நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த மருந்தை எங்களிடம் கொடுங்கள்.. ஜெர்மனியிடம் பேரம் பேசினாரா டிரம்ப்?.. கொரோனா யுத்தம் தொடங்கியது!

கொரோனா தொடர்பாக ஜெர்மன் தனியார் நிறுவனம் ஒன்று உருவாக்கி உள்ள மருந்தை அமெரிக்கா மொத்தமாக வாங்க போவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா தொடர்பாக ஜெர்மன் தனியார் நிறுவனம் ஒன்று உருவாக்கி உள்ள மருந்தை அமெரிக்கா மொத்தமாக வாங்க போவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. ஜெர்மனி முழுக்க இதனால் பெரிய அளவில் பரபரப்பு எழுந்துள்ளது.

Recommended Video

    தமிழகத்தில் 2 பேருக்கு கொரானா? | வந்து விட்டது கொரானா தடுப்பூசி

    கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்தவோ அல்லது முன்னெச்சரிக்கையாகவே இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

    கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் மிக தீவிரமாக போட்டியிட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் இதற்காக தீவிரமாக உழைத்து வருகிறார்கள்.

    அமெரிக்கா எப்படி

    அமெரிக்கா எப்படி

    இந்த நிலையில் இந்த வைரசுக்கு எதிராக அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம், மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இதை இன்று சோதனை செய்ய இருக்கிறார்கள். இன்றில் இருந்து இதை வைத்து பல்வேறு சோதனைகள் செய்வார்கள். பல்வேறு வயதை சேர்ந்த மக்களிடம் இந்த மருந்தை சோதனை செய்வார்கள். இந்த மருந்து கொரோனாவை எப்படி கட்டுப்படுத்தும், பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று சோதனைகள் செய்ய உள்ளனர்.

    ஆனால் சிக்கல்

    ஆனால் சிக்கல்

    ஆனால் இன்னும் ஒரு வருடம் அல்லது 18 மாதங்கள் இதை சோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் இதை மக்களிடம் பயன்படுத்த முடியும். இப்போதைக்கு இந்த மருந்து சந்தைக்கு வராது. எனவே உடனே கொரோனாவிற்கு எதிராக அவசரமாக மருந்து கண்டுபிடிக்க அமெரிக்கா யோசித்து வருகிறது. இதனால்தான் தற்போது ஜெர்மன் நிறுவனம் ஒன்றை வளைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என்கிறார்கள்.

    ஜெர்மன் எப்படி

    ஜெர்மன் எப்படி

    அமெரிக்காவில் இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் நடக்கும் நிலையில் ஜெர்மனியில் இன்னொரு பக்கம் Curevac என்ற தனியார் நிறுவனம், இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே மருந்து கண்டுபிடித்துவிட்டது. ஆம் ஒரு மாதத்திற்கு முன்பே இந்த வைரசுக்கு எதிராக அந்த நிறுவனம் மருந்து கண்டுபிடித்துள்ளது. க்யூர்வேக் நிறுவனம் தற்போது இந்த மருந்தை சோதனை செய்து வருகிறது. இந்த மருந்து பெரும்பாலும் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என்கிறார்கள். அதாவது அமெரிக்காவிற்கு முன்பாக க்யூர்வேக் தனது மருந்தை சந்தைக்கு கொண்டு வரும்.

    சந்தைக்கு வரும்

    சந்தைக்கு வரும்

    இதுதான் தற்போது அமெரிக்காவை அச்சப்படுத்தி உள்ளது. தங்களுக்கு முன் ஜெர்மன் நிறுவனம் ஒன்று மருந்தை சந்தைக்கு கொண்டு வந்தால் அது தங்களுக்கு பெரிய பிரச்சனை ஆகும். ஜெர்மன் இதனால் பெரிய அளவில் வளரும், ஜெர்மன் நாடு புதிய சக்தியாக உருவெடுக்கும் என்று அமெரிக்கா அச்சப்படுகிறது. இதுதான் இந்த மருந்து தொடர்பான சண்டைக்கு காரணம் ஆகும். அதன்படி க்யூர்வேக் நிறுவனத்திடம் இருந்து மருந்தை வாங்க அமெரிக்கா முயன்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

    எம்பிக்கள் எப்படி

    எம்பிக்கள் எப்படி

    க்யூர்வேக் நிறுவனத்திற்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் பல கோடிகளை கொடுப்பதாக கூறினார். இந்த மருந்தை கொடுங்கள் பல கோடி கொடுக்கிறோம். எங்களிடம் இதற்கான உரிமையை கொடுங்கள் என்று பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜெர்மன் எம்பிக்கள், அந்நாட்டு செய்தித்தாள்கள் இந்த புகாரை வைத்துள்ளனர். இந்த வைரஸ் மருந்தை வைத்து உலக நாடுகளை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி எடுப்பதாக ஜெர்மன் குற்றஞ்சாட்டி உள்ளது.

    சண்டை பெரிதாகியது

    சண்டை பெரிதாகியது

    இவர்கள் பேரம் பேசியதற்கான ஆதாரங்கள் இணையத்தில் நிறைய வெளியாகி உள்ளது. ஜெர்மன் அமெரிக்கா இடையே இதனால் சண்டை பெரிதாகி உள்ளது. ஏற்கனவே இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க ரஷ்யா முயன்று வருகிறது . தற்போது ஜெர்மன் அமெரிக்கா இடையே வந்துள்ள சண்டை இன்னும் விஸ்வரூபம் எடுக்கலாம் என்கிறார்கள். கொரோனா காரணமாக உலக அளவில் பெரிய அரசியல் திருப்பங்கள் நடக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Coronavirus: Vaccine fight starts between the USA and Germany so soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X