நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க துணை அதிபருக்கு நெருக்கமானவருக்கு கொரோனா.. போர்க்கால சட்டத்தை கையில் எடுத்த டிரம்ப்.. பரபர!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அதிபர் டிரம்ப் போரின் போது பயன்படுத்தப்படும் மிக தீவிரமான ராணுவ உற்பத்தி சட்டத்தை நடைமுறை பயன்படுத்தி உள்ளார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அதிபர் டிரம்ப் போரின் போது பயன்படுத்தப்படும் மிக தீவிரமான ராணுவ உற்பத்தி சட்டத்தை நடைமுறை பயன்படுத்தி உள்ளார்.

சீனா, இத்தாலியை தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் நேற்று மட்டும் 5620 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியது.

அங்கு இதுவரை 19,429 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை 257 பேர் அங்கு இதனால் பலியாகி உள்ளனர். இதனால் அமெரிக்கா மொத்தமாக நடுங்க தொடங்கி உள்ளது.

எத்தனை இப்படி

எத்தனை இப்படி

மொத்தமாக கலிபோர்னியா, நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் என்று ஒரு மாகாணம் விடாமல் எல்லா மாகாணங்களிலும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்க அரசு இதை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அங்கு தற்போது வெள்ளை மாளிகையில் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. துணை அதிபர் மைக் பென்சிற்கு நெருக்கமானவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

யார் இவர்

யார் இவர்

துணை அதிபர் மைக் பென்சின் செய்தி தொடார்பாளர் கேட்டி மில்லருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இவர் மைக் பென்சிற்கு மிகவும் நெருக்கமான நபர் ஆவர். இவருக்கே வைரஸ் தாக்கியது அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இவர் அதிபர் டிரம்பையோ துணை அதிபர் மைக் பென்ஸையோ கடந்த சில நாட்களாக சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன சட்டம்

என்ன சட்டம்

இந்த நிலையில் அமெரிக்காவில் தற்போது போரின் போது பயன்படுத்தப்படும் மிக தீவிரமான ராணுவ உற்பத்தி சட்டத்தை அந்நாட்டு அதிபர் டிரம்ப் நடைமுறைப்படுத்தி உள்ளார். போரின் போது மட்டுமே இதுபோன்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த சட்டத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட சில அவசரகால பொருட்களை உற்பத்தி செய்ய அதிபர் டிரம்ப் உத்தரவிட முடியும்.

என்ன அனுமதி

என்ன அனுமதி

1950ம் ஆண்டை சேர்ந்த இந்த சட்டம் மூலம் அதிபர் யாருடைய அனுமதியும் இன்று குறிப்பிட்ட சில அவசரகால பொருட்களை உற்பத்தி செய்ய பணம் ஒதுக்க முடியும். நாடாளுமன்ற அனுமதி இதற்காக கூடுதல் பட்ஜெட் ஒதுக்க முடியும். அதேபோல் தனியார் நிறுவனங்களை கையகப்படுத்த முடியும். அரசு நிறுவனங்களின் பணி நேரம் , உற்பத்தி திட்டங்களை மாற்ற முடியும்.

சட்டம்

சட்டம்

போரின் போது ஆயுதங்கள் தயாரிக்க இந்த சட்டம் பயன்படுத்தப்படும். இந்த சட்டத்தை தற்போது டிரம்ப் நடைமுறைப்படுத்தி உள்ளார். மாஸ்க் மற்றும் கை கழுவும் கிருமி நாசினிகளை அதிக அளவில் உருவாக்கும் பொருட்டு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தீவிரம் அடைந்து வருவது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

English summary
Coronavirus: President Trump brings Defense Production act amidst COVID-19 spread.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X