நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முக்கிய கட்டத்தை எட்டியது கொரோனா தடுப்பூசி.. மனித உடல் சோதனையில் சிறந்த பலன்

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனாவை விரட்டும் முயற்சியில் உலக நாடுகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. அமெரிக்காவின் பைசர் மற்றும் ஐரோப்பாவின் பயோ என்டெக் ஆகியவை இணைந்து தயாரித்த தடுப்பூசியை மனிதர்களுக்கு பரிசோதித்து பார்த்ததில் சிறந்த பலன்களை கொடுத்துள்ளது.

கோடிக்கணக்கான மக்களை பாதிதத் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் இரவு பகலாக போராடி வருகின்றன.

கொரோனா தொற்றால் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் பொருளாதார ரீதியாகவும் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சம்.. ஒரே நாளில் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சம்.. ஒரே நாளில் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா

 மருந்து இல்லை

மருந்து இல்லை

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே உலகம் பழையபடிஇயல்பு நிலைக்கு வரும் என்ற நிலை உள்ளது. பல கோடி மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். உலகின் பல்வேறு பணக்கார நாடுகளும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன.

 கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

இந்நிலையில் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கின்றன. அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஐரோப்பாவின் உயிரி தொழில்நுட்ப நிறுவனமான பயோஎன்டெக் ஆகியவையும் இணைந்து கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இறங்கின.

 நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

அந்த நிறுவனங்கள் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பல்வேறு சோதனைகளுக்கு பிறகு மனித உடலில் செலுத்தி ஆய்வு செய்யப்பட்டது. ஆரோக்கியமான உடல் நிலை கொண்ட 18 வயது முதல் 35 வயது வரையிலான 45 பேருக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் இல்லை. பாதுகாப்பானது என்பதும். மனிதர்களின் உடல் ஏற்றுக்கொள்கிறது என்பதும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Remdesivir மருந்தை மொத்தமாக வாங்கி குவிக்கும் Trump... அதிர்ச்சியில் உலக நாடுகள்
     கொரோனா காலியாகும்

    கொரோனா காலியாகும்

    இந்த கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகின்றன. கொரோனா நோயால் பாதித்து குணமானவர்களைவிட, இந்த தடுப்பூசி போட்டவர்களின் உடலில் ஆன்டிபாடிகள் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதன் மூலம் கொரோனாவை காலி செய்யும் அமெரிக்காவின் இந்த தடுப்பூசி முக்கிய கட்டத்தை அடைந்திருப்பதாக கருதப்படுகிறது.

    English summary
    coronavirus vaccine latest update news : BioNTech and Pfizer’s Covid-19 vaccine trial yields positive results
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X