந்தியா ஆல்லாதது. அதன்படி இந்தியாவில் தற்போது 190536 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 93498 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். 91621 பேர் தற்போது குணப்படுத்தப்பட்டு உள்ளனர். 5406 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மகாராஷ்டிராவில் 67655 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 36040 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். 29329 பேர் தற்போது குணப்படுத்தப்பட்டு உள்ளனர். 2286 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 22333 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 9400 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். 12757 பேர் தற்போது குணப்படுத்தப்பட்டு உள்ளனர். 176 பேர் பலியாகி உள்ளனர்.

டெல்லியில் 19844 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 10893 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். 8478 பேர் தற்போது குணப்படுத்தப்பட்டு உள்ளனர். 473 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் 16794 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 5837 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். 9919 பேர் தற்போது குணப்படுத்தப்பட்டு உள்ளனர். 1038 பேர் பலியாகி உள்ளனர்.

ராஜஸ்தானில் 8831 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 2604 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். 6032 பேர் தற்போது குணப்படுத்தப்பட்டு உள்ளனர். 195 பேர் பலியாகி உள்ளனர்.

English summary
Coronavirus: Total cases in India reaches 190536 , the country reaches 7th place in twh world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X