நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெள்ளை மாளிகை பாதுகாவலருக்கு கொரோனா.. வேகமாக டிரம்பிற்கு நடந்த சோதனை.. "நெகட்டிவ்" ரிசல்ட்!

நேற்று அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நடந்த கொரோனா சோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: நேற்று அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நடந்த கொரோனா சோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    டிரம்ப் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு

    கொரோனா காரணமாக உலகில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளது. அமெரிக்காவில் மொத்தம் கொரோனா காரணமாக 1,292,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 76928 பேர் பலியாகி உள்ளனர்.

    அதிகமாக் நியூயார்க்கில் மட்டும் 337,421 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். அங்கு இதுவரை 26365 பேர் பலியாகி உள்ளனர்.

    துரத்தி அடித்துவிட்டோம்.. அமெரிக்க போர் கப்பலை விரட்ட ஜெட்களை அனுப்பிய சீனா.. போருக்கு தயார் ஆகிறதா?துரத்தி அடித்துவிட்டோம்.. அமெரிக்க போர் கப்பலை விரட்ட ஜெட்களை அனுப்பிய சீனா.. போருக்கு தயார் ஆகிறதா?

    வெள்ளை மாளிகை எப்படி

    வெள்ளை மாளிகை எப்படி

    இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் பாதுகாவலர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் வெள்ளை மாளிகையில் இருக்கும் ஸ்பெஷல் போர்ஸ் பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர். அமெரிக்க அதிபர் டிரம்பின் பாதுகாப்பை உறுதி செய்யும் நபர்களில் ஒருவர். வெள்ளை மாளிகையில் வெஸ்ட்விங் பகுதியில் இவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    என்ன விவரம்

    என்ன விவரம்

    இவர் குறித்த முழு விவரம் வெளியாகவில்லை. அதே சமயம் இவர் டிரம்பின் தனி பாதுகாவலர்களில் ஒருவர் என்றும் கூறுகிறார்கள். இவருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. இவருக்கு கொரோனா வந்தது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இவருக்கு தற்போது காண்டாக்ட் டிரேஸ் செய்ய முடியாததால் வெள்ளை மாளிகையில் வேறு யாருக்காவது கொரோனா இருக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

     கொரோனா இல்லை

    கொரோனா இல்லை

    இந்த நிலையில்தான் நேற்று அவசர அவசரமாக அதிபர் டிரம்பிற்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த சோதனையின் முடிவில் அதிபர் டிரம்பிற்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல் துணை அதிபர் மைக் பென்சுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அவருக்கும் கொரோனா இல்லை என்று இதில் உறுதி செய்யப்பட்டது.

    வெள்ளை மாளிகை பணிகள்

    வெள்ளை மாளிகை பணிகள்

    மற்ற வெள்ளை மாளிகை நிர்வாகிகளுக்கு கொரோனா சோதனை நடந்து வருகிறது. பொதுவாக வெள்ளை மாளிகை வர கூடிய எல்லோரையும் மொத்தமாக சோதனை செய்துதான் அனுப்புவார்கள். ஆனால் அதையும் மீறி நேற்று ஒருவருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று பொதுவாக வெள்ளை மாளிகையில் கிருமி நாசினி தெளிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Coronavirus: US President Trump tested negative after security in the white house gets infection yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X