நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்களுக்கு அந்த மருந்து தேவை.. ஹைட்ராக்சிகுளோரோகுய்னுக்கு குறி வைத்த டிரம்ப்.. மோடியிடம் கோரிக்கை

இந்தியா மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வரும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும்படி கோரிக்கை வைத்துள்ளார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்தியா மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வரும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும்படி கோரிக்கை வைத்துள்ளார். கொரோனாவிற்கு எதிராக இதை பயன்படுத்த அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

Recommended Video

    Trump asks Anti-Malarial drug hydroxychloroquine to Modi.

    கொரோனா காரணமாக உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்காதான். உலகம் முழுக்க கொரோனா காரணமாக 1,201,473 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 311,357 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    அங்கு 8452 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாட்டு தலைவர்களிடம் ஆலோசனை செய்துவருகிறார். நேற்று இந்திய பிரதமர் மோடி உடன், தொலைபேசியில் ஆலோசனை செய்தார்.

    கொரோனா விழிப்புணர்வு.. இன்று இரவு 9 மணிக்கு.. 9 நிமிடம் விளக்குகளை அணைக்க பிரதமர் மோடி அழைப்பு! கொரோனா விழிப்புணர்வு.. இன்று இரவு 9 மணிக்கு.. 9 நிமிடம் விளக்குகளை அணைக்க பிரதமர் மோடி அழைப்பு!

    டிரம்ப் பேட்டி

    டிரம்ப் பேட்டி

    இந்த நிலையில் அதிபர் டிரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். பிரதமர் மோடி உடன் அவர் தொலைபேசியில் பேசியது குறித்து அவர் செய்தியாளர்களிடம் விளக்கினார். அதில், இந்திய பிரதமர் மோடி உடன் நான் இன்று தொலைபேசியில் பேசினேன். கொரோனாவிற்கு எதிராக இணைந்து போரிட நாங்கள் முடிவு செய்துள்ளோம். இரண்டு நாடுகளும் பரஸ்பரம் உதவிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். நாங்கள் இணைந்து போராடுவோம்.

    டிரம்ப் கோரிக்கை

    டிரம்ப் கோரிக்கை

    இந்தியாவில் மலேரியாவை கட்டுப்படுத்தும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து அதிகம் உள்ளது. அவர்கள்தான் உலகில் மிக அதிகமாக ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை உற்பத்தி செய்வது. அவர்களிடம் 1.5 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அதிகம் உற்பத்தி செய்து கூறியுள்ளோம். ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய சொல்லி இருக்கிறேன்.

    ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து

    ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து

    நாங்கள் ஆர்டர் செய்த மருந்துகளை எங்களுக்கு இந்தியா அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். இந்திய அரசு இதை தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மத்திய சுகாதாரத்துறை ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை கொரோனாவிற்கு பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளது. ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் என்பது மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் மருந்து ஆகும்.

    மலேரியாவிற்கு சிகிச்சை

    மலேரியாவிற்கு சிகிச்சை

    இதற்கு முன் எபோலாவிற்கு எதிராக ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் பயன்படுத்தப்பட்டது. கொரோனாவை ஓரளவு கட்டுப்படுத்த வேண்டும் என்றால், இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் இதை அதிகம் பயன்படுத்தினால் அது உயிருக்கே கூட பாதிப்பு ஏற்படுத்தும். சில நாடுகளில் இந்த மருந்துகளை பயன்படுத்த அதிக அளவில் கட்டுப்பாடுகள் உள்ளது.

    English summary
    Coronavirus: We need Anti-Malarial drug hydroxychloroquine a lot asks President Trump to Indian PM Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X