நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தவறு செய்து விட்டீர்கள்.. உங்களுக்கான நிதியை நிறுத்த போகிறேன்.. உலக சுகாதார மையத்திற்கு டிரம்ப் செக்

உலக சுகாதார மையத்திற்கு வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்த போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலக சுகாதார மையத்திற்கு வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்த போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கொரோனா வைரஸின் வீக் பாயிண்டை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

    உலகம் முழுக்க கொரோனா பரவி வரும் வேளையில், கொரோனாவை தடுக்கும் பணியில் உலக சுகாதார மையம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்தியா தொடங்கி உலகம் முழுக்க இருக்கும் பல நாடுகளுக்கு நிதி உதவி அளிக்க உலக சுகாதார மையம் முடிவு எடுத்துள்ளது.

    எல்லா வருடமும் உலக சுகாதார மையத்தின் பட்ஜெட் 5 பில்லியன் டாலர் ஆகும். இதற்கு உலகம் முழுக்க பல நாடுகள் நிதி உதவி அளிக்கும். அமெரிக்கா கடந்த வருடம் 111 மில்லியன் டாலர் அளித்தது. அதன்பின் தாமாக முன் வந்து 401 மில்லியன் டாலர் அளித்தது. உலக சுகாதார மையத்திற்கு அதிக நிதி அளித்து வரும் நாடாக அமெரிக்கா உள்ளது.

    80 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. உலகம் முழுக்க 14 லட்சம் பேர் பாதிப்பு.. கொரோனா தீவிரம் அடைகிறது!80 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. உலகம் முழுக்க 14 லட்சம் பேர் பாதிப்பு.. கொரோனா தீவிரம் அடைகிறது!

    டிரம்ப் கொடுத்த பேட்டி

    டிரம்ப் கொடுத்த பேட்டி

    இந்த நிலையில் திடீரென்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தனது செய்தியாளர் சந்திப்பில், உலக சுகாதார மையத்திற்கு எதிராக பேசினார். அவர் தனது பேட்டியில், உலக சுகாதாரம் மையம் எங்களிடம் இருந்து அதிக அளவில் நிதிகளை பெறுகிறது. ஆனால் அவர்கள் சீனாவிற்கு ஆதரவாகவே அதிகமாக செயல்படுகிறார்கள். சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு போக்குவரத்தை தடை செய்த போது உலக சுகாதார மையம் எங்களை எச்சரித்தது. இது போன்ற தடைகள் பயன் அளிக்காது என்று என்னுடைய முடிவை விமர்சனம் செய்தது.

    எங்கள் முடிவு சரி

    எங்கள் முடிவு சரி

    ஆனால் அதன்பின்தான் என்னுடைய முடிவு சரி என்று அவர்களுக்கு தெரிந்தது. உலக சுகாதார மையம் பல தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. பல தவறான விஷயங்களை பேசி வருகிறது. அவர்கள் சீனாவை ஆதரிக்கிறார்கள். நாங்கள் உலக சுகாதார மையத்திற்கு கொடுக்கும் நிதியை நிறுத்தி வைக்க முடிவு செய்து இருக்கிறோம்.

    கடுமையான நடவடிக்கை

    கடுமையான நடவடிக்கை

    மிக கடுமையான நடவடிக்கையை நாங்கள் எடுக்க போகிறோம். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். கொரோனாவை எதிர்கொள்ள உலக சுகாதார மையம் பெரிய அளவில் பணிகளை செய்யவில்லை. அவர்கள் தவறு செய்துவிட்டார்கள். தவறான முடிவை எடுத்துவிட்டார்கள். அவர்கள் நல்ல வாய்ப்புகளை நழுவவிட்டுவிட்டார்கள்.

    எச்சரிக்கவில்லை

    எச்சரிக்கவில்லை

    சீனாவில் கொரோனா தோன்றிய போதே அவர்கள் உலகை எச்சரித்து இருக்க வேண்டும். அவர்கள் அதை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் ஏன் அப்படி அசட்டையாக இருந்தார்கள். கொரோனா பரவுவது தெரிந்த பின்பும் கூட அதை பற்றி அவர்கள் உலகிற்கு எச்சரிக்கை விடுக்கவில்லை, என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக சுகாதார மையத்திற்கு எதிரான அவரின் இந்த பேச்சு பெரிய வைரல் ஆகியுள்ளது.

    English summary
    Coronavirus: We're going to put a hold on money spent to WHO says US Pres Donald Trump.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X