நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கை.. 2 டிரில்லியன் டாலர் நிதியை ஒதுக்கிய அமெரிக்க அரசு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்காவின் செனட் சபை 2 டிரில்லியன் டாலர் நிதியை ஒதுக்கி உள்ளது.

Recommended Video

    கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்? அதிர்ச்சி ரிப்போர்ட்

    அமெரிக்காவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தற்போது அமெரிக்கா மூன்றாம் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 68,581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    Coronavirus: USA senate nods for 2 trillion dollars for the relief Coronavirus: USA senate nods for 2 trillion dollars for the relief

    அங்கு இதுவரை 1,036 பேர் பலியாகி உள்ளனர். இன்று மட்டும் 9 பேர் பலியாகி உள்ளனர். அங்கு கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் அமெரிக்க அரசு திணறி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் அங்கு வெறும் 80 பேர்தான் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

    ஆனால் திடீர் என்று அங்கு கொரோனா விஸ்வரூம் எடுத்துள்ளது. மார்ச் மாதம் முடிவதற்குள் தற்போது அங்கு 60 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் இன்று கொரோனாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்காவின் அரசு 2 டிரில்லியன் டாலர் நிதியை ஒதுக்கி உள்ளது. இதற்கான மசோதாவை இன்றுதான் செனட் சபை ஒதுக்கியது.

    இதன் மூலமா அமெரிக்க வாழ் மக்களில் பலருக்கு நேரடியாக அவர்களின் கணக்கிற்கு தலா 1200 டாலர் அனுப்பப்படும். இந்திய மதிப்பில் இது 90 ஆயிரம் ரூபாய் ஆகும். அதேபோல் தொழிற்சாலைகளுக்கு 500 பில்லியன் டாலர் நிதியும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

    கொரோனா காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரம் மிக மோசமான சரிவை சந்தித்து வருகிறது. இந்த மாத இறுதியில் அங்கு 1 மில்லியன் மக்கள் கலிபோர்னியாவில் மட்டும் வேலையை இழப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதற்காக அங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சிறிய தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க 367 பில்லியன் டாலர் அளிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் 100 பில்லியன் டாலர் மருத்துவமனை உள்ளிட்ட பொது சுகாதார தேவைக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 150 பில்லியன் டாலர் அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 300 பில்லியன் டாலர் நேரடியாக பல அமெரிக்க மக்களுக்கு அளிக்கப்படும். 1200 டாலர் வரை பெரியவர்களுக்கும், 500 டாலர் வரை சிறியவர்களுக்கு அளிக்கப்படும்.

    3 வாரத்தில் இந்த நிதி அளிக்கப்படும். 250 டாலர் வேலைவாய்ப்பு திட்டங்களுக்கும், 600 டாலர் தனிப்பட்ட பணியாளர்கள் மற்றும் கான்ட்ராக்டர்களுக்கு வழங்கப்படும்.

    English summary
    Coronavirus: USA senate nods for 2 trillion dollars for the relief fund.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X