நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

77 மருந்துகள்.. உலகின் அதி வேகமான கணினி உருவாக்கிய கெமிக்கல்.. கொரோனா ஆராய்ச்சியில் திருப்பம்!

அமெரிக்காவின் சம்மிட் சூப்பர் கணினி மூலம் கொரோனாவிற்கு எளிதாக மருந்து கண்டுபிடிக்க முடியும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் சம்மிட் சூப்பர் கணினி மூலம் கொரோனாவிற்கு எளிதாக மருந்து கண்டுபிடிக்க முடியும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. தற்போது கொரோனா வைரஸை குணப்படுத்துவதற்கான 77 வேதி பொருட்களை இந்த கணினி கண்டுபிடித்து இருக்கிறது.

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று உலகம் முழுக்க பல நாடுகள் கடுமையாக முயன்று வருகிறது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகள் தீவிரமாக முயன்று வருகிறது.

இதில் அமெரிக்கா ஏறத்தாழ வெற்றி கண்டுவிட்டது. தாங்கள் கண்டுபிடித்த மருந்தை அமெரிக்கா சோதனை செய்து, முடிவிற்காக காத்து இருக்கிறது. அதேபோல் ஜெர்மனியையே சேர்ந்த க்யூர்வேக் என்ற நிறுவனமும் இதற்காக மருந்து கண்டுபிடிக்க தீவிரமாக முயன்று வருகிறது.

அமெரிக்கா

அமெரிக்கா

இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த சம்மிட் சூப்பர் கணினி கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் நிலையில் உள்ளது. இதை பற்றி தெரிந்து கொள்ளும் முன், சம்மிட் சூப்பர் கணினி குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவை சேர்ந்த இந்த சம்மிட் சூப்பர் கணினி ஐபிஎம் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இதுதான் தற்போது உலகில் இருப்பதிலேயே மிகவும் வேகமான கணினி ஆகும்.

என்ன பயன்பாடு

என்ன பயன்பாடு

இந்த கணினி கடந்த 2018ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது. துப்பாக்கி புல்லட்டை விட இந்த கணினி வேகமாக செயல்படும். ஒரே நொடியில் இந்த கணினி 2,00,000 டிரில்லியன் கணக்குகளை சோதனைகளை செய்ய முடியும். இந்த மொத்த கணக்குகளை ஒரு மனிதர் தனியாக செய்ய வேண்டும் என்றால் 6.3 பில்லியன் ஆண்டுகள் எடுக்கும். உலகில் இதைவிட வேகமான எந்திரம், கணினி அதன்பின் கண்டுபிடிக்கப்படவில்லை.

அடுத்து என்ன

அடுத்து என்ன

இந்த நிலையில்தான் இந்த சம்மிட் சூப்பர் கணினி கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க உள்ளது. அதன்படி உலகில் இருக்கும் எல்லா கெமிக்கல்களையும் இந்த சம்மிட் சூப்பர் கணினி சோதனை செய்து வருகிறது. அனைத்து வேதி பொருட்களையும் இந்த சம்மிட் சூப்பர் கணினி சோதனை செய்து, அதை ஒன்றுடன் ஒன்று சேர்த்து மருந்துகளை உருவாக்கி பார்க்கும். இதை வைத்து பல மில்லியன் வேதிப்பொருட்களை உருவாக்கும்.

அதன்பின் என்ன

அதன்பின் என்ன

அதன்பின் இந்த வேதிப்பொருட்களின் எது கொரோனா வைரஸை குணப்படுத்தும் என்று சோதனை செய்யும். எல்லா வேதிப்பொருள் கலவையையும் வைத்து எது வைரசை குணப்படுத்தும் என்று இந்த சம்மிட் சூப்பர் கணினி சோதனை செய்யும். தற்போது இதன் மூலம் மொத்தம் 77 வேதிப்பொருள் கலவைகளை இந்த சம்மிட் சூப்பர் கணினி கண்டுபிடித்துள்ளது. இதை பயன்படுத்தினால் இந்த வைரஸை குணப்படுத்த வாய்ப்புள்ளது என்று இதன் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

அடுத்து என்ன செய்வார்கள்

அடுத்து என்ன செய்வார்கள்

இந்த மருந்தை தற்போது உண்மையில் உருவாக்கி சோதனை செய்ய உள்ளனர். இந்த கணினி ஏஐ மூளை மூலம் செயல்படுகிறது. மொத்தம் 8000 ஆயிரம் வேதிப்பொருட்களை சேர்த்து இந்த புதிய 77 வைரஸ்களை உருவாக்கி இருக்கிறார்கள். இதை விரைவில் நிஜத்தில் சோதனை செய்து அதன்பின் மனிதர்களிடம் சோதனை செய்து பார்க்க வழி உள்ளது என்று கூறுகிறார்கள்.

English summary
Coronavirus: USA 's supercomputer Summit finds 77 chemicals for a cure against the epidemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X