நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியா என்ன செய்யும்? சந்தேகமாக இருக்கிறது.. கொரோனாவால் அச்சத்தில் அமெரிக்க உளவுத்துறை!

உலகம் முழுக்க வேகமாக பரவி வரும் கொரோனாவை இந்தியா எப்படி கட்டுப்படுத்தும் என்று அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் அச்சம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகம் முழுக்க வேகமாக பரவி வரும் கொரோனாவை இந்தியா எப்படி கட்டுப்படுத்தும் என்று அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் அச்சம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 2778 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் என்பது ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு மட்டுமின்றி, ஒரு பொருளில் இருந்தும் கூட இன்னொரு பொருளுக்கு பரவும். அதாவது இந்த வைரஸ் தாக்கிய நபர் எதை தொடுகிறாரோ, அதை தொடும் மக்களுக்கு உடனே வைரஸ் பரவ வாய்ப்புள்ளது.

மொத்தம் 78824 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த வைரஸ் தோன்றி மூன்று மாதம் ஆகியும் இதன் வேகம் குறையவில்லை.

கொரோனா அச்சம்.. 1,083 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 312 புள்ளிகள் சரிந்த நிஃப்டி!கொரோனா அச்சம்.. 1,083 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 312 புள்ளிகள் சரிந்த நிஃப்டி!

இந்தியா எப்படி

இந்தியா எப்படி

இந்த நிலையில் இந்தியாவில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. கேரளாவை சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. இவர்கள் மூவருக்கும் இந்த வைரஸ் குணமாக்கப்பட்டு தற்போது வீடு திரும்பி இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பல்வேறு உளவுத்துறை அமைப்புகள் இந்த அச்சத்தை எழுப்பியுள்ளது.

அதிகமான மக்கள்

அதிகமான மக்கள்

இந்தியாவில் இருக்கும் அதிகமான மக்கள் தொகை இதற்கு ஒரு காரணம். அதேபோல் சீனாவிற்கு மிக அருகில் இந்தியா இருக்கிறது. சீனாவில் இருந்து பலர் கடந்த சில மாதங்களில் இந்தியாவிற்கு பயணித்து இருக்கிறார்கள். இதனால் இந்தியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளது என்று அமெரிக்க உளவுத்துறை கருதுகிறது. ஆனால் இந்தியா இதற்கு எதிராக என்ன செய்யும் என்றும் உளவுத்துறை அச்சம் தெரிவித்துள்ளது.

சீனா எப்படி

சீனா எப்படி

சீனா போன்ற நவீன வசதிகள் கொண்ட நாடுகளே கொரோனாவிடம் கஷ்டப்படுகிறது. அதனால் இந்தியா இதை எப்படி எதிர்கொள்ளும் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது. இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது . இந்தியர்கள் அதிகம் இருக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி உள்ளது. இந்தியாவிற்கு அருகில் இருக்கும் பாகிஸ்தானில் 3 பேருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது.

பாகிஸ்தான் வைரஸ்

பாகிஸ்தான் வைரஸ்

பாகிஸ்தானில் வைரஸ் பரவி இருப்பதால் வட இந்தியாவிற்கும் விரைவில் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதை இந்தியா எப்படி கட்டுப்படுத்தும் என்பதுதான் அமெரிக்க உளவுத்துறையின் முக்கிய கவலையாக உள்ளது. ஆனால் அமெரிக்க உளவுத்துறை இந்தியா மீது மட்டும் கவலை கொள்ளவில்லை. உலகில் இருக்கும் மற்ற வளரும் நாடுகளும் இதை எப்படி எதிர்கொள்ளும் என்ற சந்தேகத்தில் உள்ளது.

உலக நாடுகள்

உலக நாடுகள்

இதற்காக உலக நாடுகளில் தங்களின் உளவு அதிகாரிகளை, அமெரிக்கா அனுப்பி உள்ளது. அந்த நாடுகள் எப்படி கொரோனவை எதிர்கொள்கிறது. இது தொடர்பாக எதையாவது மறைக்கிறதா என்று இவர்கள் தகவல் அளித்து வருகிறார்கள். கொரோனா அமெரிக்காவிற்கு பரவாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

English summary
Coronavirus: US spy agencies concerns about Improving cocuntries and India's ability to face COIVD- 19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X